For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்றதையும் செய்துவிட்டு.. சீனாவில் இன்று தேசிய துக்கம்.. மரணித்த மக்களுக்கு அஞ்சலி.. தேசமே நிசப்தம்

சீனாவில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், இன்று தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

Recommended Video

    சீன மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திரமான உணவுகள்

    உலகம் முழுதும், கொரோனா வைரஸ் பரவல் கிடுகிடு வேகமெடுத்து வருகிறது. இந்த அசுரனால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை, 10 லட்சத்தையும் தாண்டி செல்கிறது.. பலி எண்ணிக்கையோ 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

    இதை பார்த்து உலக மக்களே பீதியிலும் நடுக்கத்திலும் உள்ளனர். முதன் முதலில் இந்த வைரஸ் பரவ தொடங்கியது சீனாவில்தான்.

    தொற்று

    தொற்று

    இங்குதான் கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்த தொற்று கண்டறியப்பட்டது.. ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தான் அறிகுறி தென்பட்டது.. இதன்பிறகுதான் அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட ஆரம்பித்தன.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    இந்த தொற்று காரணமாக, 81 ஆயிரத்து, 620 பேர்,பாதிக்கப்பட்டனர்... அதில், 3,322 பேர் உயிரிழந்துள்ளனர்... 76 ஆயிரத்து, 571 பேர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். அதில், 1,727 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... அறிகுறிகள் இன்றி, 1,027 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.. அவர்களும் கண்காணிப்பில் தொடர்ந்து உள்ளன. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 22 பேரும் அடக்கம்!

    கடுப்பில் உலக நாடுகள்

    கடுப்பில் உலக நாடுகள்

    சீனாவை இப்போது எல்லோருமே விமர்சித்து வருகின்றனர்.. இவர்களால்தான் தங்களும் வைரஸ் பரவிவிட்டதாக கடுப்பில் உள்ளனர்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துவிட்டோம் என்று சீனா சொல்லி வருகிறது.. ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானிலும் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது குறைந்துவிட்டதாக சீனா சொல்லி வருகிறது.. ஊரடங்கும் கொஞ்சம் தளர்த்தப்பட்டு வருகிறது... பெரும்பாலான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டன.. கடைத்தெருவில் பாம்பு, நாய் மற்றும் பூனை இறைச்சி விற்பனை ஆரம்பமானது.. இதற்கான சலுகையும் வழங்கப்பட்டது!

    தேசிய கொடிகள்

    தேசிய கொடிகள்

    இந்நிலையில், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், சீனாவில், இன்று தேசிய துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது... நாடு முழுதும் உள்ள தேசிய கொடிகள், அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.. பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாட்டு மக்கள், காலை காலை, 10:00 மணிக்கு, மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அஞ்சலி

    அஞ்சலி

    நாட்டு மக்கள், இன்று காலை, 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்... போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று இந்த துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது!

    திருந்தவே இல்லை

    திருந்தவே இல்லை

    ஆனால் துக்க தினம் கடைப்பிடிப்பு என்ற சீனா அறிவித்ததை யாரும் ரசிக்கவில்லை.. செய்றதையும் செய்துவிட்டு துக்கமும் அனுசரிப்பா என்று இதற்கு கருத்துக்களும் பலமாகவே எழுந்து வருகின்றன... அங்குள்ள சந்தைகளில் பயந்துபோன நாய்களும் பூனைகளும் துருப்பிடித்த கூண்டுகளில் உள்ளன... மருந்தாக விற்பனைக்கு வழங்கப்படும் வவ்வால்களும், தேள், முயல்கள் வாத்துகளும்கூட தெருசந்தைகளில் காணப்பட்டன... இவ்வளவு பட்டும் சீனா திருந்தவில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது.. ஆனால் ஒன்றுமே அறியாமல் தெருக்களிலும், சந்தைகளிலும் சுருண்டு விழுந்த அந்த சீன மனிதர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    English summary
    coronavirus: china to observe today as mourning day for coronavirus victims
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X