ம்.. சீக்கிரம்.. பொருட்களை வாங்கிக்குங்க.. லாக்டவுன் போட போகிறோம்.. மக்களை அலர்ட் செய்த சீனா
பெய்ஜிங்: நாளுக்கு நாள் பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்த முழு லாக்டவுன் அமல்படுத்த சீனா அரசு யோசித்து வருகிறது.. அதற்காக அத்தியாவசிய பொருட்களை இப்போதே வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்று அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
சீனாவின் வூகான் நகரில்தான் கடந்த 2019-ல் கொரோனாவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.. அது பின்னர் மற்ற நாடுகளுக்கு அடுத்தடுத்து பரவிவிட்டாலும், சீனா அப்போதே விழித்து கொண்டது.
கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம் என்று அந்நாடே பகிரங்கமாக அறிவித்தது.. ஊரடங்கு தளர்வுகளையும் அதிரடியாக அறிவித்தது.
மீண்டும் ஷாக் தரும் கொரோனா.. இங்கிலாந்து, பெரு நாடுகளில் உயரும் தொற்று.. தீவிர தடுப்பு நடவடிக்கை

தொற்று பாதிப்பு
பொருளாதாரத்தையும் கீழே விழாமல் பார்த்து கொண்டது.. ஆனால், இப்போது அதே சீனாவில் மீண்டும் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது.. ஒரே நாளில் 60,70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.. இதை அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.. பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் அதிக பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை.

சிகிச்சை
இதுவரை கிட்டத்தட்ட 97,500 ஆயிரம் பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அவர்களில் 92,000 நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்ட நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.. இந்நிலையில், சீனாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.. முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஊரடங்கு போடப்பட்டாலும், அதனால் பெரும்பலன் கிடைக்கவில்லை.. அதனால், மொத்தமாகவே லாக்டவுன் போட்டால், ஓரளவு பலன் கிடைக்கும் என்றம் நம்புகிறது.

குடும்பங்கள்
அதனால்தான், தங்களுக்கு தேவையான பொருட்களை உடனே வாங்கி வைத்துக்கொள்ளும்படி குடும்பங்களுக்கு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதில், தினமும் ஏற்படும் தேவைகள் மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அளவுக்கு தேவையான பொருட்களை குடும்பங்கள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. திடீரென லாக்டவுன் அமல்படுத்த வேண்டி வரும், அந்த நேரத்தில் உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிக்ககூடாது" என்று வலியுறுத்தியுள்ளது.

உணவு பொருட்கள்
அதேபோல, கையிருப்பில் உள்ள உணவு பொருட்களையும், உணவு விநியோகத்தையும் சீராக வைத்திருக்க வேண்டும், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.. அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் விலையை உயர்த்தி விற்பனை செய்யாமல், பொருட்களை மலிவு விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.