For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதி அரேபியாவில் கொரோனாவால் முதல் நபர் பலி.. இதுவரை 767 பேர் பாதிப்பு!

கொரோனா வைரசால் சவுதி அரேபியாவில் முதல் நபர் பலியாகி உள்ளார்.

Google Oneindia Tamil News

ரியாத்: கொரோனா வைரசால் சவுதி அரேபியாவில் முதல் நபர் பலியாகி உள்ளார். இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிலும் வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள 9 நாடுகளில் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

Coronavirus: First death in Saudi Arabia Due to pandemic

முக்கியமாக லெபனான், ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளுக்கு ஈரானிடம் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் சவுதி அரேபியாவில் முதல் நபர் பலியாகி உள்ளார். இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். கடந்த வாரம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

அங்கு இன்று மட்டும் 205 பேர் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்ட்டுள்ளனர். மெர்ஸ் வைரசுக்கு பிறகு அங்கு கொரோனாதான் இவ்வளவு பெரிய தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.

சிக்கலாகும் காசர்கோடு முடிச்சு.. கேரளாவில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா.. 105 ஆக உயர்ந்த எண்ணிக்கை!சிக்கலாகும் காசர்கோடு முடிச்சு.. கேரளாவில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா.. 105 ஆக உயர்ந்த எண்ணிக்கை!

இதுவரை அங்கு 767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 28 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உடல் நிலை நன்றாக இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது .

இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்தமும் இதனால் மூடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வெளியே நடமாட கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது . அதையும் மீறி நடந்தால் இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Coronavirus: First death in Saudi Arabia Due to pandemic COVID -19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X