For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரியாவில் முதல் நபருக்கு கொரோனா வந்து இருப்பதாக அந்த நாடு அறிவித்து உள்ளது. இதனால் அங்கு தற்போது எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக உலகின் வல்லரசு நாடுகள் என்று கருதப்பட்ட சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.

Recommended Video

    முதல் கொரோனா வைரஸ்... பதறிய Kim jong un

    உலகமே இப்படி திணறிக்கொண்டு இருக்கும் போது வடகொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறி வந்தது. எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை .இதுவரை கொரோனா அறிகுறியோடு யாரும் அனுமதி ஆகவில்லை என்று கூறி வந்தது.

    உலக அளவில் கொரோனா உடன் போராடி மீண்ட 99.7 லட்சம் பேர் - 1.61 கோடி பேர் பாதிப்புஉலக அளவில் கொரோனா உடன் போராடி மீண்ட 99.7 லட்சம் பேர் - 1.61 கோடி பேர் பாதிப்பு

    அறிவிப்பு

    அறிவிப்பு

    இந்த நிலையில் வடகொரியாவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அங்கு இருக்கும் கேசாங் பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கேஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    எமர்ஜென்சி அறிவிப்பு

    எமர்ஜென்சி அறிவிப்பு

    இதையடுத்து தற்போது இதில் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் களமிறங்கி உள்ளார். நாடு முழுக்க அவசர அவசரமாக எமர்ஜென்சி கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளார். எமர்ஜென்சி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். எல்லோரும் டாப் கிளாஸ் அலெர்ட்டில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    ராணுவ பாதிப்பு

    ராணுவ பாதிப்பு

    இதனால் நாட்டிற்குள் தற்போது ராணுவ பாதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு கொரோனா ஏற்பட்டு இருக்கும் நபர் தென் கொரியாவில் இருந்து வந்தவர். கடந்த மூன்று வருடங்கள் முன் இவர் வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு எஸ்கேப் ஆனார். அரசுக்கு எதிராக பேசிவிட்டு, இவர் தென் கொரியா சென்றார். இந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் திரும்பி வந்துள்ளார்.

    ஜூலை பாதிப்பு

    ஜூலை பாதிப்பு

    கடந்த ஜூலை 19ம் தேதி இவர் மீண்டும் வடகொரியா வந்தார். இதன் மூலம் இவர் வடகொரியாவிற்குள் கொரோனாவை கொண்டு வந்துள்ளார். இதனால் தற்போது வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு தென்கொரியாவை அந்த நாடு குற்றஞ்சாட்டி இருக்கிறது. மிக மோசமான வைரஸ் உள்ளே வந்துவிட்டது. நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களுக்கு கிம் அறிவுறுத்தி உள்ளார்.

    English summary
    Coronavirus: First-person gets infected in North Korea, Emergency imposed completely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X