For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவால் பொருளாதார சரிவு.. கடும் மனஉளைச்சல்.. ஜெர்மன் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தற்கொலை!

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பெர்லின்: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுக்க பங்கு சந்தைகள் மோசமாக சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் உற்பத்தி துறைகள் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்கு சீர்குலைவை சந்தித்துள்ளது.

அதேபோல் ஜெர்மன் நாட்டு பொருளாதாரத்தையும் கொரோனா மிக மோசமாக பாதித்து இருக்கிறது. கொரோனா காரணமாக ஜெர்மனியில் 58,247 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 455 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் ஜெர்மனியில் 22 பேர் பலியாகி உள்ளனர் .

தற்கொலை செய்து கொண்டார்

தற்கொலை செய்து கொண்டார்

இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெஸ்ஸி மாகாணத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று முதற்கட்ட உடற்கூறு ஆய்வுகள் சொல்கிறது. இவரின் தற்கொலை அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய அளவில் சரிவு

பெரிய அளவில் சரிவு

கொரோனா பாதிப்பு காரணமாக ஜெர்மனி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஹெஸ்ஸி மாகாணம் 8 கோடி பேர் வசிக்கும் பகுதியாகும். இந்தியாவின் மும்பை போன்ற இது அந்நாட்டின் வர்த்தக தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. ஜெர்மனியின் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் இங்குதான் இருக்கிறது. அதேபோல் ஜெர்மனியின் முன்னணி வங்கிகளான Deutsche Bank மற்றும் Commerzbank ஆகியவை இங்குதான் உள்ளது.

மன உளைச்சல்

மன உளைச்சல்

ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சராக தாமஸ் ஸ்கேஃபர் கடந்த 10 வருடங்களாக இருக்கிறார். அந்த மாகாண வளர்ச்சிக்காக அவர் இரவு பகல் பாராது உழைத்துள்ளார். இவ்வளவு வரும் பொருளாதரம் முன்னேறிய நிலையில்தான் அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்கு சரிவை சந்தித்து இருக்கிறது. பொருளாதார இழப்பை எவ்வாறு சரிசெய்யப் போகிறோம் என மன உளைச்சல் காரணமாக தாமஸ் ஸ்கேஃபர் சில நாட்களாக கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

Recommended Video

    ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் உயிரிழப்பு
    அதிர்ச்சி அடைந்தனர்

    அதிர்ச்சி அடைந்தனர்

    தற்போது இதற்கு இடையில்தான் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிக மோசமாக சரியும் என்று கணிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஜெர்மனியின் பொருளாதாரம் முன்னேறியது. 2009ல் அந்நாட்டு பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்தது. அதன்பின் இப்போதுதான் அந்நாட்டு பொருளாதாரம் மோசம் அடைந்துள்ளது.

    English summary
    Coronavirus: German Hesse state finance minister commits suicide over the recession.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X