For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவாலயத்தில் அடிக்கப்பட்ட புனித நீர்.. 46 பேருக்கு பரவிய கொரோனா வைரஸ்.. ஸ்ப்ரே பாட்டிலால் விபரீதம்!

தென் கொரியாவில் தேவாலயம் ஒன்றில் அளிக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியாவில் தேவாலயம் ஒன்றில் அளிக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் ஈரான், சீனா, தென் கொரியா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதில் தென் கொரியாவில் 8,320 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இதுவரை இந்த வைரஸால் 84 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியா இந்த வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

உலகமே கொரோனா அச்சத்தில் நடுங்க.. அமைதியாக இருக்கும் ரஷ்யா.. என்ன நடக்கிறது புடின் நாட்டில்!? உலகமே கொரோனா அச்சத்தில் நடுங்க.. அமைதியாக இருக்கும் ரஷ்யா.. என்ன நடக்கிறது புடின் நாட்டில்!?

எப்படி உருவானது

எப்படி உருவானது

தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும். இந்த ஷின்சேன்ஜி குழு என்பது லீ மேன் ஹீ என்று நபரால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 9000 பேரில் 4500 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் கொரோனா பரவுவதற்கு மிக முக்கிய காரணமே இந்த அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு என்ன

வேறு என்ன

இந்த நிலையில் இன்னொரு பக்கம் தென் கொரியாவில் தேவாலயம் ஒன்றில் அளிக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தெற்கு சியோல் பகுதியில் உள்ள ரிவர் ஆப் கிரேஸ் கம்யூனிட்டி தேவாலயத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு கொரோனாவில் இருந்து காப்பதற்காக புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

மொத்தம் 100 பேருக்கு உப்பு கலந்த இந்த புனித நீர் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ப்ரே பாட்டில் மூலம் எல்லோருக்கும் வாயில் இந்த புனித நீர் தெளிக்கப்பட்டுள்ளது. ஒரே ஸ்ப்ரே எந்திரம் மூலம் இந்த நீர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கொடுக்கப்பட்ட 100 பேரில் 46 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் 10 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி உள்ளது தெரிய வந்துள்ளது.

மோசமாகிறது

மோசமாகிறது

இந்த ஸ்ப்ரே அடித்த போது அங்கு கொரோனா தாக்கப்பட்ட ஒருவரும் வந்துள்ளார். அவரின் வாயில் ஸ்ப்ரே அடித்துவிட்டு, அடுத்து வந்த நபருக்கும் அதே ஸ்ப்ரே மூலம் புனித நீரை தெளித்து இருக்கிறார்கள். ஸ்ப்ரே பாட்டிலை சுத்தம் செய்யாமல் புனித நீரை தெளித்து உள்ளனர். இதனால் கிருமிகள் அந்த புனித நீர் மூலமே எல்லோருக்கும் வரிசையாக பரவி உள்ளது.

அட இப்படியா

அட இப்படியா

கொரோனாவிடம் பாதுகாக்க தேவாலயம் சென்றவர்களுக்கு அது மூலமே கொரோனா பரவி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் பலருக்கு அங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக தொடர் விசாரணைகள் நடந்து வருகிறது. அங்கு கொரோனா அதிகம் பேருக்கு பரவ இரண்டு தேவாலயங்கள்தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: Holy water spray spreads epidemic to 46 people in South Korea Church in Seoul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X