For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1970ல் வந்த ஒரு சட்டம்.. சீனா எடுத்த தவறான முடிவு.. சார்ஸ் தொடங்கி கொரோனா வரை.. உருவான வரலாறு!

கொரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாவின் 1970 சட்டம் ஒன்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாவின் 1970 சட்டம் ஒன்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கொரோனா மட்டும் இன்றி சீனாவில் இருந்து பல்வேறு வைரஸ்கள் தோன்றியதற்கும் இந்த சட்டம் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    கொரோனா வைரஸ் குறித்தும், சீனாவின் 1970 சட்டம் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு முன், அந்நாட்டு விலங்குகள் மார்க்கெட் மற்றும் வுஹன் மார்க்கெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். உலகில் இருக்கும் பெரும்பாலான வைரஸ்கள், நோய்கள் எல்லாம் விலங்குகள் மற்றும் பூச்சிகளில் இருந்துதான் உருவாகி இருக்கிறது.

    உதாரணமாக ஃப்ளு எனப்படும் இன்ஃப்ளுன்சா சேவல் மற்றும் கொசுக்களில் இருந்தும், பன்றிகளில் இருந்தும் தோன்றியது. எச்ஐவி சிம்பன்சி குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு வந்தது. அதேபோல் எபோலா, நிப்பா வைரஸ் வௌவால்களில் இருந்து வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    கொரோனா வௌவால்களில் தோன்றி இருக்கலாம்

    கொரோனா வௌவால்களில் தோன்றி இருக்கலாம்

    தற்போது மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ் முதலில் வௌவால்களில் தோன்றி இருக்கலாம். அதன்பின் அங்கிருந்து பாங்கலின் எனப்படும் எறும்பு திண்ணிகளுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு வைரஸ் ஒரு விலங்கிடம் இருந்து இன்னொரு விலங்கிற்கு (மனிதர்கள் உட்பட) பரவ வேண்டும் என்றால் அவர்களுக்கு இடையே நெருக்கமான தொடர்பு அல்லது தொடுதல் ஏற்பட வேண்டும். இங்குதான் வுஹன் மார்க்கெட்டின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

    இது ஒரு வெட் மார்க்கெட்

    இது ஒரு வெட் மார்க்கெட்

    இதை வெட் மார்க்கெட் என்று அழைக்கிறார்கள். இங்கு அனைத்து விதமான விலங்குகளும் அப்படியே வெட்டப்பட்டு ரத்தத்தோடு , விற்பனை செய்யப்படும். பல நூறு மக்கள் இங்கு வந்து விலங்குகளை வாங்கி செல்கிறார்கள். இங்கிருந்து கொரோனா பரவ நிறைய வாய்ப்புகள் உள்ளது. இங்கு விலங்குகளை துளை உள்ள கூண்டுகளில் அடைத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து இருப்பார்கள்.

    எப்படி பரவியது

    எப்படி பரவியது

    அதாவது பன்றிகள் உயிரோடு இருக்கும் கூண்டுகள் கீழே இருக்கும், அதற்கு மேல் எலிகள் இருக்கும் கூண்டுகள் . அதற்கு மேல் வௌவால்கள் இருக்கும் கூண்டுகள் என்று வரிசையை எடைக்கு ஏற்றபடி அடுக்கி வைத்து இருப்பார்கள். இதை வெட்டி ரத்தம் ஒழுக ஒழுக உள்ளேயே கூண்டுக்கள் வைத்து இருப்பார்கள். இப்போது வௌவால் ஒன்றை வெட்டினால் அதன் திரவம், அப்படியே கூண்டில் இருக்கும் துளைகள் வழியாக கீழே செல்லும்.

    சிறப்பான விளக்கம்

    சிறப்பான விளக்கம்

    இதன் மூலம் கீழே இருக்கும் விலங்குகளுக்கும் அதன் ரத்தம் சென்று ஒரு கலவை உருவாகும். இதனால்தான் இதை வெட் மார்க்கெட் என்று அழைக்கிறார்கள். இப்படி ஏற்படும் தொடர்பு காரணமாக வௌவால் ரத்தம், எறும்புத்திண்ணிகள் உடன் கலந்து, அதன் மூலம் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சீன மருத்துவர்கள் கொடுக்கும் சிறப்பாக நடக்க வாய்ப்பு உள்ள ஒரே விளக்கம் இதுதான் என்று கூறுகிறார்கள்.

    எறும்பு திண்ணிகள்

    எறும்பு திண்ணிகள்

    பின் இந்த எறும்பு திண்ணிகளை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவி இருக்கலாம். சீனாவில் இருக்கும் வுஹன் மார்க்கெட்டில் எறும்பு திண்ணிகள், பூனைகள், எலிகள், நாய்கள், காட்டு எருமைகள், பன்றிகள், சில வகை குரங்குகள், நரிகள், மயில்கள், என்று பல வகை விலங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.1970ல் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கும், இதற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.

    சீனாவின் வறுமை காரணம்

    சீனாவின் வறுமை காரணம்

    1970ல் சீனா மிக மோசமான வறுமையில் சிக்கி தவித்தது. இந்தியாவில் வந்த தாது பஞ்சம் போல, சீனாவில் மக்கள் உணவு இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டது. உணவு இன்றி 36 பில்லியன் மக்கள் அங்கு பலியானார்கள். அங்கு அரசு மட்டுமே உணவு மார்க்கெட்களை நடத்தி வந்தது. இதனால் மக்களுக்கு உணவு சென்று சேர்வதில் பிரச்சனை ஏற்பட்டது. அங்கு இருந்த 900 மில்லியன் மக்களுக்கு இதனால் உணவு கொடுக்க முடியவில்லை.

    சீனாவில் 1970ல் என்ன நடந்தது?

    சீனாவில் 1970ல் என்ன நடந்தது?

    இதனால் 1970ல் சீனா ஒரு சட்டம் கொண்டு வந்தது. அதில் உணவு விற்பனையை தனியார் மேற்கொள்ளலாம் என்று கூறியது. ஆனாலும் உணவு தட்டப்பாடு நிலவியது. இதனால் அனைத்து விதமான விலங்குகளையும் விற்பனை செய்ய அந்நாடு அனுமதி கொடுத்தது . சில நிறுவனங்கள் பன்றிகள், மாடுகள், கோழி, ஆடுகளை விற்பனை செய்தது. ஆனால் சிறிய சிறிய நிறுவனங்கள் பாம்புகள், ஆமைகளை, வௌவால்களை விற்பனை செய்தனர்.

    புதிய மாற்றம் வந்தது

    புதிய மாற்றம் வந்தது

    சீனாவின் இந்த முயற்சி பெரிய வரவேற்பை பெற்றது. சீனாவில் இதனால் மக்கள் எல்லோருக்கும் பாம்புகள், ஆமைகள் என்று ஏதோ ஒரு வகையில் உணவு சென்று சேர்ந்தது. அங்கு பசியால் மக்கள் பலியாகும் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. இதனால் இது போன்ற மார்க்கெட்களை அந்நாட்டு அரசு ஊக்குவித்தது. மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும், அதற்கு நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையை அங்கு அரசு கொண்டு வந்தது.

    பெரிய சட்ட திருத்தம்

    பெரிய சட்ட திருத்தம்

    1988ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், விலங்குகள் என்பது மனிதர்கள் உட்கொள்ள கூடிய பொருள். அது ஒரு விளைபொருள் என்று சீனா முழு சட்டம் கொண்டு வந்தது. அதாவது அங்கு விலங்குகள் விளைபொருள் என்று மாற்றப்பட்டது. இதுதான் சீனாவை மாற்றிய சட்ட திருத்தம். இதனால் அங்கு ஒரு புதிய துறை வந்தது. மக்கள் பலர் இதுபோன்ற மார்கெட்டுகளை உருவாக்கினார்கள்.

    விற்பனை அமோகம்

    விற்பனை அமோகம்

    புது புது விலங்குகளை விற்பனை செய்ய தொடங்கினார்கள். மக்களின் உணவு முறை மாறியது. இதனால் கள்ள மார்க்கெட்டும் உருவானது. சிலர் புலிகள், யானைகளை உணவுகளாக விற்க தொடங்கினார்கள். பாதுகாப்பற்ற முறையில் பல விலங்குகள் விற்கப்பட்டது. அப்போதுதான் அந்த அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் நடந்தது. 2003ல் சீனாவில் சார்ஸ் வைரஸ் உருவானது.

     சார்ஸ் வைரஸ் வேகம் எடுத்தது

    சார்ஸ் வைரஸ் வேகம் எடுத்தது

    சார்ஸ் வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 800 பேர் பலியானார்கள், 70 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டது. இந்த வைரஸ் உருவானது பூனைகளின் மூலம். இது உருவானது சீனாவின் இன்னொரு வெட் மார்க்கெட்டில் இருந்துதான். தெற்கு சீனாவில் உள்ள போசன் என்னும் மார்க்கெட்டில் இருந்துதான் இந்த வைரஸ் உருவானது. இதன் இன்னொரு அப்டேட் வெர்ஷன்தான் மத்திய கிழக்கு நாடுகளை தாக்கிய மெர்ஸ் வைரஸ் ஆகும்.

    உடனே மூடினார்கள்

    உடனே மூடினார்கள்

    இதனால் உடனே அந்த மார்க்கெட் மூடப்பட்டது. அதேபோல் பூனைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மொத்தமாக இந்த விலங்குகள் மார்க்கெட் எல்லாம் மூடப்பட்டது. ஆனால் வெகு சில மாதங்களில் மீண்டும் இந்த தடை திரும்ப பெறப்பட்டது. அதோடு பூனைகளை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. 2004ல் 100 மில்லியன் யான் மதிப்பு கொண்ட துறைதான் இந்த விலங்குகள் மார்க்கெட் துறை. சீனாவின் ஜிடிபியில் இந்த துறை மிக சிறியது. ஆனால் இது தொடர்ந்து இயக்க காரணம் உள்ளது. இங்கு பல அரசியல் இருக்கிறது.

    பின்னணியில் அரசியல்

    பின்னணியில் அரசியல்

    இந்த விலங்குகள் விற்பனை துறையில் சீன அரசியல்வாதிகள் பலர் நேரடியாக முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்த துறையை தடை செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த துறை அதன்பின் விஸ்வரூபம் எடுத்தது. மருந்துகள், அழகு சாதன பொருட்கள், பாலியல் மருந்துகளுக்கு இது பயன்படுத்தப்பட்டது. இந்த துறை, அந்நாட்டு ஏழைகளை விட பணக்கார மக்களைத்தான் வாழ வைத்தது. வெறும் 3% மக்கள்தான் இதில் நேரடியாக தொடர்பு கொண்டு உள்ளனர்.

    சீனாவின் தற்போதைய நிலை என்ன

    சீனாவின் தற்போதைய நிலை என்ன

    இவர்கள்தான் சீனாவின் தற்போதைய நிலைக்கு காரணம். இப்படி உருவான மார்க்கெட்டுகளில் ஒன்றுதான் வுஹன் மார்க்கெட் ஆகும். இதுதான் வுஹன் மார்க்கெட் உருவான வரலாறு. இந்த வுஹன் மார்க்கெட்டில்தான் கொரோனா உருவானதாக சந்தேகிக்கப்படுகிறது. முதல் 44 கொரோனா நோயாளிகளில் 27 பேர் இங்கிருந்து வந்தவர்கள். மீதம் உள்ளவர்கள், இவர்களை நேரடியாக தொடர்பு கொண்ட உறவினர்கள்கள்.

    வுஹன்தான் இந்த வைரஸின் தொடக்கம்

    வுஹன்தான் இந்த வைரஸின் தொடக்கம்

    வுஹன்தான் இந்த வைரஸின் தொடக்கம். ஆனால் இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருகிறது.தற்போது வுஹன் மார்க்கெட் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் இதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இன்னொரு வைரஸ் இதுபோல் உருவாகும் நிலை ஏற்பட கூடாது என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

    English summary
    Coronavirus: How a 70's law in China due to poverty, now leads to the Pandemic? - A shocking story
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X