For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்

Google Oneindia Tamil News

ஹனோய்: கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மிக குட்டி நாடான வியட்நாம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. உலகிற்கே எடுத்துக்காட்டாக வியட்நாம் மாறியுள்ளது.

Recommended Video

    அதே வழிமுறை... கொரோனாவை வியட்நாம் எதிர்கொண்டது இப்படித்தான்

    1 நவம்பர் 1955 - 30 ஏப்ரல் 1975 வரை தெற்கு வியாட்நாமிற்கும், வடக்கு வியாட்நாமிற்கும் இடையில் நடந்த போரை குறித்து ஒரு சின்ன ரீ கேப்பை இங்கே பார்க்கலாம்... 20 வருடங்கள் நடந்த இந்த போரில் தெற்கு வியட்நாமை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீவிரமாக ஆதரித்தது. அதே சமயம் வடக்கு வியட்நாமை சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் தீவிரமாக ஆதரித்தது.

    பனிபோர் போல நடந்து கொண்டு இருந்த இந்த யுத்தத்தில் கடைசியில் வென்றது வடக்கு வியட்நாம். வலிமையான விமானப்படை, டாங்கிகள், துப்பாக்கிகளை வைத்து இருந்த அமெரிக்காவை வடக்கு வியட்நாம் வீரர்கள் பெரிய ஆயுத பலம் இன்றியே அடித்து விரட்டினார்கள். அதோடு தெற்கு வியட்நாமையும் கைப்பற்றினார்கள். உலகை எல்லாம் வென்ற அமெரிக்கா, வியட்நாமிடம் சுருண்டு விழுந்து ''நாக் அவுட்'' ஆனது.

    வியட்நாம் செய்த அடையுத்த் யுத்தம்

    வியட்நாம் செய்த அடையுத்த் யுத்தம்

    பலம் வாய்ந்த அமெரிக்காவை வெல்ல வியட்நாமிற்கு விஞ்ஞானம் உதவவில்லை, பொருளாதாரம் உதவவில்லை, ஆயுத பலம் உதவவில்லை. அவர்களுக்கு உதவியது ஒன்றுதான்.. கொரில்லா டெக்னிக்! மிக பழமையான போர் முறைகளை பயன்படுத்தி களத்தில் இறங்கி, ஒற்றுமையாக சண்டையிட்டுதான் அமெரிக்காவை வியட்நாம் வீழ்த்தியது. தொழில்நுட்பத்தை நம்பாமல் பழைய முறைப்படி மக்களை திரட்டி, ஒன்றாக சண்டை போட்டு அமெரிக்காவை வீழ்த்தியது.

    மீண்டும் வென்றுள்ளது

    மீண்டும் வென்றுள்ளது

    தற்போது அதேபோல்தான் வியட்நாம் மிக பழமையான டெக்னிக்கை பயன்படுத்தி கொரோனாவை வீழ்த்தி உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் சீனாவில் மிகப்பெரிய அளவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்த நேரம். சீனாவிற்கு வெளியேவும் கொரோனா வேகமாக பரவியது. வியட்நாமிலும் கொரோனா பரவியது. 160 பேர் வெகு சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வியட்நாம் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

    சீனாவிற்கு அருகில் உள்ளது

    சீனாவிற்கு அருகில் உள்ளது

    வியட்நாம் இனி தப்பவே முடியாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். வியட்நாம் குறித்து உலக நாடுகள் சந்தேகம் கொள்ள நிறைய காரணம் இருந்தது. ஆசியாவில் மிக மோசமான பண மதிப்பை கொண்ட நாட்களில் வியட்நாம் ஒன்று. அதன் பணமதிப்பு இந்தியாவை விட 300 மடங்கு குறைவானது. அதோடு சீனாவிற்கு நெருக்கமாக இருக்கும் இந்த நாடு சீனாவுடன் 1000 கிமீக்கு எல்லையை பங்களித்து பரவி உள்ளது. இதனால் அங்கு கொரோனா எளிதாக நுழையும். அப்படி உள்ளே நுழைந்தால் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

    சரியான மருத்துவம் இல்லை

    சரியான மருத்துவம் இல்லை

    ஆசிய நாடுகளில் மிக மோசமான மருத்துவவசதி கொண்ட நாடுதான் வியட்நாம். அங்கு 8 மில்லியன் பேர் இருக்கும் வியாட்நாம் தலைநகரில் கொஞ்சம் உருப்படியான மருத்துவமனை என்றால் அது சி மின் சிட்டி மருத்துவமனை மட்டும்தான். அங்கும் கூட ஒரே நேரத்தில் 900 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது. அந்த அளவிற்கு மிக மோசமான சுகாதாரத்துறை கொண்ட நாடுதான் வியட்நாம் என்பது குறிப்பிடதக்கது.

    உள்ளே அனுமதிக்க முடியாது

    உள்ளே அனுமதிக்க முடியாது

    இதனால் வியட்நாம் கொரோனாவை நாட்டிற்க்கு உள்ளே அனுமதித்துவிட்டு அதை வெளியே விரட்டலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்க முடியாது. ஆனால் வியட்நாமையும் மீறி அந்நாட்டிற்குள் பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா வந்தது. ஜனவரி தொடக்கத்தில் அந்த நாட்டிற்கு வந்த சில தாய்லாந்து மற்றும் சீன பயணிகள் மூலம் வியட்நாமிற்கு உள்ளே கொரோனா வந்தது. இரண்டு வாரத்தில் அங்கு 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    செயலில் இறங்கினார்கள்

    செயலில் இறங்கினார்கள்

    இதனால் வேகமாக களமிறங்கிய வியட்நாம் அரசு நாடு முழுக்க தடைகளை அறிவிக்க தொடங்கியது. ஜனவரி பாதியிலேயே , அதாவது இந்தியா கொரோனா குறித்து சிந்திக்கும் முன்பே, ஜனவரி பாதியிலேயே தங்கள் நாட்டு எல்லையை மொத்தமாக மூடியது. ஜனவரி தொடக்கத்தில் வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு பிறகு அந்த நாட்டிற்குள் வேறு யாரும் அதன்பின் நுழைய முடியவில்லை. எல்லைகளை மூடிய பின் தங்கள் நாட்டிற்குள் கடுமையான கட்டுப்பாடுகளை வியட்நாம் விதித்தது.

    கொரோனாவிற்கு எதிராக போர் தொடுகிறோம்

    கொரோனாவிற்கு எதிராக போர் தொடுகிறோம்

    இதற்காக வியட்நாம் அரசு வெளிப்படையாக கொரோனாவிற்கு எதிராக போரை அறிவித்தது. ஆம் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின் வியட்நாம் இன்னொரு கொரில்லா யுத்தத்திற்க்கு தயார் ஆனது. ஆனால் இந்த முறை வியட்நாம் எதிர்கொண்ட எதிரி கொரோனா வைரஸ்! அதேபோல்தான் அமெரிக்காவை வீழ்த்தியது போலவே பழைய டெக்னிக்கை வியட்நாம் பயன்படுத்தியது.கொரோனாவை எதிர்கொள்ள வியட்நாம் நாட்டிடம் போதிய மருத்துவ வசதி இல்லை.

    கடுமையான கட்டுப்பாடுகள்

    கடுமையான கட்டுப்பாடுகள்

    அதேபோல் போதிய தொழில்நுட்ப வசதியும் இல்லை. இதனால் அந்நாட்டு அரசு மக்களிடம் நேரடியாக சென்று பேசியது. மக்களை போருக்கு தயார் செய்வது, கொரோனாவிற்கு எதிராக பிரச்சாரம் மூலம் தயார் செய்தது. கொரோனாவிற்கு எதிராக அடிப்படையான அறிவை முதலில் மக்களிடம் புகுத்தியது. அதன்பின் வியட்நாம் முதலில் தங்கள் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாகாணங்களை மொத்தமாக மூடியது. 21 நாட்கள் தொடர்ச்சியாக முக்கியமான மாகாணங்கள் எல்லாம் மூடப்பட்டது.

    மக்கள் ஒத்துழைப்பு

    மக்கள் ஒத்துழைப்பு

    ஏற்கனவே மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு இருந்ததால் வீட்டில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வீட்டிற்க்கே சென்றது. தங்கள் வாழ்க்கை மோசமாகிவிடும் என்ற அச்சம் அவர்களிடம் இல்லை. அதேபோல் அவர்களிடம் இருக்கும் கூட்டு மனப்பான்மை இந்த நேரத்தில் வெளிப்பட்டது. கொரோனாவிற்கு எதிராக ஒரே குறிக்கோளோடு அவர்கள் ஊரடங்கை கடைபிடித்தனர்.

    1.1 பில்லியன் டாலர் தயார்

    1.1 பில்லியன் டாலர் தயார்

    வெறுமனே மக்களை வீட்டில் மட்டும் அந்நாட்டு அரசு வைக்கவில்லை. அவர்களுக்கான உதவித்தொகையை அறிவித்தது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்க 1.1 பில்லியன் டாலரை அந்நாட்டு சந்தைக்குள் இறக்க முடிவு செய்துள்ளது. மிக மோசமான ஜிடிபி கொண்ட ஒரு நாடு இவ்வளவு துணிச்சலான நடவடிக்கை எடுப்பதை பார்த்து அமெரிக்காவே நடுங்கிப்போனது. வியட்நாம் மக்கள் இதனால் வீட்டில் நிம்மதியாக விதிமுறையை கடைப்பிடித்து, வீட்டில் இருந்தே பணிகளை செய்தனர். வெறுமனே மக்களை வீட்டில் மட்டும் அந்நாட்டு அரசு வைக்கவில்லை. அவர்களுக்கான உதவித்தொகையை அறிவித்தது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை மீட்க 1.1 பில்லியன் டாலரை அந்நாட்டு சந்தைக்குள் இறக்க முடிவு செய்துள்ளது. மிக மோசமான ஜிடிபி கொண்ட ஒரு நாடு இவ்வளவு துணிச்சலான நடவடிக்கை எடுப்பதை பார்த்து அமெரிக்காவே நடுங்கிப்போனது. வியட்நாம் மக்கள் இதனால் வீட்டில் நிம்மதியாக விதிமுறையை கடைப்பிடித்து, வீட்டில் இருந்தே பணிகளை செய்தனர்.

    மிக பழமையான முறை

    மிக பழமையான முறை

    அதன்பின் கொரோனாவிற்கு எதிராக இரண்டு பெரிய படையை உருவாக்கி அவர்களை களமிறங்கியது. இதற்காக இரண்டு குழுக்களை அந்நாட்டு அரசு உருவாக்கியது. ஒன்று மருத்துவ குழு.. இந்த குழு கொரோனா வந்த 160+ பேருக்கு சிகிச்சை அளிக்கும். இன்னொரு குழு..விசாரணை குழு. இது கொரோனா வந்தவர்கள் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்டுபிடிக்கும். இந்த மருத்துவ குழு தன்னுடைய பணிகளை மிக சிறப்பாக, குறைந்த மருத்துவ வசதிக்கும் இடையில் செய்தது.

    விசாரணை குழு என்ன செய்தது

    விசாரணை குழு என்ன செய்தது

    இன்னொரு பக்கம் விசாரணை குழு இந்த கொரோனா தாக்கியவர்கள் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்டுபிடித்தது. இந்தியாவில் காண்டாக்ட் டிரெஸ் முறையில் ''ஏ'' என்ற நபருக்கு கொரோனா இருந்தால், அவர் தொடர்பு கொண்ட நபர்களை மட்டும்தான் கண்டுபிடிப்பார்கள். ஆனால் வியட்நாம் நாட்டில் 'ஏ' என்ற நபருக்கு கொரோனா இருந்தால், அவர் தொடர்பு கொண்ட நபர், அந்த நபரை தொடர்பு கொண்ட இன்னொரு நபர் , அவருடைய நண்பர், அந்த நண்பரின் நண்பர் என்று வரிசையாக 5 அடுக்கு காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது.

    ஒரே நாடு தீவிரம்

    ஒரே நாடு தீவிரம்

    உலகிலேயே ஐந்தடுக்கு சோதனை செய்த ஒரே நாடு வியட்நாம்தான். இதற்காக அந்நாட்டு அரசு ராணுவத்தை பயன்படுத்தியது. மிக கடுமையான ஊரடங்கு அங்கு பின்பற்றப்பட்டது. மக்கள் யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இது அவர்களுக்கு பெரிய பலன் கொடுத்தது. இங்கே இந்த விசாரணை நடக்கும் போது, இன்னொரு பக்கம் காண்டாக்ட் டிரேசிங் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 8 ஆயிரம் தனி தனியாக அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டார்கள்.

    வெற்றி பெற்றது

    வெற்றி பெற்றது

    மொத்தம் கடைசியாக எல்லோரையும் சேர்த்து 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வேறு எங்கும் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று உறுதியானது. கடைசியாக இவர்கள் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக தீவிரமாக வியட்நாம் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் 90 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 50 பேர் குணமடையும் நிலையில் உள்ளனர்.

    கடைசியாக சிகிச்சை

    கடைசியாக சிகிச்சை

    100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொரோனா மூலம் அங்கு ஒருவர் கூட பலியாகவில்லை. ஆம் ஒருவர் கூட பலியாகவில்லை. புதிதாக யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. எந்த பெரிய தொழில்நுட்பமும் இன்றி இந்த சாதனையை அந்நாட்டு அரசு செய்துள்ளது. மிக சிறிய நாட்டில் பெரிய மக்கள் தொகையுடன் இருந்த அந்த நாடு மிக எளிதாக கொரோனாவை வீழத்தி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் கொரில்லா யுத்தம் ஒன்றில் வியட்நாம் மீண்டும் வென்றுள்ளது.. இந்த முறை வியட்நாம் வீழ்த்தியது கொரோனாவை!

    English summary
    Coronavirus: How a small nation Vietnam won the war against the pandemic with their old reflex actions?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X