For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா கோரத் தாண்டவம்.. ஒரே நாளில் 54 பேர் பலி.. இதுவரை இல்லாத அதிகரிப்பு.. அச்சத்தில் ஈரான்

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானில் இன்று ஒரே நாளில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 54 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகமாகும். அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    கொரோனவால் கிடைத்த வாழ்வு... 54,000 கைதிகள் விடுதலை

    இந்த தகவலை, அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், கியானோஷ் ஜஹான்போர், உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம், ஒரே நாளில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

    உலக அளவில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு, சீனா. அதற்கு அடுத்தபடியாக, இத்தாலி, ஈரான்தான் முன்னணியில் உள்ளது. பொருளாதார தடையால் அவதிப்பட்டு வரும் ஈரானுக்கு, இந்த பாதிப்பு அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடுது.. நம்மாட்களை பாருங்க.. கொரோனா வைரசை கொல்லும் நவீன வழி உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடுது.. நம்மாட்களை பாருங்க.. கொரோனா வைரசை கொல்லும் நவீன வழி

    மத்திய கிழக்கு நாடுகள்

    மத்திய கிழக்கு நாடுகள்

    இந்த மத்திய கிழக்கு நாடுகள் பிராந்தியத்தில், 8,600க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலகளவில், 110,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,800 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. சிகிச்சை பெற்று மீண்டவர்கள் எண்ணிக்கை சுமார் 62,000 ஆகும். பெரும்பாலான மக்களுக்கு, கொரோனா வைரஸ், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற லேசான அல்லது மிதமான அறிகுறிகளை மட்டுமே காட்டுகிறது.

    மீட்பு

    மீட்பு

    சிலருக்கு, அதிலும், குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, இது நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் டாக்டர்கள். பெரும்பான்மையான மக்கள் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, லேசான நோய் உள்ளவர்கள் சுமார் இரண்டு வாரங்களில் குணமடைவார்கள்,

    ஈரானில் வேகம்

    ஈரானில் வேகம்

    அதே நேரத்தில் கடுமையான நோய் உள்ளவர்கள் குணமடைய மூன்று முதல் ஆறு வாரங்கள் ஆகலாம். ஆனால், ஈரானில் மட்டும், இந்த வைரஸ் வேகம் என்பது அதிமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பபது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளா

    கேரளா

    கர்நாடகாவில் நேற்று ஒரு ஐடி ஊழியருக்கு பாதிப்பு உறுதி செய்யப்ப்டடது. இன்று மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை நல்ல முறையில் நடக்கிறது. கேரளாவின் நிலைமைதான் சீனாவின் வூஹான் மாகாணம் போல மாறிவிட்டது. அங்கு பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மார்ச் 31ம் தேதிவரை மூடப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Iran said on Tuesday that COVID-19 killed 54 more people, raising the death toll to 291 amid 8,042 cases in the Islamic Republic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X