For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செர்னோபில் அணு விபத்துக்கு இணையானது.. சீனா எதையோ மறைக்கிறது.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா பல முக்கியமான விஷயங்களை மறைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா பல முக்கியமான விஷயங்களை மறைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் தவறு காரணமாக நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    உலகம் முழுக்க தற்போது சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 80 பேர் பலியாகி உள்ளனர். 200 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் 11 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 7 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் இதனால் மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

    கொரோனா வைரஸ்: வனவிலங்குகள், கடல் உயிரின வர்த்தகத்திற்கு தற்காலிக தடை விதித்தது சீனாகொரோனா வைரஸ்: வனவிலங்குகள், கடல் உயிரின வர்த்தகத்திற்கு தற்காலிக தடை விதித்தது சீனா

    என்ன

    என்ன

    இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் தவறு காரணமாக நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வுஹன் நகரில் இருக்கும் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு இருக்கலாம். மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சீனா இந்த வைரஸை உருவாக்கி இருக்கலாம். பயோ வாரின் ஒரு அங்கமாக இதை உருவாக்கி இருக்கலாம். கடைசியில் அது சீனாவிற்கே எதிராக திரும்பி இருக்கலாம் என்கிறார்கள்.

    தோற்றம்

    தோற்றம்

    வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில் இருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்க வாய்ப்புள்ளது. அங்கு பணியாற்று ஊழியர்களிடம் இருந்து இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம். இதனால்தான் சீனா தொடர்ந்து இந்த வைரஸ் எப்படி உருவானது என்று தெரிவிக்காமல் மறைத்து வருகிறது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது, என்று கூறுகிறார்கள். இதுமட்டும் உண்மையாக இருக்கும் என்றால் அது சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் அரசுக்கு பெரிய இடைஞ்சலாக மாறும்.

    பெரிய ஆபத்து

    பெரிய ஆபத்து

    சீனாவில் நடக்கும் இந்த வைரஸ் ஆபத்தை பலரும் செர்னோபில் அணு விபத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள்.1986 ஏப்ரல் மாதம் 26ம் தேதி ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய அணு உலைகளில் ஒன்றாக செர்னோபில் அணு உலையில் ஒரு ரியாக்டர் கோர் வெடித்து சிதறியது. ரஷ்யா பல வருடங்களாக எல்லா அணு உலைகளிலும் கவனிக்க தவறிய மிக முக்கியமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விபத்து ஏற்பட்டது. செர்னோபில் விபத்து ஏற்பட்டதால் தற்போது அந்த நகரமே மக்கள் பயன்படுத்துவதற்கு தகாத நகரமாக மாறியது.

    மக்கள் வெளியேற்றம்

    மக்கள் வெளியேற்றம்

    அங்கு இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட நாய் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கு கொல்லப்பட்டுள்ளது. இன்னும் அங்கு அணு கதிர் வீச்சு இருந்து கொண்டுதான் இருக்கிறது. செர்னோபில் விபத்து ஏற்பட்ட போது முதல் சில நாட்களுக்கு அது குறித்து ரஷ்ய அரசு மௌனம் காத்தது. அதாவது மக்களிடம் செர்னோபில் அணு உலை வெடித்ததை சொல்லவே இல்லை. அணு உலையில் ஒரு விபத்து அதனால் புகை வருகிறது என்று பொய் சொல்லி ஏமாற்றியது.

    விஞ்ஞானிகள் அணு உலை

    விஞ்ஞானிகள் அணு உலை

    ஆனால் விஞ்ஞானிகள் அணு உலையின் ஆபத்தை விளக்கிய பின்பே அது குறித்த எச்சரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இதனால் ரஷ்யா பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. அதன்பின் சோவியத் யூனியன் உடைவதற்கு கூட இந்த விபத்துதான் காரணம். அரசின் மோசமான செயல்பாடுதான் காரணம் என்று தகவல்கள் வெளியானது. தற்போது சீனாவிலும் அதே நிலைத்தான் ஏற்பட்டுள்ளது.

    செர்னோபில் விபத்து

    செர்னோபில் விபத்து

    செர்னோபில் விபத்து போல சீனாவில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. செர்னோபில் விபத்தில் நிறைய ரகசியத்தை ரஷ்யா மறைத்து அது பின்னே வெளியே வந்தது. சீனாவும் கொரோனா குறித்து பல உண்மைகளை மறைக்கிறது. குறிப்பாக கொரோனா எப்படி உருவானது என்று சீனா இன்னும் கூறவில்லை, அல்லது கண்டுபிடிக்கவில்லை. இதனால் சீனா ரஷ்யா எதிர்கொண்ட அதே சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டு வருகிறது. இதே புகாரை இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளும், ஆராய்ச்சியாளர்களும் வைத்துள்ளனர்.

    இரண்டு நாட்டு கொள்கை

    இரண்டு நாட்டு கொள்கை

    இரண்டு நாட்டின் அரசியல் கொள்கையும் ஒரே மாதிரியானதுதான். வளர்ந்து வந்த ரஷ்யாவை செர்னோபில் எப்படி முடக்கி போட்டதோ அதேபோல் சீனாவை கொரோனா வைரஸ் முடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். உலக நாடுகளுக்கு உண்மை தெரியும் முன் இந்த வைரஸ் தாக்குதலுக்கு காரணம் என்ன என்று சீனா ஒப்புக்கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பாக சீனா எதை மறைத்தாலும் அதை உடனே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    English summary
    Coronavirus is just like Russia's Chernobyl incident to China warn scientists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X