For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நாளில் பலர் சாவு.. களத்துக்கு வந்தார் சீன அதிபர் ஜின்பிங்.. கையில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிஜி எங்களை காப்பாற்றுங்கள்.. வீடு கொண்டு போய் சேருங்கள்.. ஜப்பான் கப்பலில் இந்தியர்கள் - வீடியோ

    பெய்ஜிங்: சீனாவில் கொரானா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000த்தை தாண்டிவிட்டது. நேற்று ஒரே நாளில் 108 பேர் இறந்துவிட்டார்கள். சுமார் 42000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளைப் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

    உலகின் மிகப்பெரிய நாடானா சீனா பரப்பரளவில் மட்டுமில்லாமல் மக்கள் தொகை அடிப்படையிலும் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் நம் இந்தியாவை ஒப்பிடும் போதும் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது.

    உலக பொருளதார வல்லரசாக விளங்கும் சீனாவை கொரோனா வைரஸ் சின்னாபின்னமாக்கி உள்ளது. மொத்த சீனாவும் ஸ்தம்பத்துள்ளது. பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகங்கள் முடங்கி உள்ளன. அந்த நாட்டு மக்களை கொரோனா மிக கடுiமையாக தாக்கி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி மக்களுக்கு நன்றி.. ஆம் ஆத்மிக்கு தேர்தல் பிரசார யுத்தி வகுத்து தந்த பிரசாந்த் கிஷோர் ட்வீட் டெல்லி மக்களுக்கு நன்றி.. ஆம் ஆத்மிக்கு தேர்தல் பிரசார யுத்தி வகுத்து தந்த பிரசாந்த் கிஷோர் ட்வீட்

     ஆயிரங்களில் பலி

    ஆயிரங்களில் பலி

    அதேபோல் தினமும் 100 பேருக்கு மேல் கொரோனாவால் இறந்து வருகிறார்கள். இவைஎல்லாம் அதிகாரப்பூர்வ கணக்கின் படி. ஆனால் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அச்சம் உலக நாடுகளுக்கு இருக்கிறது. அதேபோல் பலி எணிக்கையும் மிக மிக அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

    ரகசிய இடத்தில் அதிபரா?

    ரகசிய இடத்தில் அதிபரா?

    இதை உறுதிபடுத்தும் விதமாக வுகான் நகரில் மட்டும் பல்லாயிரம் டாக்டர்கள் முகாமிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இக்கட்டான இந்த நேரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாகவும், கொரோனா பாதிக்காமல் இருக்க அப்படி அவர் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.

    மருத்துவமனையில் ஜின்பிங்

    மருத்துவமனையில் ஜின்பிங்

    ஆனால் இந்த தகவல்களுக்கு மாறாக சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கையோடு தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய சோதனையும் செய்து கொண்டார். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அங்குள்ள மருத்துவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    நோயாளிகளிடம் பேசினார்

    நோயாளிகளிடம் பேசினார்

    அத்துடன் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸிங் வழியாக அதிபர் ஜின்பிங் பேசி ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அங்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரிடத்தில் நிலைமையைக் கேட்டறிந்தார்.

    அலட்சியம் காட்டியதா

    அலட்சியம் காட்டியதா

    கடந்த டிசம்பர் மாதத்திலேயே சீனாவை கொரோன வைரஸ் தாக்கிவிட்ட நிலையில் அதை உடனே அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடுப்பதில் சீன அரசு அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதன்விளைவாக இன்று சீன முழுவதும் அது பரவியதாக சொல்கிறார்கள். ஏனெனில் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 10ம் தேதியில் இருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட ஜனவரி 23ம் தேதிக்குள் சுமார் 50லட்சம் பேர் நகரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

    கண்டுபிடிக்கணும்

    கண்டுபிடிக்கணும்

    இவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது என்பது தெரியவில்லை. ஏனெனில் சுவாச காற்று வழியாக கொரோனா பரவி வருகிறது. எனவே அதன் பாதிப்பு சீனாவை மோசமாக பாதித்து இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. இதில் இருந்து சீன மீண்டும் வர வேண்டும் என்றால் உடனே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் அதற்கு இருக்கும் ஒரே வழி. ஏனெனில் தடுக்க தவறிவிட்டதால் எல்லாம் கைமீறி போய்விட்டது. இனி புதிததாக வராமல் தடுக்க முயற்சி செய்யலாமே ஒழிய, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காப்பற்றுவதற்கு மருந்து தான் சிறந்த வழி.

    English summary
    coronavirus issue: china president xi jinping visited hospital in beijing. He consoled those affected by Coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X