For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது வெறும் தொடக்கம்தான்.. இனிதான் சிக்கல்.. ஆப்ரிக்காவில் கால் பதித்த கொரோனா.. எச்சரிக்கும் ஹு!

உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது ஆப்ரிக்க நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

ஒண்டாரியோ: உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது ஆப்ரிக்க நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

Recommended Video

    7 விதமான தடுப்பூசி... கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய பில்கேட்ஸ்

    உலகம் முழுக்க 15,13,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.நேற்று ஒரே நாளில் பல நாடுகளில் கொரோனா படுவேகமாக பரவி தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஆப்ரிக்க நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக இதுவரை 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 500 பேர் வரை பலியாகி உள்ளனர். ஆப்ரிக்க நாடுகளில் முதலில் எகிப்தில்தான் கொரோனா வைரஸ் தாக்கியது.

    எங்கே எல்லாமும்

    எங்கே எல்லாமும்

    ஆப்ரிக்க நாடுகளில் நைஜீரியா 1572, புர்கினா பாசோ 414, கேமரூன் 685, மத்திய ஆப்ரிக்கா 9, காங்கோ 60,காங்கோ ரிபப்ளிக் 183, எகிப்து 1560, கானா 313, கினியா 164, கென்யா 179, மடகாஸ்கர் 93, மொரீஷியஸ் 273, மொராக்கோ 1275, நைஜர் 278, ருவாண்டா 105, சோமாலியா 12, தென்னாப்பிரிக்கா 1845, சூடான் 14, துனிசியா 623, உகாண்டா 53, ஆகிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி உள்ளது.

    வெறும் தொடக்கம்தான்

    வெறும் தொடக்கம்தான்

    இந்த நிலையில் ஆப்ரிக்க நாடுகளில் இப்படி தீவிரமாக கொரோனா பரவி வருவது வெறும் தொடக்கம்தான் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடக்கம்தான். இன்னும் மோசமான சூழ்நிலை இனி வரும் நாட்களில்தான் ஏற்படும். மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா ஆப்ரிக்காவை மருத்துவ ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் தாக்கும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    ஆரோக்கியம் குறைவு

    ஆரோக்கியம் குறைவு

    இதற்கு அவர்கள் காரணங்களை அடுக்கி உள்ளனர். அதன்படி ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் போதிய ஆரோக்கியத்துடன் இல்லை. இங்கு பலருக்கு எய்ட்ஸ் இருக்கிறது. அதேபோல் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைக்கவில்லை. இதனால் அங்கு மக்கள் சத்தாக இல்லை. அவர்களின் எதிர்ப்பு சக்தி இதனால் குறையும். 50 மில்லியன் குழந்தை போதிய எடை இன்றி எல்லா வருடமும் பிறக்கிறார்கள்.

    மிக எளிதாக தாக்கும்

    மிக எளிதாக தாக்கும்

    அதேபோல் இங்கு இருக்கும் மக்களுக்கு இதயம் மற்றும் மூச்சு குழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது. இதனால் மக்கள் எளிதாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அவர்களால் சமாளிக்க முடியாது. கொரோனா ஏற்கனவே எதிர்ப்பு சக்தியை போக்கும் ஒரு வைரஸ் தாக்குதல் ஆகும். அதனால் ஆப்ரிக்க நாடுகள் மிக மோசமாக இதனால் பாதிக்கும்.

    மருத்துவ வசதி குறைவு

    மருத்துவ வசதி குறைவு

    அதேபோல் ஆப்ரிக்காவில் மருத்துவ வசதிகள் மிக மோசமாக இருக்கிறது. அங்கு சில நாடுகளில் 5 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. இன்னும் சில நாடுகளில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. பல இடங்களில் மருத்துவமனைகளே இல்லை. இதனால் ஒருவருக்கு கொரோனா வந்தால் அவரை மருத்துவமனை அழைத்து செல்வதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.

    மருத்துவ உபகரணங்கள் குறைவு

    மருத்துவ உபகரணங்கள் குறைவு

    மேலும் அங்கு மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் இல்லை. அமெரிக்காவில் 75 ஆயிரம் வெண்டிலெட்டர்கள் தேவை என்ற நிலை உள்ளது. அமெரிக்காவிலேயே அந்த நிலை என்றால் ஆப்பிரிக்க நாடுகள் குறித்து நினைத்து பாருங்கள். ஆப்ரிக்காவில் அதேபோல் போதுமான மருந்துகள் கை வசம் இல்லை. இப்போதும் அங்கு மலேரியா இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா வந்தால் அதை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

    வேகமாக தொடங்கிவிட்டது

    வேகமாக தொடங்கிவிட்டது

    ஆனால் தற்போதுதான் ஆப்பரிக்காவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு கட்டுபாடுகள் தொடங்கி உள்ளது. அதிலும் கூட ஆப்ரிக்கா முழுக்க பல நாடுகளில் இன்னும் கட்டுபாடுக்குள் தொடங்கவில்லை. நைஜீரியாவில் மட்டும் கொரோனாவிற்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு 2 கோடி பேர் வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வரும் வாரங்கள் எப்படி

    வரும் வாரங்கள் எப்படி

    ஆப்ரிக்க நாடுகளின் அரசியல் பின்புலம் காரணமாகவும் கொரோனாவிற்கு எதிரான அந்த கண்டம் பெரிய பிரச்சனை சந்திக்கும் என்று கூறுகிறார்கள். அங்கு எல்லாமே அரசியல்தான் என்ற நிலை உள்ளது. நோயும் கூட அரசியல்தான். அங்கு நிலவும் அரசுகள் நிலையற்ற தன்மையில் இருப்பதால், இந்த கொரோனாவை எப்படி எதிர்கொள்ளும். அதற்கு எதிராக எப்படி செயல்படும் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Coronavirus: It is just a beginning says WHO after Africa reaches 10000 cases and 500 deaths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X