For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேகமாக உருமாறியது.. வித்தியாசமாக இருக்கிறது.. சீனாவை மிரட்டும் "அப்டேட்டட் கொரோனா".. புது பீதி!

Coronavirus mutated strain may create second wave in China, worries health commission.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வடகிழக்கு சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அப்டேட் ஆகி உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும், அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Recommended Video

    சீனாவை மிரட்டும் 'அப்டேட்டட் கொரோனா'.. புது பீதி!

    பொதுவாக வைரஸ்களில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று டிஎன்ஏ வகை வைரஸ் இன்னொன்று ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். இதில் டிஎன்ஏ வகை வைரஸ் பொதுவாக உருமாற்றம் அடையாது. ஆனால் ஆர்என்ஏ வகை வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடையும்.

    அதாவது இந்த ஆர்என்ஏ வகை ஒருவர் உடலில் இருந்து இன்னொருவர் உடலுக்கு செல்லும் போது அதன் உருவத்திலும் செயல்பாட்டிலும் உருமாற்றம் ஏற்படும். இதை mutation என்று கூறுவார்கள்.

    கொரோனா மாறுகிறது

    கொரோனா மாறுகிறது

    இந்த கொரோனா வைரஸ் அப்படித்தான் தற்போது mutate ஆகிக்கொண்டே இருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் போது இந்த வைரஸ் உருமாற்றம், பண்பு மாற்றம் அடைகிறது. இந்த நிலையில் உலகில் இதுவரை 10 வகையான கொரோனா mutate பரவி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ் மொத்தம் 10 வகைகளில் அப்டேட் ஆகியுள்ளது. இதில் சில வகை வைரஸ் மிகவும் ஆபத்து ஆனது ஆகும்.

    வைரஸ் ஆபத்து

    வைரஸ் ஆபத்து

    வுஹனில் தோன்றிய வைரஸ், அமெரிக்காவில் பரவும் கொரோனா, ஐரோப்பாவில் பரவும் கொரோனா என்று 10 வகை உள்ளது. எல் வகை வைரஸ், ஆர் வகை வைரஸ் என்று நிறைய வகையான வைரஸ்கள் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் நான்கு வகையான வைரஸ்கள் பரவ தொடங்கி உள்ளது. சவுதியில் பரவும் வைரஸ் வகை, வுஹனில் தோன்றிய வைரஸ், அமெரிக்காவில் பரவும் கொரோனா, ஐரோப்பாவில் பரவும் கொரோனா ஆகியவை இந்தியாவில் பரவி வருகிறது.

    தென் சீனா வைரஸ்

    தென் சீனா வைரஸ்

    இந்த நிலையில் வடகிழக்கு சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அப்டேட் ஆகி உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும், அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். தற்போது வடகிழக்கு சீனாவில் பரவி வரும் கொரோனா வித்தியாசமாக இருக்கிறது. அதன் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கிறது. இதனால் இதன் பரவலை தடுக்க முடியவில்லை.

    என்ன புலம்பல்

    என்ன புலம்பல்

    இது தொடர்பாக அங்கு உள்ள தேசிய சுகாதார கமிஷன் புலம்பி இருக்கிறது. அதிகபட்சமாக கொரோகனா வைரஸ் 21 நாட்கள்தான் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும். இதை incubation period என்று கூறுவார்கள். இதனால் ஒருவரை அதிகமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தினால் போதுமானது. ஆனால் தற்போது பரவும் கொரோனா 21 நாட்களுக்கு பின்பும் கூட பரவுகிறது.

    எத்தனை நாள் தனிமை

    எத்தனை நாள் தனிமை

    இதனால் சிலரை எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தினாலும் பலன் இல்லை. அவர்கள் அவர்களுக்கே தெரியாமல் கொரோனாவை பரப்பி வருகிறார்கள். அதேபோல் இப்போது வரும் இந்த புதிய கேஸ்களுக்கு அறிகுறியே இல்லை. இதனால் பலரின் குடும்பங்களில் கேஸ்கள் பரவி வருகிறது. புதிதாக பரவி வரும் கொரோனாவின் இயல்பை புரிந்து கொள்ள முடியவில்லை.

    வுஹன் வைரஸ் நிலை

    வுஹன் வைரஸ் நிலை

    இதற்கும் வுஹனில் தோன்றிய கொரோனா வைரசுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் குணமடைய நீண்ட நாட்கள் ஆகிறது. சிலருக்கு சோதனையில் கொரோனா இருப்பது கூட தெரிவதில்லை. இந்த வைரஸ் பெரிய அளவில் அப்டேட் ஆகியுள்ளது. ஆனால் இவர்களுக்கு காய்ச்சல் பெரிய அளவில் இல்லை. நெஞ்சுவலியும் இல்லை. ஆனால் திடீர் என்று பலியாகிறார்கள் என்று அந்த கமிஷன் கூறியுள்ளது.

    மீண்டும் செகண்ட் வேவ்

    மீண்டும் செகண்ட் வேவ்

    இதனால் சீனாவில் மீண்டும் செகண்ட் வேவ் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. அங்கு தற்போது 82965 கேஸ்கள் உள்ளது. இதில் 4634 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 82 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. வடகிழக்கு சீனாவில் மட்டும் புதிய கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. இந்த புதிய கேஸ்கள் வித்தியாசமாக இருப்பதால் மக்கள் அச்சம் அடைய தொடங்கி உள்ளனர்.

    English summary
    Coronavirus mutated strain may create second wave in China, worries health commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X