For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வுகான் சந்தையிலிருந்து கொரோனா உருவாகவில்லை.. புதிய ஆய்வுகளால் நீடிக்கும் குழப்பம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வுகான் மார்க்கெட்டில் இருந்து வெளியேறவில்லை என புதிய ஆய்வுகளில் தகவல்கள் வெளியானதால் குழப்பம் எழுந்துள்ளது.

சீனாவில் வுகானில் உள்ள விலங்குகளின் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அந்த வைரஸ் உலக நாடுகளில் பரவத் தொடங்கியதும் அந்த வுகான் வெட் மார்க்கெட் சந்தை மூடப்பட்டது.

இந்த சந்தையிலிருந்து ஒருவர் கொரோனா வைரஸை மற்றவர்களுக்கு பரப்பியதாக கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் சுமார் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இதனால் 57 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வுபுதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

எனினும் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது. இந்த வைரஸ் வுகானில் உள்ள வைரலாஜி பரிசோதனைக் கூடத்தில் இருந்து வேண்டுமென்றே கசியவிடப்பட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை வுகான் பரிசோதனை கூடம் அண்மையில் மறுத்தது.

அரசியல்

அரசியல்

இந்த நிலையில் இந்த வைரஸ் பரவ தொடங்கியதும் வவ்வால் பெண் ஷீ ஜெங்லி மாயமானார். இதனிடையே அண்மையில் அந்த பெண் சீன தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் இந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமான பிரச்சினை. ஆனால் இது அறிவியல் மற்றும் அரசியலாக்கப்படுகிறது என்று கூறினார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த வைரஸ் வுகான் சந்தையிலிருந்து வெளியேறவில்லை என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி அமைப்பு தனது ஆய்வின் மூலம் வுகான் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில் கொரோனா வைரஸ் உருவானது என்பதை மறுத்துள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் வெறும் தொடக்கம் தான் - Bat Women எச்சரிக்கை
    வுகான் சந்தை

    வுகான் சந்தை

    இதுகுறித்து தனது ஆய்வறிக்கையில் அந்த அமைப்பு கூறுகையில் வைரஸின் முதல் முதலாக தோன்றியது வுகான் சந்தையில் இருக்காது. அங்குள்ள விலங்குகளுக்கு கொரோனா உறுதியாகவில்லை. இது வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது. கொரோனா வைரஸ் வுகான் சந்தையில் தொற்றியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த வைரஸ் வுகான் சந்தையிலிருந்தும் பரவவில்லை, வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து பரவவில்லை என்றால் அது எங்கிருந்துதான் பரவியது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

    English summary
    Reports says that Coronavirus not really start at Wuhan Market.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X