For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்!

சீனாவில் தற்போது கொரோனா காரணமாக வெறும் 1,863 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் தற்போது கொரோனா காரணமாக வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் உள்ள எல்லோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர்.

கொரோனா வைரஸ்.. உலகமே அமைதியாக இருந்த ஒரு நாளில் டிசம்பர் 1ம் தேதி முதல் நபர் கொரோனா வைரஸோடு சீனாவில் வுஹனில் அனுமதி ஆனார். அதன்பின் சீனாவின் வுஹன் நகரத்தில் மட்டும் வரிசையாக 37 பேர் கொரோனா வைரஸ் தாக்கி அனுமதி ஆனார்கள்.

வுஹன் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்போது தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுக்க மொத்தம் 938,370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பையில் 3 நாள் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் மும்பையில் 3 நாள் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் மீது புகார்

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 47,286 பேர் பலியாகி உள்ளனர். 195,387 பேர் இதில் இருந்து இதுவரை விடுபட்டு உள்ளனர். அதிகமாக அமெரிக்காவில் 215,344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5112 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13155 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 104,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9387 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க பல நாடுகளில் இதே தீவிரத்துடன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் நிலை

சீனாவின் நிலை

ஆனால் உலகில் முதல் முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் தற்போது நிலை இவ்வளவு மோசமாக இல்லை. சீனாவில் மொத்தமாக கொரோனா காரணமாக இதுவரை 81,589 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு தற்போது 76,408 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1863 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் அங்கு 3,318 பேர் பலியாகி உள்ளனர்.

மொத்தமாக கட்டுப்படுத்திவிட்டது

மொத்தமாக கட்டுப்படுத்திவிட்டது

சீனாவில் தற்போது கொரோனா முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அங்கு தினமும் 15-30 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்படுகிறது. அதிலும் 30 பேர் வரை வெளிநாட்டு பயணிகள். புதிதாக உள்நாட்டு மக்களுக்கு அங்கு கொரோனா இல்லை. அதேபோல் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் 700 பேருக்கும் குறைவாகவே மொத்தமாக கொரோனா ஏற்பட்டுள்ளது.

எப்படி கட்டுப்படுத்தியது

எப்படி கட்டுப்படுத்தியது

இதுதான் தற்போது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சீனா எப்படி இவ்வளவு வேகமாக நோயாளிகளை குணப்படுத்தியது. ஒரு நோயாளியை தற்போது இருக்கும் சாதாரண மருத்துவ முறைகளில் குணப்படுத்த குறைந்தது 21 நாட்கள் ஆகும். அதிலும் தீவிரமாக நோயாளிகளை குணப்படுத்த 30 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் 76,408 நோயாளிகளை 50 நாட்களில் (பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து) சீனா குணப்படுத்தி உள்ளது.

மருந்தை வைத்துக் கொண்டு மறைக்கிறதா?

மருந்தை வைத்துக் கொண்டு மறைக்கிறதா?

கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லை. ஆனாலும் இந்த சாதனையை சீனா செய்துள்ளது. இதுதான் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மருந்தே இல்லாமல் சீனா எப்படி இத்தனை நோயாளிகளை குணப்படுத்தியது. அதிலும் இவ்வளவு வேகமாக குணப்படுத்தி உள்ளது என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவும் போது, தங்கள் நாட்டிற்குள் இந்த வைரசை எப்படி சீனா பிற மாகாணங்களுக்கு பரவ விடாமல் தடுத்தது என்று கேள்வி எழுந்துள்ளது.

வேறு சில பெரிய நாடுகளே திணறுகிறது

வேறு சில பெரிய நாடுகளே திணறுகிறது

உலகில் மிக சிறப்பான மருத்துவ வசதி கொண்ட நாடுகள்தான் இத்தாலி மற்றும் ஸ்பெயின். ஆனால் அங்கும் கூட கொரோனாவிற்கு எதிரான போராட்டங்கள் மிக கடினமானதாக இருக்கிறது. உலகம் முழுக்க செல்லும் கியூபா மருத்துவர்களே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் சீனாவின் மருத்துவத்துறை என்பது கடந்த 10 வருடத்தில் வளர்ந்த ஒன்று. அப்படி இருக்கும் போது, சீனா எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தியது என்று கேள்வி எழுந்துள்ளது.

 வேறு சிகிச்சை முறை உள்ளதா?

வேறு சிகிச்சை முறை உள்ளதா?

கொரோனா தொடர்பாகவும் அதில் இருந்து சீனா தப்பித்தது தொடர்பாகவும் இரண்டு முக்கியமான கேள்விகள் உலகம் முழுக்க சீனாவிற்கு எதிராக எழுந்துள்ளது.

1. கொரோனாவிற்கு மருந்து இல்லாமல் இத்தனை நோயாளிகளை, இவ்வளவு வேகமாக சீனா எப்படி குணப்படுத்தியது. மருந்துகளை வைத்துக்கொண்டு சீனா மறைக்கிறதா?

2. உலகின் மூலை முடுக்கெல்லாம், ஏன் அமேசான் காட்டிற்கு கூட பரவிய கொரோனா வைரஸை எப்படி சீனா தன் நாட்டில் உள்ள பிற மாகாணங்களுக்கு பெரிய அளவில் பரவ விடாமல் தடுத்தது என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Coronavirus: Only 1863 patients are left in Hospital, How China cured 76,408 people from the pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X