For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெயினில் செத்து மடியும் மக்கள்.. ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கி 913 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

மேட்ரிட்: ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கி மிக அதிகபட்சமாக 913 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7716 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

    Worldometer வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஸ்பெயினில் 913 பேர் இறந்தனர். இதன் காரணமாக உயரிழப்பு எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது..

    coronavirus outbreak: Spain records highest death toll with 913 in 24 hrs

    இதேபோல், ஒரே நாளில் 7,845 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,956 ஆக உள்ளது. அவர்களில், 16,780 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர்.

    ஸ்பெயினில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 63, 460 பேரில் 5, 231 பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஸ்பெயினில் மிக கொடுமையாக 12298 சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த தகவலை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. 3 வாரங்களாக ஸ்பெயினில் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் அங்கு வெளியில் செல்ல முடியாது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 812 பேர் இறந்த நிலையில், செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி மிக அதிகபட்சமாக 913 பேர் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொரோனா... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர அரசு உருவாக்கிய சூப்பர் கருவி கொரோனா... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர அரசு உருவாக்கிய சூப்பர் கருவி

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி சீனாவில் மொத்தம் 3, 304 பேர் இறந்துள்ளனர், அங்குதான் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியது. உலகிலேயே மிக அதிகபட்சமாக 11, 591 மக்கள் இத்தாலியில் இதுவரை இறந்துள்ளார்கள். உலகளவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 37, 637 பேர் இறந்துள்ளார்கள்.

    English summary
    913 people died in Spain as of Tuesday morning, taking the total to 7,716.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X