For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவி செய்வது போல கபட நாடகம்.. இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.. வெளியான ரகசியம்!

உதவி செய்வது போல நாடகம்.. இத்தாலியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா!

Google Oneindia Tamil News

வாஷிங்க்டன் : கொரோனா வைரஸால் சீனா முதன்முதலில் பாதிக்கப்பட்டது. அப்போது சீனா மீது உலக நாடுகள் இரக்கப்பட்டன.

Recommended Video

    உதவி செய்வது போல நாடகம்... வெளியான சீனாவின் இன்னொரு முகம்

    பல நாடுகள் சீனாவுக்கு உதவி செய்தன. இத்தாலி மருத்துவ பாதுகாப்பு கவசங்களை டன் கணக்கில் இலவசமாக கொடுத்து உதவியது.

    இத்தாலியிடம் இலவசமாக பெற்ற அதே பாதுகாப்பு கவசங்களை இப்போது பணம் பெற்றுக் கொண்டு அதே இத்தாலிக்கு அனுப்பி உள்ளது சீனா. ஆனால், வெளி உலகுக்கு தாங்கள் இலவசமாக அளித்து உதவி செய்வது போல நாடகம் போட்டுள்ளது. இந்த ரகசியம் இப்போது அம்பலம் ஆகி உள்ளது.

    சீனாவில் பரவிய வைரஸ்

    சீனாவில் பரவிய வைரஸ்

    2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால், அந்த தகவலை நீண்ட நாட்கள் மூடி மறைத்தது சீனா, அதற்குள் அந்த வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் வெகுவாக பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் துவங்கியது.

    உலக நாடுகள் இரக்கம்

    உலக நாடுகள் இரக்கம்

    இந்த தகவல் வெளியான சில நாட்களில் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பல மடங்கு அதிகரித்தது. 80,000 பேருக்கும் மேல் வெகு சில நாட்களில் பாதிக்கப்பட்டனர். அப்போது சீனா மீது இரக்கப்பட்டு பல நாடுகளும் உதவி செய்தன.

    இத்தாலி செய்த பெரும் உதவி

    இத்தாலி செய்த பெரும் உதவி

    சுகாதாரத்தில் முன்னணியில் இருக்கும் இத்தாலி டன் கணக்கில் மருத்துவ பாதுகாப்பு கவசங்களை இலவசமாக அனுப்பி வைத்தது. அப்போது இத்தாலி தன் நாட்டில் மக்கள் ஆயிரம், ஆயிரமாக பலியாவார்கள் என எண்ணி இருக்கவில்லை. பின்னர், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

    பாதுகாப்பு கவசங்களை அனுப்பியது

    பாதுகாப்பு கவசங்களை அனுப்பியது

    அப்போது, பல ஆயிரம் பேர் இறந்த நிலையில், மருத்துவ வசதிகள் போதாமல், மருத்துவ பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தடுமாறி வந்த இத்தாலிக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுக்க சீனா மருத்துவ பாதுகாப்பு கவசங்களை அளிப்பதாக கூறியது. அனுப்பியும் வைத்தது.

    கபட நாடகம்

    கபட நாடகம்

    உலகமே சீனா சரியான சமயத்தில் பெரிய உதவி செய்து விட்டதாக நினைத்த நிலையில், அந்த நாடு குறைந்த அளவு பாதுகாப்பு கவசங்களை மட்டுமே இத்தாலிக்கு அனுப்பி இருப்பதும், அதுவும் பணம் கொடுத்து அதை வாங்கிக் கொள்ள இத்தாலியை கட்டாயப்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சீனாவின் இந்த கபட நாடகம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    அமெரிக்க அதிகாரி தகவல்

    அமெரிக்க அதிகாரி தகவல்

    இத்தாலி இலவசமாக கொடுத்ததை, அதே இத்தாலியிடம் பணத்திற்கு விற்றுள்ளது சீனா. இது குறித்த தகவல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தில் இருக்கும் ஒரு அதிகாரி ஸ்பெட்டேட்டர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

    சீனாவில் இயல்பு நிலை

    சீனாவில் இயல்பு நிலை

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல், உலகிற்கே பரவ வைத்தது சீனா தான். தற்போது சீனாவில் பல இடங்களில் இயல்பு நிலை இருப்பதாக சீன அரசே கூறுகிறது. ஆனால், உலகின் எந்தா நாட்டிலும் இயல்பு நிலை இல்லை. கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் உலகமே தடுமாறுகிறது.

    ஈவு இரக்கம் இல்லை

    ஈவு இரக்கம் இல்லை

    இந்த நேரத்தில் இந்த நோய் பரவியதற்கு காரணமான சீனா, நிச்சயம் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், இப்போதும் கூட பணத்திற்காக மருத்துவ உபகரணங்களை விற்க முயல்வதும், அதுவும் இலவசமாக கொடுத்த நாட்டிற்கே விற்க முயல்வதும், அதை வெளியே மறைத்து உதவி செய்வது போல நாடகம் ஆடுவதும் சீனாவின் ஈடு, இரக்கம் இல்லாத குணத்தை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

    வியாபார நோக்கமா?

    வியாபார நோக்கமா?

    சீனா இந்த வியாபார நோக்கத்திற்காகவே கொரோனா வைரஸை பரப்பியதோ என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்ட பயோ ஆயுதமாக இருக்கலாம் என்று உலக நாடுகள் சந்தேகப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    China trying to sell the PPE to Italy which they got from Italy as a donation. China’s behaviour shocked the entire world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X