For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொஞ்சம் அப்டேட் ஆகி உள்ளது.. ஒரே மாதிரியான டிஎன்ஏ.. எறும்புத்திண்ணி மூலம் பரவியதா கொரோனா? பின்னணி!

உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சமயத்தில் பங்கோலின் எனப்படும் எறும்பு திண்ணியிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சமயத்தில் பங்கோலின் எனப்படும் எறும்பு திண்ணியிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்

    ''எங்கோ ஒரு தவறான பன்றி.. எங்கோ ஒரு தவறான வௌவாலை சந்தித்துவிட்டது. இந்த வைரஸில் வௌவால் மற்றும் பன்றியின் டிஎன்ஏக்கள் இருக்கிறது. இது வௌவாலிடம் இருந்து மட்டும் வரவில்லை. பன்றியிடம் இருந்தும் வந்துள்ளது'' இது 2011ல் கன்டேஜியன் என்ற ஆங்கில படத்தில் வரும் வசனம்.

    உலகில் பல நாடுகளை பாதிக்கும் பெயர் தெரியாத வைரஸ் ஒன்றை குறித்து மருத்துவர்கள் பேசிக்கொள்ளும் வசனம். ஒரு வைரஸ் எப்படி உருவானது, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் போது, இந்த வசனம் பேசப்படும். 9 வருடங்கள் கழித்து இந்த படத்தின் வசனம் தற்போது உண்மையாகி இருக்கிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    ஆம், தற்போது பரவி வரும் கொரோனா வைரசுக்கும் இந்த வசனத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் டிஎன்ஏ இயற்கையான ஒரு வைரஸ்தான் இது என்பதற்கான ஆதாரங்களை உலக விஞ்ஞானிகள் அடுக்குகிறார்கள். இந்த வைரஸ் வௌவாலிடம் இருந்து வந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதே சமயம் இது எறும்பு திண்ணி என்று தமிழில் அழைக்கப்படும் பங்கோலின் விலங்கிடம் இருந்தும் வந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    பங்கோலின் என்றால் என்ன

    பங்கோலின் என்றால் என்ன

    பங்கோலின் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகை எறும்பு திண்ணி உயிரினம் ஆகும். வௌவாலிடம் எப்படி கொரோனா வைரஸ், நிப்பா வைரஸ் செல்கள் அதிகம் உள்ளதோ அதேபோல். பங்கோலினிலும் மிக அதிக அளவில் வைரஸ் செல்கள் இருக்கிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த பங்கோலின் சீனர்களின் உணவு கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒன்று. சீனர்கள் அதிக அளவில் இதை உட்கொள்கிறார்கள்.

    மிக கவனமாக இருக்க வேண்டும்

    மிக கவனமாக இருக்க வேண்டும்

    இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பங்கோலினை மிக கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை வளர்ப்பது துவங்கி உணவாக சமைப்பது வரை அனைத்திலும் மிக அதிக கவனம் அவசியம். இதை குறிப்பிட்ட வெப்பநிலையில்தான் சமைக்க வேண்டும். இந்த பங்கோலின் மூலம் மனிதர்களுக்கு பல்வேறு வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் கடத்தல்

    சீனாவில் கடத்தல்

    ஆனால் இதையும் மீறி சீனாவில் கள்ள மார்க்கெட்டில் பங்கோலின் அதிகம் விற்பனை ஆகிறது. மலேயான் வகை பங்கோலின் ஆகிய அதிக அளவில் கடத்தப்பட்டு மார்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அனுமதி இன்றி பல இடங்களில் பங்கோலின் விற்பனை ஆகிறது. இதை தடுக்க சீன அரசு பெரிய அளவில் முயன்றது. ஆனாலும் சீன அரசின் கட்டுப்பாட்டை மீறி இந்த பங்கோலின் வேகமாக வளர்ந்து வருகிறது.

     வௌவால் உள்ளது

    வௌவால் உள்ளது

    இந்த கொரோனா வைரஸ் பங்கோலினிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணம் உள்ளது. பொதுவாக கொரோனா குடும்பத்தில் உள்ள 7 வைரஸில் 5 வைரஸ்கள் வௌவாலிடம் காணப்படுகிறது. தற்போது COVID -19 ஐ பரப்பி வரும் SARS - COV -19 வகை கொரோனா வைரஸும் வௌவாலிடம் காணப்படுகிறது. ஆனால், ஆனால் ஒரு சில விஷயங்களில் மாற்றம் உள்ளது. அதுதான் பங்கோலின் மீது சந்தேகத்தை வர வைத்துள்ளது.

    சந்தேகம் என்ன?

    சந்தேகம் என்ன?

    வௌவாலிடம் காணப்படும் கொரோனா வைரஸ் மனிதரிடம் உடம்பிற்குள் சென்றால் உடனே அறிகுறி ஏற்படும். சார்ஸ் வைரஸ் பரவிய போது கூட இப்படி உடனே அறிகுறி ஏற்பட்டது. அதேபோல் இந்த பழைய சார்ஸ் வைரஸ் மூலம் மனிதர்களின் எதிர்ப்பு சக்தி செல்களை ஏமாற்ற முடியாது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவுகிறது, மனித எதிர்ப்பு சக்தி செல்களை ஏமாற்றுகிறது. இந்த முறை கொரோனா வைரஸ் அப்டேட் ஆகி உள்ளது.

    பங்கோலின் பரவல்

    பங்கோலின் பரவல்

    இங்குதான் பங்கோலின் மீது சந்தேகம் வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் டிஎன்ஏ அப்படியே பங்கோலின் உடன் ஒத்துப்போகிறது. கொஞ்சம் வௌவால் டிஎன்ஏ, அதிகமாக பங்கோலின் டிஎன்ஏ இதில் காணப்படுகிறது. 90% இதில் பங்கோலின் டிஎன்ஏ இருப்பதை உறுதி செய்து உள்ளனர். இந்த பங்கோலின் மற்றும் வௌவால் இடையே எங்கேயோ ஏற்பட்ட சந்திப்பு இந்த வைரஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    கூடுதலாக ஏதாவது ஒரு விலங்கு

    கூடுதலாக ஏதாவது ஒரு விலங்கு

    வௌவால் , பங்கோலின் மற்றும் வேறு சில விலங்குகள் சிலவற்றின் டிஎன்ஏ (கொஞ்சமாக இருக்கிறது) இதில் இருக்கிறது. அதனால் பங்கோலின் மார்க்கெட்டில், பிற விலங்குகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போது இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் வௌவால்கள் , பங்கோலின் ஒன்றாக வைத்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது இந்த வைரஸ் பரவி இருக்கலாம்.

    இணைந்து பரவி இருக்கலாம்

    இணைந்து பரவி இருக்கலாம்

    அதாவது எங்கோ ஒரு தவறான வௌவால் ஒரு தவறான பங்கோலினை சந்தித்துவிட்டது. கன்டேஜியன் படத்தில் சொன்னது போலவே இங்கு நடந்துள்ளது. என்ன ஒரு வித்தியாசம் பன்றிக்கு பதில் இங்கு பங்கோலின். அவ்வளவுதான். இதில் சமைக்கப்பட்ட உணவு மூலம் இந்த வைரஸ் வேறு சிலருக்கு பரவி இருக்கலாம். அல்லது பங்கோலின் விற்கப்பட்ட வுஹன் மார்க்கெட்டில் அன்று இருந்தவர்கள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம். வுஹன் மார்கெட்டிற்கு அன்று சென்றவர்களில் 27 பேருக்குத்தான் உலகில் முதலில் கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பரவி இருக்கலாம்

    இப்படி பரவி இருக்கலாம்

    இப்போதைக்கு சீன மருத்துவர்கள் கொடுக்கும் தியரி இதுதான். ஆனால் போக போக செய்யப்படும் ஆராய்ச்சிகள் இதன் பின் இருக்கும் உண்மையை வெளியே கொண்டு வரலாம். உண்மையில் கொரோனா எப்படி வந்தது, எது மூலம் பரவியது என்ற உண்மை போக போக தெரிய வரும். அது வரை இந்த கொரோனா வைரஸ் குறித்த நிறைய செய்திகள் உலா வரும். சமயங்களில் இந்த வைரஸ் எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்!

    English summary
    Coronavirus: Pangolins have almost the same DNA as the virus - report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X