For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் வுகானில் கொரோனா நோயாளிகள்.. டாக்டர்கள் சேர்ந்து உற்சாக நடனம்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் வுகானில் கொரோனா நோயாளிகள்.. டாக்டர்கள் சேர்ந்து உற்சாக நடனம்.. வைரல் வீடியோ

    சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கை அளிப்பதற்காக இந்த நடன பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

    சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சீனாவின் வுகான், பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

     இதுதான் மாமா.. இது அத்தை.. இது சித்தப்பா.. இது யாரு சொல்லு! இதுதான் மாமா.. இது அத்தை.. இது சித்தப்பா.. இது யாரு சொல்லு!

     இரவு பகலாக சிகிச்சை

    இரவு பகலாக சிகிச்சை

    வுகானில் மட்டும் சுமார் 20000 டாக்டர்கள் மற்றும் பல்லாயிரம் நர்சுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். வுகான் நகரில் அனைவருக்குமே கிட்டத்தட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் பணியினை சீன அரசு முடுக்கி உள்ளது. இதற்காக நகரம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    நம்பிக்கை அளித்தார்

    நம்பிக்கை அளித்தார்

    இதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது இதன்படி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனைக்கு நேரில்சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உற்சாகமாக பேசினார். இதேபோல் வுகானில் சிகிச்சை பெறுபவர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஜின்பிங் பேசினார். மருத்துவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.

    மருத்துவர்கள் நடனம்

    மருத்துவர்கள் நடனம்

    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஹவாகனின் மேக்ஷிப்ட் மருத்துவமனையில் நடனம் ஆடினார்கள். நோயாளிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இந்த நடனத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    வயதானவர்களே சாவு

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த பலரும் வயதானவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். 60வயதை கடந்த மற்றும் 80வயதை கடந்தவர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியாக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நடன பயிற்சி அளித்தனர்.

    English summary
    Coronavirus patients and medical staff dance at Wuhan's makeshift hospitals to keep their spirits up and boost immunity
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X