For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூக்கி வாரிப்போடும் துருக்கி.. விடாத தொற்று.. 56 லட்சம் பேர் வைரஸுக்கு உயிரிழப்பு.. கலங்கும் மக்கள்

துருக்கியில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது

Google Oneindia Tamil News

அங்காரா: துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை நெருங்கிவிட்டதால், அந்நாட்டு மக்கள் கிலியில் உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நாட்டுத் தயாரிப்பில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன..

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

அந்த வகையில் துருக்கி அரசும் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்தது.. அதற்கு துர்கோவாக் என்று பெயர்.. ஆனால், இது பயன்பாட்டுக்கு இன்னும் கொண்டு வரப்படாமல் சோதனை கட்ட பரிசோதனையில் உள்ளதாக தெரிகிறது.

 துருக்கி

துருக்கி

அதற்குள் துருக்கியில் ஏப்ரல், மே மாதங்களில் தொற்று பாதிப்பு எகிறிவிட்டது.. தீவிரமான கட்டுப்பாடுகளை அந்நாடு கொண்டு வந்தது.. இதற்கு பிறகு ஜுன் மாதம் முதல் தொற்று மெல்ல குறைய ஆரம்பித்தது.. துருக்கியில் தொற்று குறைய ஆரம்பித்ததால், தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.. ஆனால் இது இன்னும் சிக்கலை கொண்டு போய்விட்டுவிட்டது.

 பாதிப்பு

பாதிப்பு

தொற்று நாளுக்கு நாள் துருக்கியில் அதிகமாகி கொண்டே வருகிறது.. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது உள்ள நிலையில், துருக்கி 7-வது இடத்தில் உள்ளது... கடந்த 24 மணி நேரத்தில் 16,809 பேருக்கு இங்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 வைரஸ்

வைரஸ்

ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது... தொற்று பாதித்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 54.26 லட்சத்தை கடந்துள்ளது...

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

இப்போதைக்கு சுமார் 1.40 லட்சத்துக்கு அதிகமானோர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்... எனவே, தினம் தினம் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால், தடுப்பூசியை செலுத்துவதில் அந்நாட்டு அரசு முனைப்பு காட்டி வருகிறது.. அத்துடன் மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

English summary
Coronavirus positive case crosses 56 lakhs in Turkey
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X