For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையை செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Corona vaccine : முன்பே வாங்கி குவிக்கும் ரஷ்ய கோடீஸ்வரர்கள்

    கொரோனா தடுப்பு மருந்து குறித்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்து சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது

    இன்னொரு பக்கம் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.வெறும் மூன்று மாத சோதனையில் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

    என்ன வெற்றி

    என்ன வெற்றி

    மனிதர்கள் மீது வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த நாட்டு ராணுவத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது.

    மருந்து பயன்படுத்தப்பட்டது

    மருந்து பயன்படுத்தப்பட்டது

    இந்த ஆராய்ச்சிக்காக அந்த நாட்டு ராணுவம், தனது ராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது. அவர்கள் மீதுதான் ரஷ்யாவின் பெயர் வைக்கப்படாத கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது. இந்த மனித சோதனையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெற்றி அடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், மருந்து பெரிய அளவில் பயன் அளித்து உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்து இருக்கிறது.

    மக்கள் பயன்பாடு

    மக்கள் பயன்பாடு

    இந்த நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையை செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ருசிலான் திசாலிகோவ் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மக்களின் மீது இதை பயன்படுத்த போகிறோம், என்று அவர் அறிவித்துள்ளார்.

    அறிவிப்பு இல்லை

    அறிவிப்பு இல்லை

    மக்களின் பயன்பாட்டிற்கு இதை விடப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த மருந்தின் உற்பத்தி பெரிய அளவில் எப்போது தொடங்கும் என்றும் ரஷ்யா அறிவிக்கவில்லை. அதேபோல் மூன்றாம் கட்ட சோதனைகள் எப்போது தொடங்கும் என்றும் ரஷ்யா அறிவிக்கவில்லை. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை மொத்தம் 38 பேர் மீது சோதனை செய்யப்பட்டது. ஜூன் 18ம் தேதி 18 பேர் மீதும், ஜூன் 23ம் தேதி 20 பேர் மீதும் இந்த தடுப்பு மருந்தை சோதனை செய்து இருக்கிறார்கள்.

    மூன்று எங்கு

    மூன்று எங்கு

    இதில்ரஷ்யா, சவுதி அரேபியா, அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். ஆகஸ்ட் 3ம் தேதியில் இருந்து இந்த சோதனைகள் செய்யப்பட உள்ளது. அதன்பின் இந்த மருந்து செப்டம்பர் மாதம் மக்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறர்கள். 2020 இறுதிக்குள் 3 கோடி மருந்துகளை தனது நாட்டிற்குள் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.

    ஏன் இந்த அவசரம்

    ஏன் இந்த அவசரம்

    அதே சமயம் ரஷ்யாவில் பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். எப்படி முழுமையாக சோதனை செய்யாமல் மனிதர்களுக்கு இதை அளிக்கலாம். இது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்யாமல் எப்படி மக்களுக்கு கொடுக்க முன்வரலாம். ஏன் அரசு இவ்வளவு அவசரப்படுகிறது. இது பெரிய ரிஸ்க் என்று அந்நாட்டு மக்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    English summary
    Coronavirus: Russia Defence Ministry announces that it will roll out the Vaccine people use.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X