For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Sputnik V வேக்சின்.. இந்தியாவால் மட்டுமே சாத்தியம்.. அவசர "பார்ட்னர்ஷிப்பிற்கு" அழைக்கும் ரஷ்யா!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஸ்புட்னிக் -வி எனப்படும் கொரோனா வேக்சினை இந்தியாவில் உற்பத்தி செய்ய விருப்பப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து இதை உற்பத்தி செய்ய நினைக்கிறோம், இந்தியா நினைத்தால் மட்டுமே ஸ்புட்னிக் -வி வேக்சினை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

Recommended Video

    Corona vaccine போட்டுக்கொண்ட Putin மகள் இறந்துவிட்டதாக பரவிய Fake News| Oneindia Tamil

    உலகம் முழுக்க தற்போது கொரோனா வேக்சினை கண்டுபிடிப்பதற்கான ரேஸ் நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் நான்கிற்கும் அதிகமாக வேக்சின்கள் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது. சீனாவில் மூன்று வேக்சின்கள் மனித சோதனையில் உள்ளது.

    ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய வேக்சின் கடைசி கட்ட சோதனையை நிறைவு செய்ய போகிறது. இந்தியாவிலும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் வேக்சின் மனித சோதனையின் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. ரஷ்யா தாங்கள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியே விட்டோம் என்று அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா.. எப்படி போகிறது டிரெண்ட்? ஆறுதல் தருகிறதா, அச்சுறுத்துக்கிறதா? டேட்டாவை பாருங்க தமிழகத்தில் கொரோனா.. எப்படி போகிறது டிரெண்ட்? ஆறுதல் தருகிறதா, அச்சுறுத்துக்கிறதா? டேட்டாவை பாருங்க

    இந்தியா முக்கியம்

    இந்தியா முக்கியம்

    உலகம் முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க நாடுகள் தங்களுக்குள் சண்டை போடாத குறையாக போட்டியிட்டு வருகிறது. ஆனால் இந்த எல்லா நாடுகளும் ஒற்றுமையாக இருக்கும் இடம் என்றால் அது இந்தியாதான். ஆம் இந்த வல்லரசு நாடுகள் எல்லாம் தங்கள் வேக்சின் உற்பத்திக்காக இந்தியாவைதான் நாடி உள்ளது. உலக அளவில் தடுப்பு மருந்து உற்பத்தியை இந்தியாதான் வேகமாக செய்ய முடியும், அதிக அளவில் செய்ய முடியும் என்பதால் உலக நாடுகளை இந்தியாவை நாடி வருகிறது.

    சீரம் நிறுவனம்

    சீரம் நிறுவனம்

    இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தைதான் உலக நாடுகள் கவனிக்க தொடங்கி உள்ளது. உலகியேயே ஒரே நாளில் அதிக வேக்சின்களை உருவாக்கும் வசதியை கொண்ட நிறுவனங்களில் சீரம் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. ஒரே மாதத்தில் சீரம் நிறுவனத்தில் இருந்து 10 லட்சம் வேக்சின் டோஸ்களை உருவாக்க முடியும். இவர்களிடம் மாஸ் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருப்பதால், உலக நாடுகள் சீரம் நிறுவனத்தை அணுகி வருகிறது.

    ரஷ்யா முடிவு

    ரஷ்யா முடிவு

    இந்த நிலையில்தான் தங்கள் கொரோனா வேக்சின் உற்பத்தியை இந்தியாவில் செய்ய ரஷ்யா முடிவு எடுத்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த மருந்தை அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரஷ்யா முடிவு செய்துள்ளது. தற்போது மருத்துவர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் சிலருக்கு இந்த வேக்சின் போடப்பட்டு வருகிறது.

    என்ன பெயர்

    என்ன பெயர்

    இந்த தடுப்பு மருந்துக்கு ஸ்புட்னிக்- வி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் 50 ஆயிரம் பேரிடம் இந்த மருந்தை சோதனை செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மருந்தை இந்தியாவில் மட்டுமே அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். அதனால் இந்தியாவுடன் பார்ட்னர்ஷிப் செய்ய நினைக்கிறோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ரஷ்யா சொன்னது என்ன

    ரஷ்யா சொன்னது என்ன

    இது தொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த வேக்சின் தற்போது நல்ல பயனை அளிக்க தொடங்கி உள்ளது. ரஷ்யா மீது உலக நாடுகள் நம்பிக்கை கொள்ள தொடங்கி உள்ளது. ஆனால் இதை அதிக அளவில் எப்படி உற்பத்தி செய்ய போகிறோம் என்பதுதான் பிரச்சனையே. ரஷ்யாவில் அதற்கான போதிய வசதிகள் இல்லை.

    இந்தியாவின் உதவி வேண்டும்

    இந்தியாவின் உதவி வேண்டும்

    இதற்காக இந்தியாவின் உதவியை நாட உள்ளோம். இந்தியா நினைத்தால் எங்கள் வேக்சினை வேகமாக உற்பத்தி செய்ய முடியும். உலக அளவில் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த மருந்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் அவர்கள் உடன் ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக இந்திய நிறுவனங்கள் உடன் பேசி வருகிறோம். விரைவில் மொத்த உற்பத்தி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்று, ரஷ்யா தெரிவித்துள்ளது.

    மருந்தின் பின்னணி

    மருந்தின் பின்னணி

    கடந்த மாதம் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்தது. வெறும் மூன்று மாத சோதனையில் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது.

    English summary
    Coronavirus: Russia asks partnership with India for Sputnik V production in mass quantity for world population.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X