For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் மனிதரிடம் இருந்து பரவிய கொரோனா... 10,000 மிங்க் விலங்குகள் உயிரிழப்பு!!

Google Oneindia Tamil News

உட்டா: அமெரிக்காவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 10,000 மிங்க் எனப்படும் விலங்குகள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மனிதரிடம் இருந்து இவற்றுக்கு தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சினில் உட்டா என்ற இடத்தில் மிங்க் விலங்குகள் பண்ணை இருக்கிறது. இந்த விலங்குகளின் மேல் தோலில் இருந்து ''ஃபர்'' எனப்படும் மென்மையான முடி எடுக்கப்படுகிறது. இங்கு சுமார் 10,000 மிங்க் விலங்குகள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து இருப்பதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Coronavirus spread from human to animals 10,000 minks dead at US farm

இதுகுறித்து டாக்டர் டீன் டெய்லர் அளித்திருக்கும் பேட்டியில், ''ஆகஸ்ட் மாதம் மிங்க் விலங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று இருந்தது. பின்னர் இது ஜூலை மாதம் குறைந்தது. இந்த நிலையில் தொற்று மனிதரிடம் இருந்து பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது'' என்றார்.

ஆரம்பக் கட்ட ஆராய்ச்சியில் மனிதரிடம் இருந்து மிங்க் விலங்கிற்கு கொரோனா பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், எங்கிருந்து, யாரிடம் இருந்து எவ்வாறு பரவியது என்பது குறித்து தெரியவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த விலங்கின் தோலை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருவதாக சிஎன்என் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Coronavirus spread from human to animals 10,000 minks dead at US farm

உட்டாவில் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் இந்த விலங்கிற்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது உட்டாவில் இருக்கும் இந்த விலங்குகள் பண்ணை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நெதர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய இடங்களிலும் மிங்க் விலங்கிற்கு தொற்று இருந்துள்ளது.

Coronavirus spread from human to animals 10,000 minks dead at US farm

அமெரிக்காவில் நாய், பூனை, புலி, சிங்கம் ஆகிய விலங்குகளிடமும் இந்த வைரஸ் பரவி இருந்ததாக அந்த நாட்டின் விவசாய தேசிய கால்நடை சேவை லேப் தெரிவித்துள்ளது. மனிதருக்கு ஏற்படும் அதே அறிகுறிகள்தான் விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல், கண்களில் மேல் வீக்கம் ஆகியவை காணப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்று ஏற்பட்ட மறுநாளே இந்த விலங்குகள் பெரும்பாலும் இறந்துள்ளன.

தமிழகத்துக்கு எளிதில் 200 டிஎம்சி தண்ணீர்...காவிரி-கோதாவரி திட்டம்...ராமதாஸ் புதிய கோரிக்கை!! தமிழகத்துக்கு எளிதில் 200 டிஎம்சி தண்ணீர்...காவிரி-கோதாவரி திட்டம்...ராமதாஸ் புதிய கோரிக்கை!!

கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்து நாட்டில் இருக்கும் இந்த விலங்குகள் பண்ணையில் தொற்று ஏற்பட்டுள்ளது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவலாம் என்ற அச்சத்தில் சுமார் 10,000 தாய் மிங்க் விலங்குகள் மற்றும் 50,000 குழந்தை மிங்க் விலங்குகளை கொன்றுள்ளனர்.

English summary
Coronavirus spread from human to animals 10,000 minks dead at US farm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X