For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவிற்கு எதிராக கைவிரித்த சீன அதிபர்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை, மிக வேகமாக அந்த வைரஸ் பரவி வருகிறது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை, மிக வேகமாக அந்த வைரஸ் பரவி வருகிறது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 52 பேர் பலியாகி உள்ளனர். 2000 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.

செம கலாய்.. குடியரசு தினத்தில் மோடிக்கு காங். செய்த ஸ்பெஷல் அமேசான் ஆர்டர்.. என்ன தெரியுமா? செம கலாய்.. குடியரசு தினத்தில் மோடிக்கு காங். செய்த ஸ்பெஷல் அமேசான் ஆர்டர்.. என்ன தெரியுமா?

சீனா எப்படி

சீனா எப்படி

சீனாவில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகி வருகிறது என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுகிறது. விலங்குகளிடம் இருந்து இன்னொரு மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று தெரிந்தால்தான் அதை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த நிலையில் கொரோனா வைரஸை மிகவும் கொடுமையானது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் காரணமாக மிகவும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். மிக துரிதமாக செயல்ப்பட்டு வருகிறோம். ஆனால் சில விஷயங்கள் நம்முடைய கையில் இல்லை.

மிக வேகம்

மிக வேகம்

மிக வேகமாக நாங்கள் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறோம். எல்லா நோயாளிகளையும் இங்கே கொண்டு வந்து ஒரே இடத்தில் சிகிச்சை மேற்கொள்ள போகிறோம். இது எப்படி உருவானது என்று அதிகாரிகள் இன்னொரு பக்கம் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த கடுமையான சூழ்நிலையை கவனிக்க ராணுவம் களமிறங்கி உள்ளது. ராணுவத்தின் மருத்துவர்கள்தான் நோயாளிகளை கவனித்து வருகிறார்கள்.

இப்போது எப்படி

இப்போது எப்படி

இப்போது எங்களால் உறுதியாக கூற கூடிய ஒரே விஷயம், இந்த வைரஸ் பரவுவதை எங்களால் தடுக்க முடியவில்லை, என்றுள்ளார். இதனால் தற்போது ஜி ஜிங்பிங் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாங்காங் போராட்டம் காரணமாக சீன அரசு நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வர்த்தக போரும் அந்த நாட்டை பாதித்தது தற்போது மிகப்பெரிய வைரஸ் அந்த நாட்டை கலங்க வைத்துள்ளது.

English summary
Coronavirus spreading too fast, couldn't control says China's President Xi Jing Ping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X