For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ்க் இல்லை.. உணவு இல்லை.. சீனாவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாஸ்க்குகளும் உணவு பொருட்களும் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்கு கூட வெளியேற முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் நோயால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் வூஹான் நகர்ப்பகுதி மீன் சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிகிறது.

கரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு கரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு

கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்

இதனால் அந்த நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்துள்ளது. மேலும் 10 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. காற்றில் பரவும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

சீனா

சீனா

வெளியே செல்லும் போது முகமூடி அணிந்து செல்கின்றனர். கூடுதலாக உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் சீனாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகம், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

சீனா

சீனா

இவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சீனாவில் தற்போது பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் பயின்று வரும் தமிழக மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக மாணவர்கள்

தமிழக மாணவர்கள்

அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே உணவு தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். கரோனா வைரஸ் காற்றில் பரவுவதால் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முகமூடி அணிவது அவசியமாகிறது. ஆனால் அதை வாங்குவதற்கு கூட இந்த மாணவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

உதவி

உதவி

இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மாணவர்களை தொடர்பு கொண்டு நோய் தொற்று குறித்து கேட்டறிந்தனர். அவர்களது தொடர்பு எண்களையும் மாணவர்களிடம் கொடுத்து உதவி தேவைப்படுமாயின் அழைக்குமாறு அறிவுறுத்தினர். உணவு, முகமூடி இல்லாததால் இ்ந்திய தூதரகத்தின் உதவியை மாணவர்கள் நாடியுள்ளனர்.

English summary
Tamilnadu students in China says about Coronavirus virus experience and they are running out of food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X