For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை காத்த ஹீரோ இறந்துவிட்டார்.. கொரோனாவை முதலில் கண்டுபிடித்து எச்சரித்த சீன டாக்டர் பலி.. ஷாக்!

கொரோனா வைரஸ் உருவானதை டாக்டர் ஒருவர் டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அதை மருத்துவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவை முதலில் கண்டுபிடித்த டாக்டர்... வெளியான திக் பின்னணி

    பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதை முதல் முதலில் கண்டுபிடித்து அரசை எச்சரித்த டாக்டர் தற்போது அதே நோய் வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளார். சீனாவை இந்த செய்தி மொத்தமாக உலுக்கி உள்ளது.

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சீனாவை சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்.

    சீனாவில் இருக்கும் வுஹன் மத்திய மருத்துவமனையில்தான் லி வென்லியாங் வேலை செய்கிறார். இவர் இந்த வைரஸ் தாக்குதலே அப்போதே கண்டிபிடித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    வேகமெடுத்த கொரோனா.. சீனாவில் ஒரே நாளில் 73 பேர் பலி.. 636ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. பீதியில் மக்கள்!வேகமெடுத்த கொரோனா.. சீனாவில் ஒரே நாளில் 73 பேர் பலி.. 636ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. பீதியில் மக்கள்!

     என்ன செய்கிறார்

    என்ன செய்கிறார்

    இவர் இருக்கும் வுஹன் நகரத்தில்தான் முதலில் வைரஸ் பரவியது. இவர் அங்கு பணியாற்றும் போது டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார். இவர்களை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார். இதனால் உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார். அதோடு அரசுக்கும் இதை தெரிவித்தார்.

     என்ன எச்சரிக்கைய

    என்ன எச்சரிக்கைய

    எச்சரிக்கை ஆனால் வென்லியாங்கை இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமுக வலைத்தளங்களில் குறிப்பிட கூடாது என்று சீன அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். மனதுக்கு விருப்பம் இன்றி கடைசியில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த நிலையில்தான் ஜனவரி 10ம் தேதி லி வென்லியாங் காய்ச்சல் வந்து படுத்துள்ளார்.அவருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

     எப்படி வந்தது

    எப்படி வந்தது

    வேறு ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க போய், லி வென்லியாங் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அந்த வைரஸ் பரவி உள்ளது. இதனால் உடனடியாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்பூவில் அதை போஸ்ட் செய்தார். இதன் மூலம்தான் உலகிற்கு இந்த வைரஸ் தாக்குதல் பற்றி தெரிய வந்தது. எனக்கு புதிய வகை வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் எனக்கு தெரிந்து மட்டும் 10 பேர் இதனால் பாதிக்க்கப்பட்டுள்ளனர். இதை வெளியே சொல்ல முயற்சித்த என்னை, சீன அரசு மிரட்டுகிறது, என்றார்.

    பலியானார்

    பலியானார்

    இந்த நிலையில் லி வென்லியாங் இன்று அதிகாலை இந்த நோய் தாக்குதல் காரணமாக பலியானார். ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லி வென்லியாங், இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இன்று காலை கொரோனா வைரஸ் தாக்குதலால் அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன்பின் இந்த நோய் தாக்குதலால் அவர் பலியானார். இது தொடர்பாக லி வென்லியாங்கிடம் சீன அரசு மன்னிப்பும், நன்றியும் தெரிவித்துள்ளது.

     ஹீரோ

    ஹீரோ

    தற்போது லி வென்லியாங்கை சீன மக்கள் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள். லி வென்லியாங் அந்த போஸ்ட் போடவில்லை என்றால் எல்லாம் தவறாக போய் இருக்கும். அரசு பல உண்மைகளை மறைத்து இருக்கும். லி வென்லியாங்க்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும், என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள். தன்னுடைய உயிரை கொடுத்து உலகம் முழுக்க இருக்கும் மக்களின் உயிரை இவர் காத்து இருக்கிறார் என்று மக்கள் தெரிவித்து வருகிறார்.

    English summary
    Coronavirus: The Chinese doctor who found the attack dies today moroning due to the virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X