For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 வருடத்தில் முதல் முறை.. கொரோனாவால் குலைந்த ரஷ்யாவின் புடின்.. முன்னாள் உளவாளியை உலுக்கிய வைரஸ்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கொரோனா வைரசுக்கு எதிரான தோல்வி காரணமாக ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவு குறைந்துள்ளது. அந்த நாட்டின் நிரந்தர அதிபர் ஆகும் புடினின் கனவு கலையும் நிலைக்கு சென்றுள்ளது.

Recommended Video

    கொரோனாவால் குலைந்த ரஷ்யாவின் புடின்.. முன்னாள் உளவாளியை உலுக்கிய வைரஸ்!

    ரஷ்யா அதிபர் புடினுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் சிக்கலுக்கு காரணமும் என்ன என்று தெரிந்து கொள்ளும் முன், ரஷ்யாவின் அதிபராக புடின் எப்படி மாறினார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த சமயத்தில் ரஷ்யாவில் இருக்கும் கேஜிபி எனப்படும் உளவு அமைப்பின் உளவாளியாக இருந்தவர்தான் புடின்.

    உளவாளியாக இருந்த புடின் நாடு முழுக்க சென்று அரசியல் நிலை என்ன, ரஷ்யாவில் அரசியலை கட்டுப்படுத்துவது யார், அரசியலை இயக்குவது யார் என்று தீவிரமாக கற்றுக்கொண்டார். சோவியத் யூனியன் உடைந்த பின் ரஷ்யா பெரிய அளவில் சரிவை சந்தித்து மொத்தமாக பொருளாதார ரீதியாக நிலைகுலைந்து. இதை புடின் பயன்படுத்திக்கொண்டார்.

    334 சூப்பர் ஸ்பிரெட்டர்.. 'எல்' வகை கொரோனா.. குஜராத்தில் கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்.. பின்னணி! 334 சூப்பர் ஸ்பிரெட்டர்.. 'எல்' வகை கொரோனா.. குஜராத்தில் கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்.. பின்னணி!

    தனியார் குழு

    தனியார் குழு

    சோவியத் யூனியன் உடைந்த பின் ரஷ்யாவின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு விற்கப்பட்டது. அப்போது ரஷ்யாவை கட்டப்படுத்தியது 10க்கும் குறைவான பணக்காரர்கள்தான் கட்டுப்படுத்தி வந்தனர். அலிகார்க்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த குழுதான் அரசை கட்டுப்படுத்தியது. அந்நாட்டின் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் கூட இவர்களால் கட்டுப்படுத்தப்பட்டுதான் வந்தார்.

    அரசியலில் குதித்தார்

    அரசியலில் குதித்தார்

    ரஷ்யாவில் இந்த அலிகார்க்ஸ் குழுவின் பலத்தை அறிந்து கொண்ட உளவாளி புடின் அவர்களை கையில் போட்டுகொண்டு அரசியலில் குதித்தார். கேஜிபியில் இருந்து விலகி 1991ல் அரசியலில் குதித்தார். அலிகார்க்ஸ் கொடுத்த சப்போர்ட் காரணமாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மேயராக 1991ல் பதவி ஏற்றார். அதன்பின் வரிசையாக அரசியல் செய்து, அலிகார்க்ஸ் உதவியுடன் மேலே சென்று அதிபர் போரிசுக்கு நெருக்கம் ஆகி 1999 தொடக்கத்தில் அந்நாட்டின் பிரதமர் ஆனார் புடின்.

    தினமும் பேசினார்

    தினமும் பேசினார்

    அவர் பிரதமர் ஆன போது அந்நாட்டில் யாருக்கும் அவரை தெரியாது. ஆனால் அதன்பின் தினமும் பொதுவில் தோன்றி பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார் புடின். அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அலிகார்க்ஸ் குழுவை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். அப்போதுதான் செசன்யா புரட்சி படை ரஷ்யாவில் தாக்குதல் நடத்தி போர் செய்தது. ரஷ்யாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தியது. இந்த வெடிகுண்டு தாக்குதல் ரஷ்யாவை உலுக்கியது.

    செசன்யா தாக்குதல்

    செசன்யா தாக்குதல்

    அப்போது வெளியே வந்த புடின். செசன்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். ரத்தத்திற்கு ரத்தம் வாங்கியே தீருவோம் என்று கூறினார். இவரை பார்த்த மக்கள் இவர்தான் எங்கள் அதிபர் என்று அப்போதே முடிவு செய்தனர். இவரின் துணிச்சலான பேச்சு மற்றும் வீரமான சவால் மூலம் மக்கள் மத்தியில் சில மாதங்களில் பிரபலம் அடைந்தார். அந்த வருடமே அதிபர் தேர்தலிலும் நின்றார்.

    ரஷ்ய அதிபர்

    ரஷ்ய அதிபர்

    அந்த வருடமே 1999 இறுதியில் ரஷ்யாவின் அதிபர் ஆனார். அப்போது அதிபர் ஆன புடின் 20 வருடமாக ரஷ்யாவின் அதிபராக இருக்கிறார். அப்போதில் இருந்து அவருக்கான மக்கள் ஆதரவு 50%க்கும் அதிகமாக இருக்கிறது. செசன்யாவிற்கு எதிராக இவர் பேசிய வீரமான பேச்சுதான் மக்கள் மத்தியில் இவருக்கு அதீத ஆதரவு வர காரணம். அதன்பின் அதிபர் ஆனவர் தற்போது ரஷ்யாவையே மொத்தமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

    மொத்தமாக குலைந்தது

    மொத்தமாக குலைந்தது

    ஆனால் இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு ரஷ்யாவில் அதிபர் புடினின் மக்கள் ஆதரவு 45%க்கும் குறைவாக கீழே சென்றுள்ளார். இந்த வாரம் இந்த சதவிகிதம் 30% ஐ தொடும் என்று கூறுகிறார்கள். 20 வருடத்தில் முதல்முறை இப்படி நடக்கிறது. இதனால் அவரின் பதவிக்கே கூட ஆபத்து வரும் என்று கூறுகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பும் நிலைக்கு புடின் சென்றுள்ளார். அவரின் பதவி காலியாக கூட வாய்ப்புள்ளது.

    கொரோனா காரணம்

    கொரோனா காரணம்

    அமெரிக்கா, சீனா, நேட்டோ படை என்று எதுவும் அசைக்க முடியாத புடினை கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் அசைத்து பார்த்து இருக்கிறது. முதல்முறையாக அவரின் ஆதரவு குறைந்துள்ளது. அதேபோல் அங்கிருக்கும் அமைச்சர்கள் சிலரும், மேயர்களும் அவரின் செயலை எதிர்க்க துவங்கி உள்ளனர். கொரோனாவிடம் புடின் தோல்வி அடைந்துவிட்டார் என்று கூற தொடங்கி உள்ளனர். அங்கு தினமும் 11 ஆயிரம் புதிய கேஸ்கள் வருகிறது.

    லாக்டவுன் எப்படி

    லாக்டவுன் எப்படி

    அங்கு 201000 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவும் வேகத்தை விட ரஷ்யாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. புடின் மொத்தமாக கொரோனாவிடம் மருத்துவ ரீதியாக, பொருளாதார ரீதியாக தோல்வி அடைந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இன்று காலை ரஷ்யாவின் லாக்டவுனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதோடு கவர்னர்கள் இதில் முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

    சர்வாதிகாரி என்ன ஆனார்

    சர்வாதிகாரி என்ன ஆனார்

    20 வருடம் சர்வாதிகாரி போல ஆட்சி செய்தவர் திடீர் என்று கவர்னர்களுக்கு அதிகாரம் கொடுத்து விலகி உள்ளார். அவரின் இந்த திடீர் விலகல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கஷ்டமான சூழ்நிலையில் புடின் இப்படி கையை விரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளனர். அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழ இது மட்டுமல்ல காரணம். கடந்த மார்ச்சில் இருந்து புடின் எங்கும் வெளியே வரவில்லை.

    வீட்டிற்கு உள்ளேயே

    வீட்டிற்கு உள்ளேயே

    செசன்யாவை பழி தீர்ப்போம் என்று கூறிய அதே தைரியமான புடின்தான் தற்போது கொரோனாவிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறார். நாங்கள் பார்த்து வளர்ந்த வீரமான புடின் இவர் இல்லை. அவர் மாறிவிட்டார் என்று அம்மக்கள் கூற தொடங்கி உள்ளனர். அதோடு தனது பதவி காலத்தை 2036 வரை நீட்டிக்க புடின் திட்டமிட்டு இருந்தார். இதற்காக கடந்த ஏப்ரலில் சட்ட திருத்தம் கொண்டு வர முயன்றார்.

    ஆட்சி கவிழும்

    ஆட்சி கவிழும்

    ஆனால் கொரோனா காரணமாக இது தடை பட்டுள்ளது. மீண்டும் எல்லாம் தொடங்கிய பின் அதே சட்டத்தை கொண்டு வர புடின் முயற்சி செய்வார் என்கிறார்கள். ஆனால் இந்தமுறை அந்த சட்ட திருத்தம் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. புடின் தேர்தலை சந்திப்பார். அல்லது புடின் ஆட்சியை இழக்க கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ரஷ்யாவின் நடந்து வரும் அரசியல் திருப்பங்கள் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Coronavirus: The former Spy Vladimir Putin is under fire after Russia failed to COVID-19 pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X