For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுவானில் டீலிங்.. ஜெர்மன், பிரான்ஸ் போக வேண்டிய சீன மாஸ்குகள்.. தட்டிப்பறித்த டிரம்ப்.. அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க மருத்துவ தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மன் மற்றும் பிரான்சுக்கு செல்ல வேண்டிய மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு தட்டிப்பறித்துள்ளது.

Recommended Video

    பிரான்ஸ், ஜெர்மன் போக வேண்டிய மாஸ்க்குகளை தட்டிப்பறித்த டிரம்ப்

    பசி.. அமெரிக்காவின் இத்தனை வருட அரசியல், வரலாறு அனைத்தையும் ஒரு வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் இப்படித்தான் விளக்க வேண்டும். செவ்விந்தியர்களை துரத்திவிட்டு அமெரிக்கா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டதில் இருந்தே அமெரிக்காவின் ஒரே கொள்கை பசிதான். முதலில் நில பசியோடு சுற்றிய அமெரிக்கா அதன்பின் அதிகார பசியோடு செயல்பட்டது. பல நாடுகளோடு போருக்கு சென்றது.

    பின் கச்சா எண்ணெய் பசி, பணப்பசி, ராணுவ பசி என்று வரிசையாக அந்நாட்டிற்கு பல பசிகள் வந்தது, இதனால் அந்த நாடும் உலக வல்லரசு ஆனது. தற்போது ராணுவ பலத்துடனும் அதிகார பலத்துடனும் அமெரிக்கா விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தற்போதும் அமெரிக்காவின் பசி தீர்ந்தபாடில்லை. தற்போது அமெரிக்காவிற்கு இருக்கும் பசி.. மருத்துவ உபகரணங்கள்!

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நாடாக அமெரிக்க உருவெடுத்துள்ளது. 3,36,851 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 9960 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். வரும் வாரங்கள் இன்னும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா எப்படியாவது இதில் இருந்து வெளியே வர வேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவிற்கு நாளுக்கு நாள் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    அதீத தேவை

    அதீத தேவை

    முக்கியமாக மாஸ்குகள், பாதுகாப்பான உடை, கிளவுசுகள், ஹெல்மெட், கண்ணாடிகள் ஆகியவை அந்நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் அங்கு தினமும் 20 ஆயிரம் பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் எல்லோருக்கும் எப்படி மருத்துவ உபகரணங்களை கொடுப்பது என்று தெரியாமல் அமெரிக்கா கஷ்டப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மருத்துவ உபகரண தேவை இன்னும் சில நாட்களில் பெரிய பிரச்சனை ஆகும் என்கிறார்கள்.

    உதவி கேட்கிறது

    உதவி கேட்கிறது

    இதனால் உலகம் முழுக்க பல நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி கேட்டுள்ளார். தன்னுடன் சண்டை போட்டுகொண்டு இருந்த ரஷ்யா உடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது, ரஷ்யாவிடம் மாஸ்க்குளை கேட்டுள்ளது. அதேபோல் சீனாவிடம் மருந்து உதவிகளை கேட்டுள்ளது. இந்தியாவிடம் ஹைடிராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை கேட்டுள்ளது. இப்படி உலகம் முழுக்க பல நாடுகளிடம் அமெரிக்கா உதவி கேட்டுள்ளது.

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    இவ்வளவு வந்தாலும் கூட, அமெரிக்காவின் மாஸ்க் தேவை மருத்துவ உபகரண தேவை பூர்த்தியாகாது என்று கூறுகிறார்கள். இதனால் மற்ற நாடுகளுக்கு செல்லும் மாஸ்குகளை அடித்து பிடுங்கும் வேலையில் அமெரிக்கா இறங்கி உள்ளது. ஆம் இதுவரை மூன்று முறை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய மாஸ்குகளை, அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு திருப்பி உள்ளது. கடந்த வாரம் பிரான்சிற்கு 20 லட்சம் மாஸ்குகளை சீனா ஏற்றுமதி செய்ய இருந்தது,

    தனியார் நிறுவனம்

    தனியார் நிறுவனம்

    கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பிரான்சில் இன்னும் இரண்டு வாரங்களில் மொத்தமாக மாஸ்க் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் சீனாவிடம் பிரான்ஸ் அவசர அவசரமாக இந்த 20 லட்சம் மாஸ்குகளை ஆர்டர் செய்தது. தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படும் நிலை இருந்தது. ஆனால் சீனாவில் இந்த மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கா அதை தங்கள் பக்கம் திருப்பி உள்ளது .

    ஏற்றுமதி செய்தது

    ஏற்றுமதி செய்தது

    அந்த தனியார் நிறுவனத்திற்கு பிரான்ஸ் கொடுத்ததை விட அதிக தொகை கொடுத்து அமெரிக்கா இந்த மாஸ்குகளை தங்கள் நாட்டிற்கு மாற்றிக்கொண்டு உள்ளது. அதேபோல் பிரான்சுக்கு மீண்டும் ஏற்றுமதி ஆன மேலும் 2 லட்சம் மாஸ்குகளை அமெரிக்கா இதேபோல் கூடுதல் விலை கொடுத்து வாங்கி உள்ளது. இதனால் மாஸ்குகள் தட்டுப்பாட்டால் வரும் நாட்களில் பிரான்ஸ் பெரிய அளவில் பாதிக்கும் என்கிறார்கள்.

    ஜெர்மனி இதே வேலை

    ஜெர்மனி இதே வேலை

    அதே போல ஜெர்மனியையும் இதேபோல் நடு ஆற்றில் அமெரிக்கா தவிக்கவிட்டுள்ளது. ஜெர்மனிக்கு சீனாவில் இருந்து இதேபோல் 2 லட்சம் மாஸ்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த விமானம் தாய்லாந்து சென்று அங்கிருந்து ஜெர்மன் செல்வதாக இருந்தது. ஆனால் இந்த விமானம் நடு வானில் இருக்கும் போதே இந்த மாஸ்குகளை ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனத்திடம் கூடுதல் பணம் கொடுத்து அதை அமெரிக்கா வாங்கியது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இதனால் தாய்லாந்தில் இறங்கிய அந்த விமானம் அப்படியே ஜெர்மன் செல்லாமல் அமெரிக்காவிற்கு சென்றது. ஜெர்மனுக்கு இது பெரிய அதிர்ச்சி கொடுத்தது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இந்த மூன்று வேலையையும், அமெரிக்கா நாங்கள் செய்யவில்லை என்று மறுத்து உள்ளது. ஆனால் ஜெர்மன் ''அமெரிக்கா கடல் கொள்ளையன் போல செயல்படுகிறது'' என்று விமர்சனம் செய்துள்ளது. அதேபோல் ஸ்பெயின், அமெரிக்கா எங்களுக்கு மருத்துவ பொருட்கள் கிடைக்காமல் செய்கிறது என்று விமர்சனம் செய்துள்ளது.

    English summary
    Coronavirus: The US Hijacks masks bound to Germany and France in mid-air dealing amid world pandemic crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X