For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தாலியிலிருந்து ஒரு சின்ன நிம்மதி செய்தி.. கொரோனாவைரஸ் பரவல் வேகம் லேசாக குறைகிறது!!

இத்தாலியில் உயிரிழப்பு குறைந்து வருகிறது

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனாவைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு தற்போது தாக்கம் சற்று குறைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் ஆறுதல் தருவதாக உள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்டதா?

    சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இத்தாலியில்தான்.. ஆனால் ஆரம்ப கட்டத்தில் மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை.. படு கேஷூவலாக இருந்து விட்டனர்.. ஊரடங்கையும் மதிக்காமல் ஊரை சுற்றி வந்தனர் மக்கள்!

    உலகம் முழுவதும் இன்று வைரஸ் வேகமாக பரவியதற்கு இந்த ஐரோப்பிய நாடுகள்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.. இத்தாலியில் ஏப்ரல் 2-,ம் தேதி வரை 1,10,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... 13,155 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஆனால், நிஜமாகவே உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மருத்துவ, சுகாதார அதிகாரிகள்!!

     கொரோனா: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை பார்வையிடுகிறது உலக சுகாதார நிறுவனம் கொரோனா: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை பார்வையிடுகிறது உலக சுகாதார நிறுவனம்

    மருத்துவமனைகள்

    மருத்துவமனைகள்

    இதில் சொல்ல முடியாத வேதனை என்னவென்றால், முதியோர் இல்லங்களில் யாருக்குமே எந்த டெஸ்ட்டும் எடுக்காமல் அப்படி அப்படியே உயிரிழந்தனர்.. ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லை.. வயசானவர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமையை மருத்துவமனைகள் தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.. பாதிக்கப்பட்ட வயசானவர்களால் ஆஸ்பத்திரிக்கும் செல்ல முடியாமல், ஆம்புலன்சும் உரிய நேரத்தில் கிடைக்காமல் அவதிப்பட்டதும் நடந்தது. அதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை என்பதை அதிகாரப்பூர்வமாக கணிக்க முடியவில்லை.

    தகவல்கள்

    தகவல்கள்

    இந்த நிலையில்தான் தற்போது அதாவது மார்ச் 21 க்கு பிறகு, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சின்னதாக ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தினசரி நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாம்.

    மாறும் எண்ணிக்கை

    மாறும் எண்ணிக்கை

    ஆனால் நாடு முழுவதும் இது ஒரே மாதிரியாக இல்லை. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் இதில் மாறுபாடுகள் உள்ளன. "பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, சோதனைகளின் எண்ணிக்கை என்பது தினமும் மாறக்கூடிய ஒன்று.. அதை வைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றும் இந்த எண்ணிக்கை அளவு தினசரி மாறிக்கொண்டே இருக்கும்," என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    பரவல்

    பரவல்

    இத்தாலியில் நோய்த் தாக்கம் திடீரென குறைய காரணம் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் கான்டேஜியன் திட்டம்தான். அதை இத்தாலி தீவிரமாக கடைப்பிடித்து வருவதால் நோய் பரவல் சற்று மட்டுப்பட்டுள்ளது. அதேசமயம் அருகாமை நாடுகளில் இதே போல கடைப்பிடித்தாலும் கூட அங்கு பரவல் குறையவில்லை. அதிகரித்தபடியேதான் உள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் இத்தாலியில் லாக் டவுன் அமலில் உள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    வியாழக்கிழமையன்று இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 760 ஆக இருந்தது. புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4668 ஆக இருந்தது. அதற்கு முதல் நாள் அது 4782 ஆக இருந்தது... தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் நிலையில், தற்போது இத்தாலியில் வரும் பலி எண்ணிக்கை குறைவு என்ற செய்தி சற்று ஆறுதலையே தந்து வருகிறது!!

    English summary
    coronavirus: There is a sign of a decrease in the number of casualties in Italy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X