For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில நொடிகள், 1 லட்சம் துளிகள்.. கொரோனா வேகமாக பரவும் ரகசியம் இதுதான்.. ஜப்பான் விஞ்ஞானிகள் அதிரடி!

Google Oneindia Tamil News

டோக்கியோ : கொரோனா வைரஸ் இரண்டு வழிகளில் பரவும் என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மூன்றவதாக ஒரு வழியிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும் என கருதப்படுகிறது. மேலும், உலக நாடுகள் இதுவரை எடுத்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மேலும் கடுமையை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.

மும்பையில் 3 நாள் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் மும்பையில் 3 நாள் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் மீது புகார்

கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை வேகமாக பரவி, பெரும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது. 9 லட்சம் பேர் உலகம் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 47,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

துளிகள் மூலம் பரவல்

துளிகள் மூலம் பரவல்

கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் தான் அதிகம் பரவுகிறது. கொரோனா வைரஸ் பாதித்த மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்கள், அவர்கள் தங்கி இருக்கும் இடம் அல்லது அவர்களின் தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக கருதப்பட்டு வந்தது.

நுண் துளிகள்

நுண் துளிகள்

இந்த நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகள் நுண் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், பேசிக் கொண்டு இருக்கும் போதும், அருகே இருக்கும் போதும், தும்மல், இருமல் இல்லாமலேயே, நுண் துளிகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்கள் இடையே பரவக் கூடும்.

முற்றிலும் வித்தியாசமானது

முற்றிலும் வித்தியாசமானது

இது தும்மல், இருமல் மூலம் வெளியாகும் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. மேலும், இந்த நுண் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் வேகமாகவும், அதிக தீவிரத்துடன் பரவி இருக்க வேண்டும் என நம்மால் எளிதாக உணர முடிகிறது.

இன்னும் கடினம்

இன்னும் கடினம்

ஏற்கனவே, கொரோனா வைரஸ் தும்மல், இருமல் துளிகள் மூலம் பரவுவதை மருத்துவ முகக் கவசம் அல்லது N95 முகக் கவசம் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என சில நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நுண் துளிகள் மூலம் பரவினால் அதை தடுப்பது இன்னும் கடினம் ஆகும்.

ஆய்வு கண்டுபிடிப்பு

ஆய்வு கண்டுபிடிப்பு

இந்த நுண் துளிகள் பற்றி செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு வகுப்பறையில் ஒரு மனிதர் இருமினால் சில நொடிகளில் ஒரு லட்சம் நுண் துளிகள் வரை பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த நுண் துளிகள் கொரோனா வைரஸை கடத்திக் கொண்டு சென்று தொற்று பலருக்கும் பரவ காரணமாக உள்ளது. இதே போலத் தானே நுண் துளிகள் அல்லாத, துளிகள் பரவும் போதும் நடக்கிறது?

காற்றில் இருக்கும்

காற்றில் இருக்கும்

அதில் தான் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் 20 - 30 வினாடிகளில் தரையை அடைந்து விடும். அதனால், காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் குறைவு. ஆனால், நுண் துளிகள் காற்றில் நீண்ட நேரம் இருக்கும். அதனால், அந்த இடத்தில் இருக்கும் பலருக்கும் அது பரவ வாய்ப்பும் அதிகம்.

கடுமையாகும் விதிகள்?

கடுமையாகும் விதிகள்?

இந்த புதிய ஆய்வுத் தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பது நல்ல செய்தி. அதே சமயம், இந்த மூன்றாவது வழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றால் உலக நாடுகள் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்கவும், அதிக நாட்கள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. அது பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நிலை மாறும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

English summary
Coronavirus : Third transmission route of Coronavirus found by Japan scientists. It is a breakthrough study in controlling the coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X