For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடே.. இந்த சீன வாக்சின் நல்லா வேலை செய்யுதாமே.. சோதனையில் வெற்றி கிடைச்சிருச்சாமே!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீன அரசின் தேசிய பார்மாசூடிகல் கம்பெனியான சைனோபார்ம் (Sinopharm) தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மனித பரிசோதனையில் நல்ல எதிர்ப்பு சக்தியையும், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பையும் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Covaxin முதல் சோதனை வெற்றி.. இரண்டாம் கட்ட சோதனைக்கு தயார் | OneindiaTamil

    இந்த நிறுவனம் ஏற்கனவே இறுதிக் கட்டப் பரிசோதனையில் இருக்கிறது. சிலரை மட்டுமே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கானவர்களை சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள சைனோபார்ம் முடிவு செய்துள்ளது. இந்த பரிசோதனைக்கு 15000 பேரை உட்படுத்த திட்டமிட்டுள்ளது.

    coronavirus vaccine developed by China Sinopharm human trial success

    பாகிஸ்தானிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த தடுப்பு மருந்து குறித்து அமெரிக்காவின் மருத்துவ இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியில், ''சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. 320 ஆரோக்கியமான மனிதர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இந்த மருந்து கொரோனாவை எதிர்கொள்வதற்கு போதிய எதிர்ப்பு சக்தியைக் கொடுக்குமா என்பது தெரியவில்லை. இன்னும் ஆராய்ச்சியாளர்கள் மருந்தை மேம்படுத்தி வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சைனோபார்ம் தலைவர் கடந்த மாதம் அளித்திருந்த பேட்டியில், ''நடப்பாண்டின் இறுதியில் கொரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்து தயாராகிவிடும். இன்னும் மூன்று மாதங்களில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்துவிடும்'' என்று தெரிவித்து இருந்தார்.

    சீனா அத்துமீறுகிறது.. அமெரிக்கா உடனே இந்தியாவிற்கு உதவ வேண்டும்.. அமெரிக்க சென்ட் சபையில் தீர்மானம்!சீனா அத்துமீறுகிறது.. அமெரிக்கா உடனே இந்தியாவிற்கு உதவ வேண்டும்.. அமெரிக்க சென்ட் சபையில் தீர்மானம்!

    உலகம் முழுவதும் நாவல் கொரோனா வைரஸூக்கு 7,50,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 150 தடுப்பு ஊசிகள் பரிசோதனையில் உள்ளன. சீனாவின் மற்றொரு கொரோனா தடுப்பு மருந்தான கேன்சைனோ பிலோஜிக்ஸ் தற்போது சீன ராணுவ வீரர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் மட்டும் எட்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.

    English summary
    coronavirus vaccine developed by China Sinopharm human trial success
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X