For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்?.. என்ன நடந்தது?

கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலகை எச்சரிக்க போதுமான நேரம் இருந்தும், வாய்ப்பு இருந்தும் கூட, சீனா உலகிற்கு கொரோனா வைரஸ் குறித்து உண்மைகளை மறைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலகை எச்சரிக்க போதுமான நேரம் இருந்தும், வாய்ப்பு இருந்தும் கூட, சீனா உலகிற்கு கொரோனா வைரஸ் குறித்து உண்மைகளை மறைத்து இருக்கிறது.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    கொரோனா வைரஸ், உலகம் முழுக்க இந்த ஒரு மிக சிறிய வைரஸ்தான் ஆட்டம் போட்டுகொண்டு இருக்கிறது. சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது உலகம் முழுக்க 170+ நாடுகளில் பரவி இருக்கிறது . இந்த வைரஸை சீன வைரஸ் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்த அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக 104,256 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    இந்த வைரஸ் குறித்து சீனா நினைத்து இருந்தால், டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே உலகை எச்சரித்து இருக்க முடியும். ஆனால் சீனா அதை செய்யவில்லை. இந்த வைரஸ் எப்போது தோன்றியது, எப்படி பரவியது என்ற முழு விவரங்களும் தற்போது வெளியாகி உள்ளது.

    முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது

    முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது

    பலரும் நினைப்பது போல கொரோனா வைரஸ் ஜனவரி மாதத்தில் உலகில் தோன்றவில்லை. இந்த வைரஸ் சீனாவின் உள்ள வுஹன் நகரில் டிசம்பர் 1ம் தேதி 2019 லேயே தொடங்கிவிட்டது. 53 வயது நபர் ஒருவருக்கு இந்த வைரஸ் தோன்றியது. சீனாவின் வுஹனில் உள்ள கடல் உணவகம் தொடர்பான மார்க்கெட் ஒன்றின் மூலம் வைரஸ் பரவியது என்று கணிக்கப்படுகிறது. இந்த நபருக்கு கொரோனா வந்த 4 நாட்களில் இவரின் மனைவிக்கும் கொரோனா தாக்கியது.

    முதலில் தெரியாது

    முதலில் தெரியாது

    ஆனால் அப்போது இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்று யாருக்கும் தெரியாது. அதி தீவிர காய்ச்சல் என்றுதான் கூறப்பட்டது. மருத்துவமனையிலும் கூட, இவர்கள் மற்ற நோயாளிகள் உடன்தான் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த வைரஸ் குறித்து முதலில் யாருமே கணிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இது ஒருவேளை சார்ஸ் வைரஸாக இருக்குமோ என்று கூட யாரும் கணிக்கவில்லை.

    அடுத்தடுத்து நிறைய மருத்துவமனை

    அடுத்தடுத்து நிறைய மருத்துவமனை

    அதன்பின் டிசம்பர் இரண்டாம் வாரத்தில்தான் இந்த வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது. அங்கு வரிசையாக அருகருகே இருக்கும் மருத்துவமனைகளில் பலர் கொரோனா பாதிப்போடு வந்து சேர்க்கப்பட்டனர். எல்லோருக்கும் ஒரே மாதிரி காய்ச்சல். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தது. இதுதான் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

    சிக்கல் எங்கு உருவானது

    சிக்கல் எங்கு உருவானது

    சரியாக டிசம்பர் 25ம் தேதி அந்த திகிலான சம்பவம் நடந்தது. வுஹனில் இருக்கும் இரண்டு மருத்துவமனைகளில் உள்ள 6 மருத்துவர்களுக்கு இதே வைரஸ் தாக்கியது. போதுமான, பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் கூட அவர்களுக்கு நோய் தாக்கியது. அப்போதுதான் நாம் இப்போது சிகிச்சை அளிக்கும் விஷயம் சாதாரண காய்ச்சல் அல்ல, அது கொஞ்சம் ஆபத்தானது என்பதை சீன மருத்துவர்கள் உணர்ந்து கொண்டனர்.

    மருத்துவர் சொன்னதை கேட்கவில்லை

    மருத்துவர் சொன்னதை கேட்கவில்லை

    சீனாவின் வுஹன் பகுதியை சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார். சீனாவில் இருக்கும் வுஹன் மத்திய மருத்துவமனையில்தான் லி வென்லியாங் வேலை செய்தார். அங்குதான் இந்த வைரஸ் தாக்குதல் உள்ள நபர் முதலில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளனர்.

    எச்சரிக்கை கொடுத்து பார்த்தார்

    எச்சரிக்கை கொடுத்து பார்த்தார்

    இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது.இந்த வைரஸை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக அவர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அதோடு உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

    மருத்துவருக்கு வைக்கப்பட்ட செக்

    மருத்துவருக்கு வைக்கப்பட்ட செக்

    சீனா அரசு உடனே இவரை முடக்கியது. இவருக்கு எதிராக சீன அரசு வழக்கு தொடுத்தது. இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமுக வலைத்தளங்களில் குறிப்பிட கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். ஆனால் சில நாட்களில் இவருக்கும் கொரோனா ஏற்பட்டது. இவர் அதன்பின் கொரோனா குறித்து பேசவில்லை.

    மாதிரிகளை அழித்தது

    மாதிரிகளை அழித்தது

    சீனா இங்கு மட்டும் உண்மையை மறைக்கவில்லை. ஹூபேய் மருத்துவ குழு உடனடியாக வுஹன் சென்று அதுவரை ஆராய்ச்சிகளுக்காக அங்கு மருத்துவர்கள் சேர்த்து வைத்து இருந்த கொரோனா மாதிரிகளை அழித்தது. ஆம் நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்கள் எடுத்து வைத்து இருந்த கொரோனா மாதிரிகளை எல்லாம் அந்த குழு மொத்தமாக அழித்தது. அதோடு இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்றும் சீனா உறுதி அளித்தது.

    எப்படி செய்திகள் வந்தது

    எப்படி செய்திகள் வந்தது

    கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது என்று சீனா கூறியது. சீனாவின் நாளிதழ்களில் இதே உறுதியான செய்தி வந்தது. மிக மோசமான காய்ச்சல் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் சீனா கூறியது. ஏன் உலக சுகாதார மையம் சீனாவில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எந்த நோயும் பரவவில்லை. கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது இல்லை என்று டிவிட் செய்து இருந்தது.

    என்ன திருப்பங்கள்

    என்ன திருப்பங்கள்

    ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நிறைய திருப்பங்கள் நடந்தது. ஜனவரி 8ம் தேதி இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் ஆதாரம் இல்லை என்று சீனா கூறியது. ஆனால் ஜனவரி 11ம் தேதி சீனாவில் முதல் நபர் இதனால் பலியானார். 61 வயது முதியவர், சீன மார்க்கெட் ஒன்றுக்கு சென்ற பின் வைரஸ் தாக்கி பலியானார்.

    மருத்துவரின் நிலை என்ன

    மருத்துவரின் நிலை என்ன

    இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டருக்கு கொரோனா வந்தது. ஜனவரி 10ம் தேதி லி வென்லியாங் காய்ச்சல் வந்து படுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிப்ரவரி 7ம் தேதி கொரோனா வைரஸால் இவர் தாக்கப்பட்டு பலியானார். இவரை தற்போது சீன மக்கள் தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள்.

    சீனாவிற்கு வெளியே சென்றது

    சீனாவிற்கு வெளியே சென்றது

    அதன்பின் ஜனவரி 13ம் தேதி இந்த வைரஸ் சீனாவிற்கு வெளியே தாய்லாந்தில் உள்ள சீன பெண் ஒருவருக்கு கொரோனா வந்தது. இவர் அந்த மீன் மார்க்கெட் சென்றது இல்லை. ஆனாலும் வேறு யார் மூலமோ இந்த வைரஸ் அவருக்கு பரவி உள்ளது. இவர் வுஹனில் இருக்கும் வேறு சில மார்க்கெட்டுக்கு சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி இந்த வைரஸ் அவரை தாக்கி இருக்கலாம்.

    கொஞ்சம் ஒப்புக்கொண்டது

    கொஞ்சம் ஒப்புக்கொண்டது

    ஜனவரி 15ம் தேதிதான் சீன அரசு கொரோனா வைரஸ் தாக்குதலை ஒப்புக்கொண்டது. அதோடு இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் அப்போதே சீனாவில் 100 பேருக்கும் அதிகமாக இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்னும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருந்தது.

    அண்டை நாடுகளுக்கு பரவியது

    அண்டை நாடுகளுக்கு பரவியது

    ஜனவரி 19ம் தேதி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியும் நிலையில்தான் இருக்கிறது என்று சீனா கூறியது. ஆனால் சீனாவிற்கு வெளியே அப்போதே கொரோனா வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. ஜனவரி 20ல் வாஷிங்டனில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. சீனாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.

    சீனா எடுத்த நடவடிக்கை

    சீனா எடுத்த நடவடிக்கை

    அதன்பின்தான் இந்த வைரஸின் தீவிர தன்மையை சீனா உணர்ந்தது. ஜனவரி 22ம் தேதிதான் சீனா வுஹனில் இறங்கி சோதனை செய்தது. அதன்பின்தான் சீனா வுஹன் நகரை மூடியது. சரியாக வைரஸ் தோன்றி ஒன்றரை மாதம் கழித்துதான் அதன் வீரியத்தை சீனா உணர்ந்தது. அதன்பின்தான் சீனா இந்த வைரஸ் பரவல் குறித்து ஒப்புக்கொண்டு, வுஹன் நகரத்தை மூடியது. அதுவரை சீனா அனைத்தையும் மறைத்தது.

    சீனாவில் அரசியல்தான் காரணம்

    சீனாவில் அரசியல்தான் காரணம்

    சீனாவின் அரசியலும், ஆட்சி அதிகாரமும்தான் இதற்கு காரணம். மொத்த அதிகாரமும் அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் குவிந்துள்ளது. அவர் சொல்வதுதான் அங்கு சட்டம். அவரை மீறி யாரும் எதுவும் பேச முடியாத சூழ்நிலை. இதுதான் அங்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனதற்கு காரணம். உலகம் மொத்தமும் மொத்தமாக நடுங்குவதற்கும் இதுதான் காரணம்.

    English summary
    Coronavirus: What did China hide about COVID-19? What happened? - All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X