• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. அமெரிக்காவிலும் கிடுகிடு.. நிலவரம் என்ன?

|

சென்னை: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 586 என்ற அளவில் உள்ளது. உலகம் முழுக்க கொரோனா பலி எண்ணிக்கை 378,334 என்ற அளவில் உள்ளது.

    கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா

    கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

    Coronavirus: What happened all over the world? The real impact of the epidemic

    உலகம் முழுக்க இதனால் 6,409,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 378,334 தொட்டுள்ளது . சீனாவில் தற்போது வரை 83,022 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் 4,634 பேர் பலியாகி உள்ளனர்.

    அங்கு நிறைய இடங்களை மருத்துவமனைகளாக மாற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக அங்கு வைரஸ் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அங்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு கடுமையாக திணறி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் 1,862,343 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 107,066 பேர் பலியாகி உள்ளனர். பிரேசில் நாட்டில் 529,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,046 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

    ரஷ்யாவில் 423,741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,037 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில், 286,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் பலி எண்ணிக்கை 27,127 என்ற அளவில் உள்ளது.

    யூகேவில்276,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,045 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால்தான் இதை உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இத்தாலியில் 233,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி பலி எண்ணிக்கை 33,475 ஆகும்.

    Coronavirus: What happened all over the world? The real impact of the epidemic

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு 202,394 நோயாளிகள் உள்ளனர். பலி எண்ணிக்கை, 5,650 என்ற அளவில் உள்ளது.

    24 மணிநேரத்தில் 4,024பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்று மட்டும் கொரோனாவால் ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 586 என்ற அளவில் உள்ளது.

    தமிழகத்தில் 197 பேர் பலியாகி உள்ளனர்.

    உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கவும். மருத்துவமனைக்கு தனியாக செல்வதை விட இது சிறப்பு. இதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலவச உதவி எண் : +91-11-23978046 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நான்கு உதவு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
    இன்றே பதிவு செய்யுங்கள்
    - பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Coronavirus: What happened all over the world? The real impact of the epidemic in countries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more