For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா மார்க்கெட்.. மாஸ்க் முதல் வெண்டிலேட்டர் வரை.. 9000 தொழிற்சாலைகள்.. ஏற்றுமதியை துவங்கிய சீனா

கொரோனா பாதிப்பு காரணமாக மாபெரும் சரிவை சந்தித்த சீனா தற்போது இதே கொரோனாவை வைத்து சம்பாதிக்க தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா பாதிப்பு காரணமாக மாபெரும் சரிவை சந்தித்த சீனா தற்போது இதே கொரோனாவை வைத்து சம்பாதிக்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க அந்நாடு மருத்துவ சாதனங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது.

Recommended Video

    சார்ஸ் தொடங்கி கொரோனா வரை உருவாக காரணமாக அமைந்த சட்டம்

    858,892.. இந்த கட்டுரையை எழுதும் போது உலகம் முழுக்க கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுதான். 150 நாடுகளை கொரோனா மொத்தமாக முடக்கி போட்டுள்ளது. அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் சரிந்துள்ளது.

    ஒரே ஒரு வைரஸ்.. மொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டு உள்ளது. உலகம் முழுக்க எல்லா நாடுகளின் மருத்துவ மற்றும் உளவுத்துறையின் தோல்வியாக இது பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு வைரஸ் வருவதை யாரும் பார்க்கவும் இல்லை அது தெரிந்த பின் யாரும் சுதாரிக்கவும் இல்லை.

    சீனா நிலை

    சீனா நிலை

    ஆனால் ஒரே ஒரு நாடு இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்போது தப்பித்துள்ளது. ஆம் சீனா கொரோனாவில் இருந்து சீனா மொத்தமாக தப்பித்துவிட்டது. இதை சீன அரசேதான் கூறுகிறது. எங்கள் நாட்டில் தற்போது கொரோனா பரவவில்லை. வெளிநாட்டில் இருந்து சீனா வரும் மக்கள் மூலம்தான் வைரஸ் பரவுகிறது என்று சீனா கூறியுள்ளது. இதனால் தற்போது தங்கள் எல்லைகளை சீனா மூடி உள்ளது.

    கட்டுப்பாடுகள் இல்லை

    கட்டுப்பாடுகள் இல்லை

    எல்லைகளை மூடி வெளிநாட்டு மக்களை உள்ளே விடாமல் தடுத்து இருக்கும் சீனா, தங்கள் நாட்டிற்குள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அங்கு வங்கிகள் திறக்கப்பட்டு உள்ளது, தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது, தனியார் அலுவலகங்கள் எல்லாம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது சீனாவில் உள்ள தொழிற்சாலைகளின் முக்கிய குறிக்கோள், கொரோனா தடுப்பிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதுதான்.

    ஒரே குறிக்கோள்

    ஒரே குறிக்கோள்

    ஆம், சீனாவில் உள்ள 60% தொழிற்சாலைகள் தற்போது அதிக அளவில் மாஸ்குகள், வெண்டிலெட்டர்கள், கிளவுஸ், உடலை மூடும் துணிகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளது. அதாவது ஐசியூவில் இருந்து வெளியே வந்து இருக்கும் சீனா, தற்போது ஐசியூவில் இருக்கும் மொத்த உலகத்திற்கும் சிகிச்சை பார்க்க உள்ளது. ஆம்.. சீனா இந்த கொரோனா வைரசலில் இருந்து எந்த அளவிற்கு பாதித்ததோ அதே அளவிற்கு இதனால் பயனும் அடைய போகிறது.

    ராணுவ புத்தகம் என்ன

    ராணுவ புத்தகம் என்ன

    எப்படி என்பதற்கான விட, 1990ல் சீனாவில் வெளியான அந்நாட்டு ராணுவ புத்தகம் ஒன்றில் உள்ளது. அந்ந புத்தகத்தை எழுதியது, சீனாவின் இரண்டு மூத்த ராணுவ ஜெனரல்கள் மியாவ் லியாங், வாங்க் ஷாங் ஷு. இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு விஷயம், அமெரிக்கா, ரஷ்யாவை ராணுவ ரீதியாக நாம் வெற்றிபெற முடியாது. ஆனால் அவர்களுக்கு பொருளாதார, மருத்துவ தேவைகளை உருவாக்கி, அவர்களை நாம் வெற்றிபெற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    என்ன குற்றச்சாட்டு

    என்ன குற்றச்சாட்டு

    இதை அமெரிக்காவின் பிரபலங்கள் பலர் ஷேர் செய்து சீனாவை கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.கொரோனாவிற்கு பின் உலக நாடுகளை சீனாவை நம்பி இருக்கும் நிலை வரும் என்று அமெரிக்க நெட்டிசன்கள் கூறுகிறார்கள். நெட்டிசன்கள் கூறுவது இருக்கட்டும், உண்மையில் தற்போது சீனாவின் நிலை என்ன? கொரோனாவிற்கு பின் சீனா உலக நாடுகளை கட்டுப்படுத்துமா என்று பார்க்கலாம்.

    சீனாவில் இயல்பு நிலையை

    சீனாவில் இயல்பு நிலையை

    சீனாவில் தற்போது கடைகள், மால்கள், ஹோட்டல்கள், தியேட்டர்கள், சீன பெருஞ்சுவர் உட்பட எல்லா சுற்றுலா தளங்களும் உள்நாட்டு மக்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. சீனா இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதே நிலை சென்றால் இன்னும் 2 வாரத்தில் சீனா முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும். இதற்காக 344 பில்லியன் அமெரிக்க டாலர்களை சந்தையில் இறக்க சீன முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை ஏற்கனவே அந்நாடு களமிறக்க தொடங்கிவிட்டது.

    சீனாவில் பொருளாதாரம்

    சீனாவில் பொருளாதாரம்

    சீனாவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது. அதாவது எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கும் போது கீழே விழுந்த சீனா, தற்போது எல்லோரும் கீழே கிடக்கும் போது எழுந்து ஓட தொடங்கி உள்ளது. வுஹனில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல நாடுகளை தாக்கியது. உலகில் தூரத்தில் இருக்கும் சிறு சிறு நாடுகளை கூட கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால் சீனாவிற்குள் வுஹனுக்கு வெளியே எத்தனை மாகாணங்கள் இதனால் பாதித்தது என்று தெரியுமா?

    பொருளாதார ஹாட்ஸ்பாட் நிலை

    பொருளாதார ஹாட்ஸ்பாட் நிலை

    சீனாவிற்குள் வுஹனுக்கு வெளியே கொரோனா பெரிய அளவில் மாகாணங்கள் எதையும் பாதிக்கவில்லை. பெய்ஜிங் மாகாணத்தில் அதிகாரபூர்வமாக 580 பேர் பாதிக்கப்பட்டனர், 8 பேர் பலியானார்கள். ஷாங்காய் மாகாணத்தில் 468 பாதிக்கப்பட்டனர், 5 பேர் பலியானார்கள். சீனாவிற்கு உள்ளே ஆனால் வுஹனுக்கு வெளியே இதுதான் நிலை. சீனாவின் பொருளாதார ஹாட்ஸ்பாட் எதுவும் இந்த கொரோனா காரணமாக பாதிக்கப்படவில்லை.

    மருத்துவ சாதனங்கள்

    மருத்துவ சாதனங்கள்

    இதுதான் சீனாவிற்கு கிடைத்து இருக்கும் வாய்ப்பு. உலகத்திற்கு தற்போது தேவை ஒன்றுதான், மருத்துவ சாதனங்கள். அதை சீனா ஏற்கனவே உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 9000 நிறுவனங்கள் மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 160 மில்லியன் மாஸ்குகள் தினமும் உருவாக்கப்படுகிறது.

    சீனாவை நம்பும் நிலை

    சீனாவை நம்பும் நிலை

    ஏற்கனேவே வெளிநாட்டிற்கு சீனா பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது. இனி அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா என்று எல்லா நாடுகளும் தங்கள் நாட்டில் உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு சென்றுள்ளது. டான் பாலிமர் போன்ற சீன மருத்துவ நிறுவனங்களின் பங்கு மதிப்பு 417% உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சீனாவில் உள்ள பிஎம்டபிள்யு, ஹோண்டா, பியட், பாக்ஸ், கியா, டெஸ்லா, ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி இறுதியிலேயே மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டது.

    சீனா எழுந்து செயல்படுகிறது

    சீனா எழுந்து செயல்படுகிறது

    சீனா கொரோனாவில் எப்படி பாதித்ததோ அதை விட வேகமாக எழுந்து செயல்பட தொடங்கி உள்ளது. உலக நாடுகள் எல்லாம் கொரோனா காரணமாக முடங்கி உள்ள நிலையில், அவர்கள் மருத்துவ மற்றும் மற்ற சாதனங்களுக்கு சீனாவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது உலக ரீதியான பொருளாதாரத்திலும், அரசியலிலும் இதனால் இனி வரும் நாட்களில் நிறைய மாற்றங்கள் வரும் என்று கருதப்படுகிறது.

    English summary
    Coronavirus: From Profit to new business,What is China actually getting out of the outbreak?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X