For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செத்து மடியும் மக்கள்.. உலக சுகாதார அவசர நிலை அறிவிப்பு.. மிரட்டும் கொரோனா

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் இந்தியருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது |

    ஜெனிவா: சீனாவில் நாள்தோறும் 100க்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்து வருவதால் உலக சுகாதார அமைப்பு, உலக சுகாதார அவசர நிலையை பிறப்பித்துள்ளது.

    சீனாவின் வுஹானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமே மரண ஓலத்துடன் உள்ளது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

    சீனாவை தாண்டி தைபே, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி உள்ளது. சீனாவில் இருந்து வந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவை தாண்டி உலகில் வேறு எங்கும் உயிரிழப்புகள் இதுவரை ஏற்படவில்லை.

    50 வயசுக்கு மேல இருக்குற 78000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று ஒரே நாளில் விருப்ப ஓய்வு50 வயசுக்கு மேல இருக்குற 78000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று ஒரே நாளில் விருப்ப ஓய்வு

    உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    எனினும் உலகம் முழுவதும் வேகமாக கொரோனா பரவி வருவதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பை, உலக சுகாதார அவசர நிலை என அறிவித்துள்ளது. ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதார அமைப்பு (ஐ.நா. சுகாதார நிறுவனம்) ஆரம்பத்தில் இந்த நோயால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டது, ஆனால் நெருக்கடி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதன் இடர் மதிப்பீட்டைத் திருத்தி உள்ளது.

    பரவும் அபாயம்

    பரவும் அபாயம்

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை ஜெனீவாவில் பேசுகையில், "பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுதான் எங்கள் மிகப்பெரிய கவலை. மேலும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் அதை நாம் ஒன்றாக தடுத்து நிறுத்த முடியும். சீனாவுக்கு பயணம் செய்வதை தடுப்பது வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகள் விடுப்பது செயல்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையற்றது, இது 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது" என்றார்.

    பல நாடுகள் தடை

    பல நாடுகள் தடை

    இதனிடையே பல நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களை சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன, சிலர் மத்திய சீன நகரமான வுஹானில் இருந்து பயணிகளுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளனர், அங்கு முதலில் வைரஸ் தோன்றியது.

    முதல் தாக்குதல்

    முதல் தாக்குதல்

    அமெரிக்க மண்ணில் முதல்முறையாக கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. வேறொரு நபரிடமிருந்து ஒருவர் வைரஸைப் பிடித்ததாக அமெரிக்கா தனது முதல் வழக்கு வந்துள்ளது. வுஹானுக்குப் பயணம் செய்த அவரது மனைவியிடமிருந்து சிகாகோவில் உள்ளவருக்கு வைரஸ் பரவி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு விமானங்கள் இயங்குவதும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    Coronavirus: WHO Declares Global Health Emergency. China reported Friday the death toll had climbed to 213 with nearly 10,000 infections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X