For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரழிவுக்கு வழிவகுக்கும்.. பொருளாதாரத்தை காப்பாற்ற இதை செய்யுங்க.. அதிகாரிகளுக்கு சீன அதிபர் அலார்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    coronavirus:A timeline of the COVID-19 outbreak

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் சூழலில் பொருளாதார மற்றும் சமூகக் கட்டுப்பாட்டைப் எப்போதும் போல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாத தொடக்கத்தில் மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். "பேரழிவுகளுக்கு" வழிவகுக்கும் பீதியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.

    சீனாவில் இன்று காலை நிலவரப்படி 68000 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1665 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஒரே நாளில் 142 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    தினமும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் சீனாவில் உற்பத்தி கடுமையாக முடங்கி உள்ளது. அத்துடன் ஏற்றுமதியையும் வெகுவாக பாதித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் வெளிநாட்டு பயணிகள் யாருமே வரவில்லை. இதனால் சீனாவின் சுற்றுலா வருவாய் மொத்தமாக அடி வாங்கிவிட்டது. உலகின் பல்வேறு நாட்டினரும் சீனாவை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

    தனிமையில் சீனா

    தனிமையில் சீனா

    சீனாவில் கொரோனா உயிர்களை மட்டும் பாதிக்கவில்லை. பலஆண்டுகளாக இதுவரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வைத்திருந்த அதன் சந்தைகளையும் பாதித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் பொருட்கள் என்றால் வாங்குவது தடைபட்டுள்ளது. உலகமே சீனாவை தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அந்தபாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தால் மட்டுமே சீனாவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும் என்ற நிலை காணப்படுகிறது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இதை உணர்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாத தொடக்கத்தில் மூத்த அதிகாரிகளிடம் கொரோனா பாதிப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் சூழலில் பொருளாதார மற்றும் சமூகக் கட்டுப்பாட்டைப் எப்போதும் போல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். அத்துடன் "பேரழிவுகளுக்கு" வழிவகுக்கும் பீதியைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்தார்.

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    பிப்ரவரி 3 ம் தேதி ஜி ஜிங்பிங் அதிகாரிகளை எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் நீண்ட தூரத்துக்கு பொருளாதாரத்தை அச்சுறுத்துகின்றன. இதன் மூலம் பொருளதாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக அதிபரின் பேச்சில் இருந்து தெரிகிறது.

    புதிய கொள்கை

    புதிய கொள்கை

    ஏறக்குறைய 30 வருடங்களாக மிக மெதுவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அதே வேளையில் தொற்றுநோய் பாதிப்பை சீர் செய்வது என்பது தற்போது சீனாவுக்கு ரு முக்கிய சோதனையாக மாறியுள்ளது. இதை பற்றி விரிவாக பொலிட்பீரோவின் நிலைக்குழுவில் பிப்ரவரி 3 உரை சனிக்கிழமையன்று உரையாற்றி உள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான கியுஷி முழுமையாக இதை வெளியிட்டது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அவர்கள் பணியாற்றியபோதும், பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான கொள்கைகளை வகுக்குமாறு அதிகாரிகளை ஜின் பிங் வலியுறுத்தி கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

    English summary
    Xi Jinping tell. must make every effort to maintain economic and social control while battling coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X