For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா தொற்று.. இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்க.. 6 மாதத்திற்கு பின் சொல்லும் உலக சுகாதார அமைப்பு

Google Oneindia Tamil News

ஜெனிவா: கோவிட் -19 உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், இளைஞர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும் என்று கூறியதுடன், மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்தியது.

Recommended Video

    கொரோனாவிலிருந்து போய்டுச்சேன்னு அசால்ட்டா இருக்காதீங்க.. இதை செய்ங்க.. டாக்டர் தீபா

    கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் சுமார் 1.7 கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளில் இளைஞர்கள் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    Coronavirus: Young People Not Invincible, Says WHO after 6 Months of Pandemic

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுபற்றி கூறுகையில், தொற்று சில நாடுகளில் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இளைஞர்களும் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும். அவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இளைஞர்கள் எடுக்க வேண்டும் என்றார்.

    அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரே நாளில் இந்தியாவில் அதிக பாதிப்பு.. 52,123 பேருக்கு கொரோனா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரே நாளில் இந்தியாவில் அதிக பாதிப்பு.. 52,123 பேருக்கு கொரோனா

    தடுப்பூசி விவகாரம் குறித்து பேசிய அவர். மக்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரே நேரத்தில் கோவிட் -19 தடுப்பூசி பெறும் சூழ்நிலை இருக்க வேண்டும் என்றும் இதற்காக கடந்த காலத்தில் செயல்பட்ட முறையை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்றும் டெட்ரோஸ் கூறினார்.

    English summary
    Over six months after Covid-19 was declared a global emergency, the World Health Organization said today that young people could get infected and even succumb to the virus and urged them to take the same precautions to protect themselves as everyone else.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X