For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதெப்படி மனைவியை இப்டி ரிஸ்க் எடுக்க வைக்கலாம்.. நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட கணவர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன்-மனைவி

    ஜகார்த்தா: ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தம்பதியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    கெல்லி கேசில் - கோடி ஒர்க்மேன் தம்பதி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள். இருவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ள போசிட்ரேவல்டி (@positravelty ) என்ற கணக்கை, 62 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

    இந்த தம்பதியின் முக்கியமான வேலையே ஊர் ஊராக சென்று, போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது தான். அப்படி கடந்த வாரம் இவர்கள் பதிவிட்ட ஒரு போட்டோவுக்காக தான், நெட்டிசன்கள் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

    பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா? பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா? பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்

    பாலி தீவு சுற்றுலா:

    சமீபத்தில் கெல்லியும், கோடியும் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு இன்பினிட்டி பூல் எனப்படும் நீச்சல் குளத்தில் மிகவும் ஆபத்தான வகையில் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அந்த போட்டோவில், நீச்சல் குளத்திற்கு வெளியே அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் கெல்லியை, நீச்சல் குளத்தில் இருந்தபடி தாங்கி பிடித்திருக்கிறார் கோடி.

    கடும் எதிர்ப்பு:

    கடும் எதிர்ப்பு:

    இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என கேட்டு விளாசியுள்ளனர். மேலும், அது ஏன் எப்போதும் பெண்களை மட்டும் ரிஸ்க் எடுக்க வைக்கிறீர்கள்? என ஒரு சிலரும், ஒருவேளை தவறிவிழுந்து ஏதாவது விபரீதமாகிவிட்டால் என்ன செய்வீர்கள் என சிலரும் காய்ச்சி எடுத்துவிட்டனர்.

    லைக்ஸ் குவியுது:

    லைக்ஸ் குவியுது:

    ஆனால் சுமார் 40,000 பேர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். 2,700 பேர் கமெண்ட் செய்துள்ளனர். இருப்பினும் இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், தம்பதி அப்செட் ஆகிவிட்டது. தாங்கள் நிஜமாகவே அப்படி போஸ் கொடுக்கவில்லை என்றும், சும்மா டிராமா செய்தோம் என்றும் கோடி சமாளித்திருக்கிறார்.

    விளையாட்டு வினையாகலாம்:

    விளையாட்டு வினையாகலாம்:

    இருந்தாலும், போட்டோ போட்டு டோஸ் வாங்கிய தம்பதியை பற்றி தான் இன்ஸ்டாகிராமத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது. நமக்கும் அந்த போட்டோவைப் பார்க்கும் போது சற்று மிரட்சியாகத் தான் இருக்கிறது. ஏனெனில் பல சமயங்களில் விளையாட்டுதான் வினையாகி விடுகிறது என்பதை கெல்லி தம்பதி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    English summary
    One Instagram-famous travel couple is defending what’s been criticized as a “stupid, ridiculous” photo op that some fear could have had a fatal end, insisting that they were safe the entire time and that the image was edited for “dramatization.”
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X