For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்று வாங்கப் போன இடத்தில் எஜமானிக்கு தங்கப் புதையலைப் பரிசளித்த நாய்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ‘நடந்து கொண்டே இருப்போம், அப்போது காலடியில் ஒரு நாணயம் கிடக்கும், அதனை எடுக்கக் குனிந்தால் அருகருகே நாணயங்கள் கொட்டிக் கிடக்கும். தோண்டத் தோண்ட நாணயங்களாக வரும்.. ' நம்மில் பலருக்கும் கட்டாயம் இந்தக் கனவு வந்திருக்கும். கனவில் கண்ட நாணயக்குவியலுக்கே நாம் திக்குமுக்காடிப் போவோம். ஆனால், அதுவே நிஜமானால்.. அப்படித்தான் ஒரு அமெரிக்கத் தம்பதிக்கு நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதி ஒன்று நாயுடன் வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது வழியில் இருந்த மரத்தின் அருகே அவர்களது நாய் குழி ஒன்றைத் தோண்டியுள்ளது.

நாயைத் தேடி போன அவர்கள், அங்குதங்க நாணயப் புதையல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், புதையல் முழுமையையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

புதையல் நாணயங்களை சோதனை செய்த தொல்லியலாளர்கள் கூறும்போது, ‘5, 10 மற்றும் 20 அமெரிக்க டாலர் நாணயங்களாக 1427 தங்க நாணயங்கள் இவர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் 1847 மற்றும் 1894-ம் ஆண்டுகளுக்கிடையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும்'எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாணய தயாரிப்பு கூடத்தில் இருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாகவே தங்கசாலையில் இருந்து கடத்திவந்த சிலர் இவற்றை பிற்கால தேவைக்காக பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களில் பல அரிதானவை என்பதால், அவை ஒவ்வொன்றும் 10 லட்சம் டாலர்கள் வரை விலை போகும் வாய்ப்பும் உள்ளதாக பழங்கால நாணயங்களை வாங்கி விற்கும் சிலர் மதிப்பிட்டுள்ளனர்.

English summary
A couple from northern California were walking their dog when they discovered $10million (£6 million) in gold coins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X