For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண கேக்கில் மணமக்கள் ‘தலை’... அதிர்ந்து போன உறவினர்கள்

Google Oneindia Tamil News

டெக்சாஸ்: திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம்.

காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது.

தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட ரசிகர் தனது திருமண கேக்கை வடிவமைத்த முறையைப் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அப்படி என்ன மாடல் என்று நீங்களும் பாருங்களேன்...

வித்தியாசமான திருமண கேக்....

வித்தியாசமான திருமண கேக்....

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்'கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

அதிர்ச்சி வைத்தியம்...

அதிர்ச்சி வைத்தியம்...

மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் திகிலடைந்து விட்டன்ர்.

மரணம் வரை...

மரணம் வரை...

அதோடு கேக்கின் அருகில், ‘மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை' என்ற வாசகத்தையும் எழுதி வைத்தனர் இந்த வித்தியாசமான தம்பதியர்.

மணப்பெண் தயாரிப்பு....

மணப்பெண் தயாரிப்பு....

இந்தக் கேக்கில் மற்றொரு விஷேஷம் என்னவென்றால், இது மணப்பெண் நதாலேயே கைப்பட தயாரித்தது ஆகும்.

40 மணி நேரம்....

40 மணி நேரம்....

அக்கலையில் வல்லுனரான நதாலே, சுமார் 40 மணிநேரம் செலவிட்டு அதை வெண்ணிலா, சாக்லெட் சுவையில் பட்டர்கிரீம் கொண்டு தயாரித்துள்ளார்.

பாட்டி சொல்லைத் தட்டாதே...

பாட்டி சொல்லைத் தட்டாதே...

மணமக்கள் மற்றும் விருந்தினர்களை இந்த கேக் கவர்ந்தாலும் அவருடைய பாட்டிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.

திகில் பட ரசிகர்....

திகில் பட ரசிகர்....

இந்த வித்தியாச கேக் தயாரிக்கும் யோசனை ஏற்பட்டது குறித்து நதாலே கூறும்போது, ‘கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர ரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தோம். இது அனைவரையும் வியக்க வைத்தது உண்மை' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Every couple dreams of having a killer wedding. These two set their sights on a killer wedding cake. Texas newlyweds David and Natalie Sideserf decided to take the phrase "Till death do us part" to a whole new level by crafting a custom cake to give the line its due. The result was a hyperrealistic cake depicting both of their heads, severed and bleeding on the floor. Their glazed-over, lifeless eyes stare both into the afterlife and at wedding attendees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X