For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீருக்கு அடியில் திருமணம்: கின்னஸ் சாதனை படைத்த 'டைவிங்' தம்பதி

By Siva
Google Oneindia Tamil News

பாங்காக்: ஜப்பானை சேர்ந்த ஹிரோயுகியும், அமெரிக்காவைச் சேர்ந்த சான்ட்ரா ஸ்மித்தும் நீருக்கு அடியில் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

ஜப்பானை சேர்ந்தவர் ஹிரோயோகி யொஷிதா. டைவிங் பயிற்சியாளர். அவருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த டைவிங் பயிற்சியாளரான சான்ட்ரா ஸ்மித்துக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

6 மாத பயிற்சி

6 மாத பயிற்சி

அந்த ஜோடி நீருக்கு அடியில் திருமணம் செய்ய விரும்பினார். இதையடுத்து ஹிரோயுகியும், சான்ட்ராவும் நீருக்கு அடியில் திருமணம் செய்ய 6 மாதங்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர்.

திருமணம்

திருமணம்

கடும் பயிற்சிக்கு பிறகு அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்தின் டிராங் பகுதியில் உள்ள சாங் ஹாங் ஆற்றில் ஆழத்தில் உள்ள குகையில் திருமணம் செய்து கொண்டனர்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

நிலப்பரப்பில் இருந்து 130 மீட்டர் ஆழத்தில் உள்ள இடத்தில் திருமணம் செய்ததற்காக ஹிரோயுகி மற்றும் சான்ட்ரா தம்பதியின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

முத்தம்

முத்தம்

அவ்வளவு ஆழத்தில் உள்ள குகையில் மூச்சுவிடவும் சிரமமான இடத்திலும் ஹிரோயுகி மோதிரம் மாற்றிய பிறகு தனது மனைவி சான்ட்ராவுக்கு முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A wet wedding day would be a disaster for most couples, but an adventurous bride and groom have set a new world record by taking their vows underwater! Hiroyuki Yoshida from Japan and his wife Sandra Smith from US set a new Guinness world record for deepest underwater wedding, tying the knot at 130 metres below the surface in a cave at Song Hong Lake, Trang, Thailand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X