For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நாடுகள்.. அதிகரித்தும் வரும் நாடுகள்.. விவரம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1552 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 1130 பேரும், இங்கிலாந்தில் 545 பேரும், இத்தாலியில் 162 பேரும், மெக்ஸிகோவில் 155 பேரும், இந்தியாவில் 146 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    கொரோனா பரவலை கட்டுபடுத்தலாம்... சீன ஆய்வகம் அறிவிப்பு

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 49,82,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,24,535 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.1,956,361 பேர் குணம் அடைந்துள்ளனர். 27,01,979 பேர் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    COVID-19 continues to spread fast in brazil , india, us

    இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,570,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93533 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1552 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 299,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 9263 பேர் தொற்றில் பாதிக்கப்பட்டனர். ஆனால் உயிரிழப்பு என்பது இதுவரை 2837 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் 115 பேர் உயிரிழந்தனர்.

    உலக அளவில் 1 லட்சம் பேருக்கு 4.1 கொரோனா நோயாளிகள் மரண விகிதம் - இந்தியாவில் 0.2மட்டுமே!உலக அளவில் 1 லட்சம் பேருக்கு 4.1 கொரோனா நோயாளிகள் மரண விகிதம் - இந்தியாவில் 0.2மட்டுமே!

    3வது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் 278803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 69 பேர் மட்டுமே உயிரிழந்தனர். புதிதாக கொரோனா பாதிப்பும் 615 ஆக குறைந்துள்ளது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 27778 பேர் உயிரிழந்துள்ளனர்.

    4வது இடத்தில் உள்ள பிரேசிலில் 271,885 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17,983 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.நேற்று ஒரு நாளில் மட்டும் 1130 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 248,818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 35,341 பேர் உயிரிழந்துவிட்டனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 545 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1552 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 1130 பேரும், இங்கிலாந்தில் 545 பேரும், இத்தாலியில் 162 பேரும், மெக்ஸிகோவில் 155 பேரும், இந்தியாவில் 146 பேரும், பெரு நாட்டில் 125 பேரும், ரஷ்யாவில் 115 பேரும், ஜெர்மனியில் 70 பேரும், கனடாவில் 70 பேரும், ஸ்பெயினில் 69 பேரும், ஈரானில் 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    which countries fastly relief from covid 19 , which countries fastly growth covid 19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X