For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை பாருங்க

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா பிரச்சனைகளுக்கு நடுவில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சீனாவில் கொரோனாவிற்கு பின் மழலை குழந்தைகள் எப்படி பள்ளிக்குள் வருகிறார்கள் என்பதை பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

Recommended Video

    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை பாருங்க - வீடியோ

    கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் 55 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.5லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    covid 19 precautions in schools at china , how childs going schools, see the video

    உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர். உலகமே கொரோனாவில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்து வருகிறது. ஆனால் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா அதில் இருந்து வெளியே வந்து வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டது.

    பேருந்துகள், ரயில் சேவைகள், விமான சேவைகள் என அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. பள்ளிகளும் கடந்த மாதம் திறக்கப்பட்டுவிட்டது. மழலையர் பள்ளிகளையும் சீனா திறந்துவிட்டது. சீனாவில் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் சீனா கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இன்று வரையிலும் கைவிடவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன் மக்களை வழி நடத்தி வருகிறது.

    3 நாள் சாப்பிட்டால் கொரோனா வராதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அந்த ஹோமியோபதி மருந்துக்கு செம டிமாண்ட் 3 நாள் சாப்பிட்டால் கொரோனா வராதுன்னு சொன்னாலும் சொன்னாங்க.. அந்த ஹோமியோபதி மருந்துக்கு செம டிமாண்ட்

    அதில் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தாய் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறுவன் தான் அணிந்து இருக்கும் மாஸ்கை வெளியில் உள்ள குப்பை தொட்டியில் போடுகிறார். அதன்பிறகு ஒரு ஆசிரியர் உதவுகிறார். அதன்பிறகு அங்கு உள்ளே சென்று சானிட்டைசரால் கைகளை கழுவுகிறான் குழந்தை. அதன்பிறகு கிருமி நாசினியால் குழந்தையின் துணி மற்றும் பை ஒரு சில வினாடிகள் சுத்தம் செய்யப்படுகிறது. இப்படியாக வீடியோ செல்கிறது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

    English summary
    how china win covid 19: covid 19 , precautions in schools at china , how childs going schools, see the video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X