For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒத்துழைப்பு வேண்டும்".. கொரோனா வேக்சினுக்காக சமாதானத்திற்கு முயலும் சீனா.. கெத்து காட்டும் இந்தியா!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனாவிற்கு எதிரான வேக்சின் உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பு வேண்டும் என்று சீனா கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது. இந்தியாவுடன் மோதலை கடைபிடித்து வந்த சீனா தற்போது வேக்சின் உற்பத்திக்காக இந்தியாவுடன் நெருக்கமாக செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக இரண்டு நாட்களுக்கு முன் இணையவழி மாநாடு நடத்தப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தற்சார்பு பொருளாதாரம் குறித்து பேசினார். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

 "எமர்ஜென்சி ஒப்புதல்".. களமிறங்கும் ஃபைசர் கொரோனா வேக்சின்.. ஆனால்.. இந்தியாவிற்கு வருவதில் சிக்கல்!

 என்ன பேசினார்

என்ன பேசினார்

இந்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், கொரோனா வேக்சின் உற்பத்தியில் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சீனாவின் நிறுவனங்கள் பல கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம்.

எப்படி

எப்படி

சில மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜிங்பிங் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பு வேண்டும் என்று சீனா வெளிப்படையாக அறிவித்துள்ளது.

வெளிப்படையாக அறிவிப்பு

வெளிப்படையாக அறிவிப்பு

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை, கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். எல்லோருக்கும் கொரோனா வேக்சின் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.

எல்லோருக்கும் வேண்டும்

எல்லோருக்கும் வேண்டும்

எல்லோருக்கும் குறைந்த விலையில் வேக்சின் கிடைக்க வேண்டும். இந்தியாவிற்கு இதற்கான ஒத்துழைப்பை சீனா வழங்கும். இந்தியாவும் உற்பத்தி மற்றும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சர்வதேச போராட்டத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. இந்தியாவுடன் மோதலை கடைபிடித்து வந்த சீனா தற்போது வேக்சின் உற்பத்திக்காக இந்தியாவுடன் நெருக்கமாக செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

எப்படி

எப்படி

உலகம் முழுக்க கொரோனா வேக்சினை ஏற்றுமதி செய்யும் உற்பத்தி திறனை இந்தியா கொண்டு உள்ளது. நோவாவேக்ஸ், ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா வேக்சின், கோவாக்சின் போன்ற தடுப்பு மருந்துகளை இந்தியாவில்தான் உற்பத்தி செய்ய உள்ளனர். வேக்சின் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளதால், இந்தியாவின் ஒத்துழைப்பை தற்போது சீனா கோரியுள்ளது.

English summary
Covid 19 Vaccine: China asks for cooperation from India on production.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X