For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் குவாங்சோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கழிவறையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கழிவு நீர் வடிகால் குழாய்கள் வழியாக மேல்நோக்கி கொரோனா கிருமி பரவி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி சொல்ல காரணம், ஹாங்காங்கில் 17 வருடம் முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த குடியிருப்பில் இருந்த பலர் இறந்துள்ளனர்..

சீனாவின் குவாங்சோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நீண்ட காலமாக காலியாக இருந்தது. அங்குள்ள கழிவறையில் SARS-CoV-2 இன் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தகவலை சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வில் தெரிவித்தனர். அசுத்தமான குளியலறை, இந்த வீட்டிற்கு மேல் குடியிருப்பில் வசிக்கும் ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு கொரோனா பரவிய விதம் குறித்து ஆய்வு செய்த போது தான் கொரோனா கிருமி நீண்ட காலமாக பூட்டப்பட்டு கிடந்த வீட்டின் கழிவறை வழியாக பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில்.. நாகை, கடலூரை கலக்கிய எடப்பாடியார்.. அதிரடி ஆய்வுகள்.. திட்ட உதவிகள்.. மெகா திட்டங்கள்!ஒரே நாளில்.. நாகை, கடலூரை கலக்கிய எடப்பாடியார்.. அதிரடி ஆய்வுகள்.. திட்ட உதவிகள்.. மெகா திட்டங்கள்!

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

அந்த கழிப்பறையில் உள்ள கழிவு குழாய்கள் வழியாக வைரஸ் பரவ முடியுமா என்பதை அறிய விஞ்ஞானிகள் "ஆன்-சைட் ட்ரேசர் சிமுலேஷன் பரிசோதனை" நடத்தினர். கோவிட் -19 தொற்றுக்கு மேலே 10 மற்றும் 12 நிலைகளில் குளியலறையில் ஏரோசோல்கள் எனப்படும் அத்தகைய துகள்களை அவர்கள் கண்டறிந்தனர். முன்னதாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றுகள் இருப்பதை உறுதி செய்தனர். மலத்திலிருந்து SARS-CoV-2 நிறைந்த துகள்கள் பிளம்பிங் வழியாக தங்கள் வீடுகளுக்குள் சென்றுவிட்டதாக அந்த மக்களிடம் இப்போது கவலையை அதிகரித்துள்ளது.

மிகவும் மோசமான பாதிப்பு

மிகவும் மோசமான பாதிப்பு

இந்நிலையில் இந்த புதிய ஆய்வு அறிக்கை கிட்டத்தட்ட சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்காங்கின் அமோய் கார்டன்ஸ் தனியார் வீட்டுத் தோட்டத்தில் நடந்த ஒரு தொற்றை நினைவூட்டுகிறது, 329 குடியிருப்பாளர்களுக்கு சார்ஸ் நோய் அங்கு உறுதி செய்யப்பட்டது. அங்கு கழிவுநீர் குழாயின் வழியாகவே சார்ஸ் பரவி இருந்தது. இதன் காரணமாகவே 42 குடியிருப்பு வாசிகள் அந்த பிளாட்டில் இறந்தனர், சீனாவில் 2003ல் SARS நோய் மிகவும் அழிவுகரமான சமூக வெடிப்பாக பார்க்கப்பட்டது. இதுவும் ஒரு கொரோனா வைரஸால் ஏற்பட் நோய் தான். இப்போது வந்திருப்பது அதன் வெர்சன் 2.0 என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் மோசமான பாதிப்பு

மிகவும் மோசமான பாதிப்பு

இந்நிலையில் இந்த புதிய ஆய்வு அறிக்கை கிட்டத்தட்ட சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்காங்கின் அமோய் கார்டன்ஸ் தனியார் வீட்டுத் தோட்டத்தில் நடந்த ஒரு தொற்றை நினைவூட்டுகிறது, 329 குடியிருப்பாளர்களுக்கு சார்ஸ் நோய் அங்கு உறுதி செய்யப்பட்டது. அங்கு கழிவுநீர் குழாயின் வழியாகவே சார்ஸ் பரவி இருந்தது. இதன் காரணமாகவே 42 குடியிருப்பு வாசிகள் அந்த பிளாட்டில் இறந்தனர், சீனாவில் 2003ல் SARS நோய் மிகவும் அழிவுகரமான சமூக வெடிப்பாக பார்க்கப்பட்டது. இதுவும் ஒரு கொரோனா வைரஸால் ஏற்பட் நோய் தான். இப்போது வந்திருப்பது அதன் வெர்சன் 2.0 என்று அழைக்கப்படுகிறது.

சார்ஸ் போல் பரவுகிறது

சார்ஸ் போல் பரவுகிறது

தற்போதைய குவாங்சோ கழிவறையில் கண்டறியப்பட்ட கொரோனா பரவல் 2003 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் அமோய் கார்டன்ஸ் SARS வெடித்ததன் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போகிறது என்று சீனா சி.டி.சி சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் தொகை சுகாதார ஆய்வகத்தின் விஞ்ஞானி சாங் டாங் மற்றும் அவரது குழுவினர் எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரமாக விஞ்ஞானிகள் குழு சுகாதார குழுவால் வெளியிடப்படத தரவை மேற்கோள் காட்டியுள்ளது.

கழிவறை மூலம் பரவும்

கழிவறை மூலம் பரவும்

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகள் பகிரப்பட்ட கழிவு நீர் அமைப்பு மூலம் இணைக்கப்படலாம் என்றும் தொற்றுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச ஆய்வகத்தின் இயக்குனர் லிடியா மொராவ்ஸ்கா கூறியிருக்கிறார். திடப்பொருட்களும் திரவங்களும் வலையமைப்பிலிருந்து இறங்கும்போது, ​​கழிவுநீர் வாயுக்கள் - அவற்றின் வாசனையால் பெரும்பாலும் கண்டறியக்கூடியவை - போதுமான நீர் இல்லாத நிலையில் சில நேரங்களில் குழாய்களின் வழியாக காற்றின் மேல் எழும்பும் என்று மொராவ்ஸ்கா கூறினார்.

சுவாச துளிகள் மூலம் பரவும்

சுவாச துளிகள் மூலம் பரவும்

பொதுவாக SARS-CoV-2 (கொரோனா நோய்) சுவாச துளிகளால் பரவுகிறது - உமிழ்நீர் சிதறல் அல்லது மூக்கிலிருந்து வெளியேற்றப்படுவது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், தொற்றுநோய் பரவ தொடங்கிய முதல் வாரங்களிலிருந்து, சீனாவின் விஞ்ஞானிகள் கோவிட் -19 நோயாளிகளின் மலத்தில் உள்ள SARS-CoV-2 வைரஸும் பரவுவதில் பங்கு வகிக்கக்கூடும் என்று கூறி வருகிறார்கள்.

1 மீட்டர் உயரும் பரவும்

1 மீட்டர் உயரும் பரவும்

குவாங்டாங் மாகாணத்தில் கொரோனா வைரஸுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 73 நோயாளிகளை பிப்ரவரியில் ஆய்வு செய்ததில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலம் காரணமாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் கழிவறை ஃப்ளஷ்களில் மலத்தில் இருக்கும் கிருமிகள் நிறைந்த ஏரோசோல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்று சீனா சிடிசி விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்தத் துகள்கள் நீண்ட காலமாக காற்றில் இருக்கக்கூடும் என்றும். 1 மீட்டர் (3 அடி) க்கும் அதிகமான தூரங்களில் பரவி இருக்கும, குறிப்பாக வரையறுக்கப்பட்ட, மோசமாக காற்றோட்டம் உள்ள இடங்களில் பரவலாம் என்றும் கூறினார்கள்.

முறையாக பராமரிக்காவிட்டால்

முறையாக பராமரிக்காவிட்டால்

17 வருடம் முன்பு ஹாங்காங்கில் உளள அமோய் கார்டன்ஸ் குடியிருப்பில் SARS நோயாளியின் குளியலறையிலிருந்து சூடான, ஈரமான காற்று மலம் மற்றும் சிறுநீரில் வைரஸ் அதிகமாக வெளியேறியது. எனவே கழிப்பறைகள் தினசரி பயன்பாட்டில் உள்ளதால் அதை முறையாக பராமரிக்காவிட்டால், மலம் மூலம் காற்றில் பரவல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று சீனாவின் சிடிசி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கழிவறையால் பரவியது

கழிவறையால் பரவியது

முன்னதாக மார்ச் மாத இறுதியில் மிலனில் இருந்து தென் கொரியாவுக்கு சென்ற விமானத்தில் SARS-CoV-2 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர் பகிரப்பட்ட கழிப்பறை மூலம் நோய் பரவியதை ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். .28 வயதான பெண் அந்த விமானத்தில் பயணித்த ஒரு வாரத்திற்குப் பிறகு கோவிட் -19 அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் விமானத்தில் கழிப்பறையைப் பயன்படுத்தி இருந்திருக்கிறார். N95 முககவசத்தை அணிந்திருந்தார். எனினும் தொற்று பரவி உள்ளது என்று தெரிவித்தனர். தற்போதைய ஆய்வில் வந்த தகவலின் படி கோவிட் -19 நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், மருத்துவமனை செவிலியர் நிலையங்களில் காற்றில், ஏர் அவுட்லெட் வென்ட்கள் மற்றும் பல தளங்களில் SARS-CoV-2 மரபணு பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
China Coronavirus: The contaminated bathroom was directly above the home of five people confirmed a week earlier to have Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X