For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"உங்களுக்கு எல்லாம் எவ்ளோ தைரியம்?" உலக தலைவர்களை நடுங்க வைத்த துன்பர்குக்கு வந்த.. திடீர் சந்தேகம்!

தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கிரேட்டா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்: "உங்களுக்கு எல்லாம் எவ்ளோ தைரியம் இருக்கும்" என்று உலக தலைவர்களை பார்த்து கேள்வி கேட்டாரே கிரேட்டா, ஞாபகம் இருக்கா? அவருக்கு இருமல் வருகிறதாம்.. உடம்பெல்லாம் நடுங்குது, தொண்டை வலிக்குது.. அநேகமாக கொரானா தாக்கியிருக்குமோ என்று அவரே தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    கிரேட்டா துன்பர்க்.. ஒரு சமூக ஆர்வலர்.. பருவநிலை மாற்றம் குறித்து போராடி வருபவர்.. ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்... 17 வயதுதான்.. ஐநா சபையில் கடந்த வருடம் செப்டம்பர் 23-ம் தேதி நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இவர் கலந்து கொண்டார்.

    அன்றைய தினத்தில், அங்கு அமர்ந்திருந்த உலகநாட்டு தலைவர்களை நோக்கி "பருவநிலை மாற்றத்தால் நாம எல்லாருமே பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்க பணம், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" என்று முழங்கினார்.

    ஆவேச உணர்வு

    ஆவேச உணர்வு

    அப்போது கிரேட்டாவின் ஆவேச உணர்வும், அங்கு உட்கார்ந்திருந்த டிரம்பை பார்த்த வெறுப்பு பார்வையையும் யாராலும் மறக்க முடியாது. இதற்கு பிறகு உலக அளவில் அனைவராலும் பேசப்படும் நபராக உருவெடுத்தார். இவருக்குதான் இப்போது ஒரு பிரச்சனை வந்துள்ளது..10 நாளைக்கு முன்பு கிரேட்டா தன்னுடைய அப்பாவுடன் பெல்ஜியத்துக்கு சென்றிருக்கிறார்.

    ஐரோப்பிய நாடு

    ஐரோப்பிய நாடு

    கொரோனா வைரஸ் வேகமெடுக்கும் ஐரோப்பிய நாடு அது... 10 நாளைக்கு பிறகு சுவீடன் திரும்பினார்... வந்தவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. இதனால் தனக்கு வந்த அறிகுறிகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார் கிரேட்டா.. அதில், "எனக்கு இருமல் வருது.. தொண்டை கரகரன்னு இருக்கு.. உடல் நடுக்கம் இருக்கு.. கொரோனா வைரஸ் அறிகுறிகள் போல இருக்கு.

    தொற்று

    தொற்று

    ஆனா இன்னும் டெஸ்ட் எதுவும் செய்து கொள்ளவில்லை.. இனிமேல்தான் டெஸ்ட் செய்யணும்.. மத்திய ஐரோப்பாவில் இருந்து வந்த பிறகு இப்படி ஆகிவிட்டது.. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இப்போதைக்கு என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன்.. இப்போ ஓரளவுக்கு பரவாயில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    விழிப்புணர்வு

    இதையடுத்து, அப்பாவும், மகளும் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அத்துடன், "எல்லாரும் முடிந்த அளவு வீட்டிலேயே இருங்கள்... சமூக விலகலை கடைபிடியுங்கள்.. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைவரும் உதவுங்கள்" என்றும் ஆன்லைனிலேயே தன்னுடைய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.

    English summary
    covid19: Greta Thunberg suffered with coronavirus symptoms
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X