For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன நடக்குது.. சுருண்டு மடியும் உயிர்கள்.. தீயாய் பரவும் கொரோனா.. கட்டுப்படுத்த திணறும் ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

Google Oneindia Tamil News

மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளுக்கே நேரம் சரியில்லை போலும். சீனா, இத்தாலி, ஈரானைத் தொடர்ந்து இப்போது ஸ்பெயின் நாடும் கொரோனாவைரஸ் பாதிப்பில் சிக்கி தவிக்க ஆரம்பித்துள்ளது.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    ஐரோப்பிய நாடுகள்தான் கொரோனாவைரஸுக்கு அதிக விலையைக் கொடுத்து வருகின்றன. பாதிப்பை ஏற்படுத்திய சீனா கூட மூவாரியத்து சொச்சம் உயிரிழப்புடன் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. ஆனால் இத்தாலி ஆறாயிரத்துக்கும் மேலானோரை பறி கொடுத்து தொடர்ந்து தவித்து வருகிறது.

    மறுபக்கம் ஈரானும் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது... இதோ இப்போது ஸ்பெயினும் சிக்கி உயிர் பலி எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

    உபகரணங்கள்

    உபகரணங்கள்

    இதற்கிடையே, ஸ்பெயின் நாட்டு புதிய புகார்களைக் கிளப்பியுள்ளனர். அதாவது சிகிச்சை அளித்து வரும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை, கொடுப்பதில்லை என்ற புகார்தான் இது. இதே புகார்தான் தமிழகத்திலும் தற்போது எழுந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் சந்திரசேகர் கூட இந்த பிரச்சினையை கிளப்பிய காரணத்தால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் அங்கு எந்த அளவுக்கு வேகமாக பரவுகிறது என்பதற்கு இது ஒரு சின்ன சாம்பிள்தான்.. நாட்டில் உள்ள மொத்த டாக்டர்களையும் தற்போது கொரோனாவைரஸ் சிகிச்சையில் ஸ்பெயின் அரசு ஈடுபடுத்தியுள்ளதாம். இதனால் டாக்டர்கள், நர்சுகள் என அனைவருமே ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் வேலை பார்க்கிறார்களாம்.

    லாக் டவுன்

    லாக் டவுன்

    ஐரோப்பாவிலேயே இத்தாலிக்கு அடுத்து அதிக பாதிப்பை சந்தித்துள்ள நாடு இத்தாலிதான். மார்ச் 14ம் தேதி முதல் இந்த நாட்டில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு குறைவயில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே போகிறது.. ஸ்பெயினில் இதுவரை 3400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது சீனாவை விட அதிகமாகும்.

    கல்லறைகள்

    கல்லறைகள்

    மாட்ரிட் நகர் பகுதியில் மட்டும் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடுத்தடுத்து பிணங்கள் விழுகின்றன. இறுதிச் சடங்கு நடத்தலாம் என்றால் கல்லறைகளும் கூட்டமாக காணப்படுகின்றன.. இதனால் ஸ்பெயின் நாடே தத்தளித்து போயுள்ளது. தற்காலிக கல்லறைகள் பல அடுத்தடுத்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல ஊர்களில் மாநாட்டு அரங்கங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி வருகின்றனர்.

    தொற்று நோய்

    தொற்று நோய்

    இதற்கிடையே, சுகாதாரப் பணியாளர்கள் பலருக்கும் கூட நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 5500 சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதாம்... இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்பெயின் அரசு விழித்துக் கொண்டுள்ளது... ஸ்பெயின் மக்கள் ஆரம்பத்திலேயே சுதாரிக்கவில்லை.. அதனால்தான் இந்த பாதிப்பு என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது... அதாவது ஸ்பெயின் அரசு இந்த நோயின் அபாயம் குறித்து மக்கள் விளக்கியபோதும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

    அவசரம்

    அவசரம்

    தனிமைப்படுத்தலின் அவசரத்தையும், முக்கியத்துவத்தையும் அவர்கள் புறம் தள்ளியுள்ளனர். அதை சரியாக கடைப்பிடிக்கவில்லை. இதுதான் அவர்களை இன்று பெரும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது... எப்படி இத்தாலிக்காரர்கள் அலட்சியமாக இருந்தனரோ அதே போலத்தான் ஸ்பெயின் மக்களும் சீரியஸ்னஸ் இல்லாமல் இருந்துள்ளனர்... எங்களால் முடியும், எங்களால் சமாளிக்க முடியும்.. எங்களை எதுவும் செய்ய முடியாது என்ற அலட்சிய மனோபாவம்தான் ஸ்பெயினின் இன்றைய நிலைக்குக் காரணம் என்கிறார்கள்.

    English summary
    covid19: spain overtakes china death count due to coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X