For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் நொறுங்கி கிடக்கிறது பறக்கும் தட்டு.. நாசா எடுத்த நச் போட்டோ!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் மீது பறக்கும் தட்டு போன்ற பொருள் விழுந்து கிடக்கும் போட்டோவை நாசா எடுத்தனுப்பியுள்ளது.

நாசா சமீபத்தில் எடுத்தனுப்பிய செவ்வாய் கிரக போட்டோவில், ஒரு மர்ம பொருள் தென்படுவது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதை உற்று நோக்கினால், ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் பறக்கும் தட்டை போன்ற தோற்றத்தில் உள்ளதை கண்டு விஞ்ஞானிகள் வியந்தனர்.

'Crashed UFO' resembles famous Star Wars ship

"பறக்கும் தட்டு உடைந்து விழுந்ததை போன்ற தோற்றம் கொண்ட கருப்பு பொருளை பார்த்தேன்" என்று கூறுகிறார் ஸ்காட் சி.வாரிங். பறக்கும் தட்டு பற்றிய எழுத்தாளர் இவர்.

இந்த பறக்கும் தட்டு சுமார் 3 மீட்டர் அளவுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார். எனவே, இந்த பறக்கும் தட்டில் மிகக்குறைந்த அளவிலான ஏலியன்கள் பயணித்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக உள்ளது.

சமீபத்தில் பறக்கும் தட்டில் மார்பகங்களும், நீண்ட தலைமுடியும் கொண்ட பெண்மணி செவ்வாய் கிரகம் மீது பறந்து சென்றதாக ஏலியன் ஆய்வாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
If you thought Star Destroyers were only found in Star Wars flicks, you may be wrong. A photo taken by NASA's Mars Curiosity Rover shows an object that, to some UFO lovers, looks like the same warships seen on the big screen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X