For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதீனா விமானம் நிலையத்தில் சக்கரம் இல்லாமல் தரையிறங்கிய விமானம்- 29 பேர் காயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதீனா: சவுதிய அரேபியாவின் மதீனா நகர விமான நிலையத்தில் பின் பக்க சக்கரங்கள் இல்லாமல் தரையிறங்கியது செளதி அரேபியன் ஏர்லைன் விமானம். இதில் 29 பயணிகள் காயம் அடைந்தனர்.

இந்த விமானம் ஈரானில் இருந்து நேற்று சுமார் 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு மஸ்கட் வந்தது. பின்னர் மீண்டும் மதீனாவுக்குக் கிளம்பியது. மதீனாவில் தரையிறங்க முயன்றபோது அதன் பின்பக்க சக்கரங்களில் வலது புற சக்கரங்கள் கீழே இறங்கவில்லை.

saudi arabian airlines

இதனால் இடதுபுற பின் சக்கரங்கள், முன் புற சக்கரங்களுடன் மதீனா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. இதில் அந்த விமானம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 29 பயணிகள் காயமடைந்தனர்.

இதனை அடுத்து மதீனா விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

English summary
Twenty-nine passengers were injured when a Saudia flight suffered a landing gear failure and was forced to make an emergency landing in Madinah early Sunday, aviation officials said.Flight SV2841, coming from the Iranian city of Mashhad, had 315 passengers on board, including 16 crew members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X