For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரெடிட் கார்டு மோசடி: மொரீஷியஸின் முதல் பெண் அதிபர் ஆமீனா ராஜினாமா

By Siva
Google Oneindia Tamil News

போர்ட் லூயிஸ்: கிரெடிட் கார்டு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக மொரீஷியஸின் முதல் பெண் அதிபரான ஆமீனா கரிப் ஃபகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மொரீஷியஸின் முதல் பெண் அதிபர் ஆமீனா கரிப் ஃபகீம். அவருக்கு பிளானட் எர்த் இன்ஸ்டிடியூட் என்ற லண்டனை சேர்ந்த அமைப்பு அரசு வேலையாக பயணம் செய்யும்போது பயன்படுத்த கிரெடிட் கார்டு ஒன்றை கடந்த 2016ம் ஆண்டு வழங்கியது.

அரசு வேலை தவிர்த்து தங்கள் அமைப்பின் வேலைக்காகவும் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தது.

பயணம்

பயணம்

ஆமீனா கரிப் ஃபகிம் பிளானட் எர்த் இன்ஸ்டிடியூட் கொடுத்த கிரெடிட் கார்டை வைத்து ரூ. 16.9 லட்சத்திற்கு விலை உயர்ந்த நகைகள், துணிகள் வாங்கியுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

அரசு வேலைக்காக கொடுத்த கிரெடிட் கார்டை ஆமீனா தனது சொந்த விஷயத்திற்காக பயன்படுத்தியதை உள்ளூர் செய்தித்தாள் ஒன்று அம்பலப்படுத்தியது. இதையடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது.

பிரச்சனை

பிரச்சனை

ஆமீனாவின் கிரெடிட் கார்டு மோசடி குறித்த தகவல் வெளியான பிறகு அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து ஆமீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா

ராஜினாமா

ஆமீனா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். வரும் 23ம் தேதி அவர் தனது அலுவலகத்தை காலி செய்கிறார். மக்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை பார்க்க விரும்பாமல் ஆமீனா ராஜினாமா செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் யூசுப் முகமது தெரிவித்துள்ளார்.

English summary
Mauritius' first woman president Ameenah Gurib-Fakim has resigned her post over credit card fraud issue. She submitted the resignation letter on saturday and will leave the office on march 23rd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X